அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்வதற்கு முன் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய காரை பற்றிய முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் எலக்ட்ரிக் காராக இவி6 க்ராஸ்ஓவர் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் அறிவித்தப்படி, இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் ரூ.3 லட்சம் என்கிற டோக்கன் தொகையுடன் துவங்கப்பட்டுள்ளன.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

புதிய இவி6 காரை விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள கியாவின் 15 ஷோரூம்களின் மூலமாகவோ அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் வாயிலாகோ முன்பதிவு செய்து கொள்ளலாம். கியா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக வருகிற ஜூன் 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

அப்போதுதான் இந்த காருக்கான அதிகாரப்பூர்வ இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்படும். இந்தியாவில் முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இவி6 சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதாவது கார் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. இதனால் இறக்குமதி வரி அதிகம் இருக்கும் என்பதால், இதன் விலையினை கணிசமாக அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

இவி6-ஐ இந்தியாவில் அசெம்பிள் செய்வது குறித்து தற்போதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் கியா நிறுவனம் வெளியிடவில்லை. இதுவே மிகவும் குறைவான எண்ணிக்கையில், வெறும் 100 இவி6 கார்களை மட்டுமே முதற்கட்டமாக கியா விற்பனைக்கு கொண்டுவருவதற்கு காரணமாகும். ஹூண்டாயின் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் கியா இவி6 என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

ஹூண்டாய் குழுமத்தின் பிரத்யேகமான எலக்ட்ரிக் வாகன இயக்குத்தளமான எலக்ட்ரிக்-க்ளோபல் மாடுலர் ப்ளாட்ஃபாரம் (E-GMP)-ஐ அடிப்படையாக கொண்டே இந்த இரு தென்கொரிய எலக்ட்ரிக் கார்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் இவி6 எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள 77.4kWh பேட்டரி தொகுப்பு ஆனது அதிகப்பட்சமாக 528கிமீ வரையில் காரை இயக்கி செல்லக்கூடியதாக உள்ளது.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

இந்தியாவில் கியா இவி6 மாடலானது ஜிடி மற்றும் ஜிடி லைன் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ஜிடி வேரியண்ட் பின்-சக்கர-ட்ரைவ் அமைப்பை கொண்டதாகவும், ஜிடி லைன் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பை கொண்டதாகவும் உள்ளது. இதில் ஜிடி வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 229 பிஎச்பி & 350 என்எம் டார்க் திறன் வரையிலும், ஜிடி லைன் வேரியண்ட்டில் 347 பிஎச்பி & 605 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

இவி6 ஆனது 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது. அதிகப்பட்சமாக இந்த எலக்ட்ரிக் காரில் மணிக்கு 192kmph வேகத்தில் பயணிக்கலாம். இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய இரு விதமான விரைவு சார்ஜர் தேர்வுகள் 50 கிலோவாட்ஸ் & 350 கிலோவாட்ஸ் திறன்களில் வழங்கப்பட உள்ளன. விற்பனையில் இந்த கியா மாடலுக்கு வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 உள்ளிட்டவை போட்டியாக விளங்கும்.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

கியா இவி6-இன் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.60 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் நடப்பு 2022ஆம் வருடத்தில் அறிமுகமாகும் முதல் எலக்ட்ரிக் கார் இவி6 ஆகும். இவி6-இன் அறிமுகம் குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான டா-ஜின் பார்க் கருத்து தெரிவிக்கையில், "இந்திய ஆட்டோமொபைல் துறை மெல்ல மெல்ல மாற்றம் அடைந்து வருகிறது.

அறிவித்தப்படி... கியா இவி6-க்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகையாக ரூ.3 லட்சம்!

இந்த மாற்றத்தில் கியா முன்னிலை வகிக்கிறது. எங்களின் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் நாங்கள் மீண்டும் மீண்டும் அதை நிரூபித்துள்ளோம். அவை பூர்த்தி செய்யப்படாதவை மட்டுமல்ல, இந்தியர்களின் உணரப்படாத தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. நாட்டில் இவி6-இன் அறிமுகம் அதையே மீண்டும் வலியுறுத்துகிறது" என்றார்.

Most Read Articles
English summary
Kia india opens bookings for ev6
Story first published: Thursday, May 26, 2022, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X