விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!

புதிய வருடம் துவங்கினாலே கூடவே வாகனங்களின் விலை உயர்வும் வரும் என்பது தெரிந்த விஷயமே. இந்த 2022ஆம் வருடத்தையும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கியுள்ளன. இந்த வரிசையில் புதியதாக இணைந்திருக்கும் நிறுவனம் கியா ஆகும்.

விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!

இந்தியாவில் தற்சமயம் செல்டோஸ், சொனெட் என்ற எஸ்யூவி மாடல்களையும், கார்னிவல் லக்சரி எம்பிவி மாடலையும் இந்த தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவை மூன்றின் விலைகளும் இந்த புதிய ஆண்டின் துவக்கத்தில் உயர்த்தப்பட்டுள்ளன.

விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!

கியா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தவுடன் முதலாவதாக அறிமுகப்படுத்திய காரான செல்டோஸ் எஸ்யூவி மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் செல்டோஸின் ஆரம்ப நிலை எச்டிஇ ட்ரிம் நிலையின் விலை மட்டுமே உயர்த்தப்படாமல் உள்ளது.

விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!
Seltos P 1.5 New Price Old Price Difference
HTE ₹9.95 Lakh ₹9.95 Lakh 0
HTK ₹10.95 Lakh ₹10.84 Lakh ₹11,000
HTK+ ₹11.99 Lakh ₹11.89 Lakh ₹10,000
HTK + iMT ₹12.39 Lakh ₹12.29 Lakh ₹10,000
HTX ₹13.85 Lakh ₹13.75 Lakh ₹10,000
HTX IVT ₹14.85 Lakh ₹14.75 Lakh ₹10,000
Seltos P 1.4 New Price Old Price Difference
GTX (O) ₹15.55 Lakh ₹15.45 Lakh ₹10,000
GTX+ ₹16.85 Lakh ₹16.75 Lakh ₹10,000
GTX+ DCT ₹17.65 Lakh ₹17.54 Lakh ₹11,000
X-Line DCT ₹17.85 Lakh ₹17.79 Lakh ₹6,000
Seltos D 1.5 New Price Old Price Difference
HTE ₹10.75 Lakh ₹10.65 Lakh ₹10,000
HTK ₹12.09 Lakh ₹11.99 Lakh ₹10,000
HTK+ ₹13.29 Lakh ₹13.19 Lakh ₹10,000
HTK+ AT ₹14.25 Lakh ₹14.15 Lakh ₹10,000
HTX ₹15.05 Lakh ₹14.95 Lakh ₹10,000
HTX+ ₹16.09 Lakh ₹15.99 Lakh ₹10,000
GTX+ AT ₹17.95 Lakh ₹17.85 Lakh ₹10,000
X-Line AT ₹18.19 Lakh ₹18.10 Lakh ₹9,000

இதனால் கியா செல்டோஸின் ஆரம்ப இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை மாற்றமில்லாமல் ரூ.9.95 லட்சமாகவே தொடர்கிறது. ஆனால் மற்ற ட்ரிம் நிலைகளின் விலைகள் ரூ.6,000இல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.11,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. செல்டோஸின் பெரும்பாலான ட்ரிம் நிலைகளின் விலைகள் ரூ.10,000 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!

இந்த விலை உயர்வினால் செல்டோஸின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.18.1 லட்சத்தில் இருந்து ரூ.18.19 லட்சமாக உயர்ந்துள்ளது. சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலும் செல்டோஸை போன்று மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் சில டர்போ வேரியண்ட்களின் விலைகள் மாற்றமில்லாமல் தொடர்கின்றன.

