புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

கியா இவி6 எலக்ட்ரிக் காரின் வருகையினை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய டீசர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

இந்திய சந்தையில் மிக விரைவில் உலகளவில் பிரபலமான கார் மாடல்கள் அறிமுகமாக தயாராகி வருகின்றன. இதில் முக்கியமானது, கியா இவி6. சர்வதேச சந்தைகளில் பல கார் விருதுகளை அள்ளியுள்ள இந்த கியா தயாரிப்பு நடப்பு மே மாதம் முடிவதற்குள்ளாக நமது நாட்டிலும் விற்பனைக்குவர உள்ளது.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

ஆனால் இதன் அறிமுகம் ஒரு யூகமாகவே யூகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இவி6 -இன் வருகையினை அதிகாரப்ப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில் புதிய டீசர் வீடியோ ஒன்றினை கியா நிறுவனம் தனது யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. வெறும் 11 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவில், "கியா இவி6 விரைவில் வருகிறது" என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றப்படி இதன் அறிமுகம் எப்போது?, புக்கிங் எப்போது துவங்கும்? என்பவை குறித்த எந்த விபரமும் இந்த முதல் டீசர் வீடியோவில் குறிப்பிடப்படவில்லை. இவற்றை அடுத்தடுத்த டீசர் வீடியோக்களில் எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய இவி6 எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் வருகிற மே 26ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளனவாம்.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

2022ஆம் ஆண்டிற்கான சிறந்த ஐரோப்பிய கார் விருதை சொந்தமாக்கியுள்ள கியா இவி6 இந்தியாவில் சிபியூ முறையில், அதாவது முழுவதுமாக வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக, இந்த எலக்ட்ரிக் காரின் விலையினை நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் சற்று அதிகமாகவே கியா நிர்ணயிக்கும்.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

அதிகாரப்பூர்வ எக்ஸ்-ஷோரூம் விலைகளுடன் இவி6 மாடலின் இந்திய அறிமுகம் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா பிராண்டில் இருந்து நம் நாட்டு சந்தையில் தற்போதுவரையில் எந்தவொரு எலக்ட்ரிக் காரும் விற்பனையில் இல்லை. ஆதலால் இவி6 மாடல் கியாவிற்கு இந்திய சந்தையில் புதிய விற்பனை பயணத்தை துவங்கி வைக்கவுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் ஏற்கனவே சோதனை ஓட்டங்களில் உள்ளது.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

சிபியூ முறையில் விற்பனை & அதிக விலையை பெற்றுவரவுள்ளது என்றாலும், இவி6 எலக்ட்ரிக் கார்கள் மிக விரைவாகவே விற்று தீர்ந்துவிடும் என தெரிகிறது. ஏனெனில் நடப்பு 2022ஆம் ஆண்டில் வெறும் 100 இவி6 எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகளை மட்டுமே கியா ஏற்கவுள்ளதாம். இதனால் நாட்டின் மெட்ரோ நகரங்களில் உள்ள கியா டீலர்ஷிப் ஷோரூம்களில் மட்டுமே இவி6-க்கான முன்பதிவுகள் ஏற்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

சர்வதேச சந்தைகளில் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச், நீண்ட ரேஞ்ச் & ஜிடி என 3 விதமான ட்ரிம் நிலைகளில் கியா இவி6 விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் வேரியண்ட்டில் 58kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இது 2-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனையும், 4-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் 235 பிஎஸ் மற்றும் 605 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

நீண்ட-ரேஞ்ச் வெர்சனில் சற்று பெரிய 77.4 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இது 2-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் 228 பிஎஸ் & 350 என்எம் டார்க் திறனையும், 4-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் 325 பிஎஸ் & 605 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்குகிறது. 3வது ஜிடி வெர்சனிலும் இதே 77.4 kWh பேட்டரி தொகுப்புதான் பொருத்தப்படுகிறது என்றாலும், இந்த வேரியண்ட்டில் சற்று கூடுதலாக 585 பிஎஸ் மற்றும் 740 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

இவி6-இன் இந்த டாப் வேரியண்ட் 4-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் மட்டுமே வெளிநாட்டு சந்தைகளில் கிடைக்கிறது. எங்களுக்கு தெரிந்தவரையில் டாப் ஜிடி வேரியண்ட்டில் மட்டுமே இவி6 மாடலை இந்தியாவில் கியா நிறுவனம் களமிறக்கும். டாப் வேரியண்ட் என்பதால் இதன் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.60 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் கியா இவி6 பிரீமியம் தர எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு தற்போதைக்கு எந்த போட்டி மாடலும் இல்லை.

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் காரை புக் செய்ய ரெடியாகுங்கள்!! முன்பதிவு துவங்கும் தேதி வெளிவந்தது!

ஆனால் கியாவின் கூட்டணி நிறுவனமும், மற்றொரு தென்கொரிய நிறுவனமுமான ஹூண்டாயின் ஐயோனிக் 5 போட்டியாக விளங்கவுள்ளது. ஏனெனில் கியாவை போல் ஹூண்டாய் மோட்டார்ஸும் அடுத்ததாக இந்தியாவில் நடப்பு 2022ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு உள்ளாக ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது.

Most Read Articles
English summary
Kia india teased ev6 electric crossover ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X