Sonet P 1.2 New Price Old Price Difference
HTE 5MT ₹6.95 Lakh ₹6.89 Lakh ₹6,000
HTK 5MT ₹7.95 Lakh ₹7.89 Lakh ₹6,000
HTK+ 5MT ₹8.79 Lakh ₹8.75 Lakh ₹6,000
Sonet P 1.0 New Price Old Price Difference
HTK+ iMT ₹9.89 Lakh ₹9.89 Lakh 0
HTX iMT ₹10.49 Lakh ₹10.39 Lakh ₹10,000
HTX 7 DCT ₹11.09 Lakh ₹10.09 Lakh 0
HTX+ iMT ₹11.89 Lakh ₹11.85 Lakh ₹4,000
GTX+ iMT ₹12.35 Lakh ₹12.29 Lakh ₹6,000
GTX+ 7DCT ₹12.99 Lakh ₹12.99 Lakh 0
Sonet D 1.5 New Price Old Price Difference
HTE 6MT ₹8.65 Lakh ₹8.55 Lakh ₹10,000
HTK 6MT ₹9.59 Lakh ₹9.49 Lakh ₹10,000
HTK+ 6MT ₹10.09 Lakh ₹9.99 Lakh ₹10,000
HTX 6MT ₹10.89 Lakh ₹10.69 Lakh ₹20,000
HTX 6AT ₹11.69 Lakh ₹11.49 Lakh ₹20,000
HTX+ 6MT ₹12.39 Lakh ₹12.19 Lakh ₹20,000
GTX+ 6MT ₹12.89 Lakh ₹12.65 Lakh ₹24,000
GTX+ 6AT ₹13.69 Lakh ₹13.45 Lakh ₹24,000
விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!

இருப்பினும் சொனெட்டின் மற்ற ட்ரிம் நிலைகளின் விலைகள் செல்டோஸை காட்டிலும் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளன. எந்த அளவிற்கு என்றால், இதன் ட்ரிம் நிலைகளின் விலைகள் குறைந்தப்பட்சமாக ரூ.4,000இல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.24,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரூ.24,000 என்ற அதிகப்படியான விலை உயர்வினை சொனெட்டின் 1.5 லி டீசல் ட்ரிம் நிலைகளான ஜிடிஎக்ஸ்+ 6-மேனுவல் மற்றும் ஜிடிஎக்ஸ்+ 6-ஆட்டோமேட்டிக் பெற்றுள்ளன.

விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!

இதன் காரணமாக முன்பு ரூ.13.45 லட்சங்களாக இருந்த சொனெட்டின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.13.69 லட்சங்களாக உயர்ந்துள்ளது. அதேபோல், 1.2 லி பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் சொனெட்டின் ஆரம்ப ட்ரிம் நிலையான எச்டிஇ 5-மேனுவலின் விலையும் ரூ.6.89 லட்சங்களில் இருந்து ரூ.6.95 லட்சங்களாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுகளுக்கு ஏற்ப இந்த இரு எஸ்யூவி மாடல்களிலும் சில அப்டேட்களை கியா வழங்கியுள்ளது.

விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!

அதாவது இந்த இரு மாடல்களுக்கு வழங்கப்பட்டு வந்த சில நிறத்தேர்வுகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய நிறத்தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, செல்டோஸ் எஸ்யூவிக்கு வழங்கப்பட்டுவந்த இண்டெலிஜென்ஸி நீலம் என்கிற பெயிண்ட் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. செல்டோஸிற்கும், சொனெட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், 2020 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்னிவல் லக்சரி எம்பிவி கார் தான் இருப்பதிலேயே அதிகப்படியான விலை உயர்வை பெற்றுள்ளது.

விலை உயர்வுடன் புதிய வருடத்தை துவங்கியுள்ள கியா!! செல்டோஸ், சொனெட் & கார்னிவலின் விலைகள் உயர்ந்தன!
Carnival New Price Old Price Difference
Premium 7S AT ₹25.49 Lakh ₹24.95 Lakh ₹54,000
Prestige 7S AT ₹29.99 Lakh ₹29.49 Lakh ₹50,000
Limousine 7S AT ₹32.49 Lakh ₹31.99 Lakh ₹50,000
Limousine+ 7S AT ₹34.49 Lakh ₹33.99 Lakh ₹50,000
Prestige 6S AT ₹29.49 Lakh NA -

7-இருக்கை மற்றும் 6-இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் இந்த லக்சரி எம்பிவி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (7-இருக்கை பிரீமியம்) விலை அதிரடியாக ரூ.54,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்னிவலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.95 லட்சங்களில் இருந்து ரூ.25.49 லட்சங்களாக உயர்ந்துள்ளது. 7-இருக்கை தேர்வுடன் கிடைக்கும் மற்ற பிரெஸ்டிஜ், லிமௌசைன் & லிமௌசைன்+ வேரியண்ட்களின் விலைகள் தலா ரூ.50,000 அதிகரிப்பட்டுள்ளன. ஆனால் கார்னிவல் 6-இருக்கை மாடலின் விலையில் (ரூ.29.49 லட்சம்) மாற்றமில்லை.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
Kia Prices Jan 2022 Seltos, Sonet, Carnival – Hike By Up To Rs 54k.
Story first published: Friday, January 7, 2022, 16:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X