பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

இந்தியாவில் வேகமாக முன்னணி கார் பிராண்டாக வளர்ந்துவரும் கியா கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

தென்கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் கியா வழக்கத்தைபோல் கடந்த பிப்ரவரி மாதத்திலும் சிறப்பான எண்ணிக்கையில் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 18,121 கியா கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

இந்த எண்ணிக்கை 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 8.5% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் தற்போதைய விற்பனையை காட்டிலும் 1,419 யூனிட்கள் குறைவாக 16,702 கியா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 935 கியா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!
Kia Feb-2022 Feb-2021
Sales 18,121 16,702

நடப்பு 2022ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் 19,056 கியா கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் கியா கார்களின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பீடுகையில் 4.91% குறைந்துள்ளது. இருப்பினும் இந்த சிறிய விற்பனை குறைவிற்கு கியா நிறுவனம் பெரியதாக கவலைப்படாது. அதுமட்டுமின்றி, ஜனவரியில் பண்டிகை நாட்கள் வருவது மட்டுமில்லாமல், பிப்ரவரியை காட்டிலும் நாட்கள் அதிகம்.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

2022ஆம் ஆண்டின் இந்த முதல் 2 மாதங்களில் மொத்தம் 37 ஆயிரம் கியா கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்போதைக்கு 4 கார்கள் மட்டுமே இந்த தென்கொரிய பிராண்டில் இருந்து இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த 4 கார்கள் மூலமாகவே இந்தியாவின் டாப்-5 கார் பிராண்ட்களுள் ஒன்றாக கியா உருவெடுத்துள்ளது.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

இந்த 4 கியா கார்களில் வழக்கம்போல் செல்டோஸ் எஸ்யூவி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கியா அறிமுகப்படுத்திய முதல் காரான செல்டோஸ் கடந்த மாதத்தில் மொத்தம் 6,575 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் கியாவின் காம்பெக்ட் எஸ்யூவி காரான சொனெட் 6,154 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தை கியாவின் சமீபத்திய அறிமுகமான கேரன்ஸ் பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாத மத்தியில் தான் அறிமுகப்படுத்தப்பட்ட கேரன்ஸ் எம்பிவி கார் 5,109 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டாலும், கேரன்ஸ் கார்களுக்கான முன்பதிவுகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டது.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

இந்தியாவில் கியாவின் ஒரேயொரு சொகுசு காராக விளங்கும் கார்னிவல் கடந்த மாதத்தில் 283 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் பிராண்டின் லோகோவை மாற்றி இருந்த கியா நிறுவனத்திற்கு இந்தியாவில் ஆந்திராவில் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கார்னிவல் சொகுசு எம்பிவி காரை தவிர்த்து மற்ற மூன்றும் தயாரிக்கப்படுகின்றன.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

கார்னிவல் மாடல் மட்டும் வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் சிபியூ முறையில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போல் கியாவின் உற்பத்தி பணிகளும் கொரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகள் மற்றும் குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் கடந்த வருடங்களில் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த சூழல் தற்சமயம் மெல்ல மெல்ல சீராகி வருகிறது போலவே வருகிறது.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

இதுகுறித்து கியா இந்தியா நிறுவனத்தின் முதன்மை விற்பனை அதிகாரி மியுங்-சிக் சோன் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் நேர்மறையான விற்பனை வேகத்தை தக்கவைத்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் வெறும் 2.5 ஆண்டுகளுக்குள் அரை மில்லியனை தாண்டிவிட்டோம். இது இந்திய சந்தைக்கான எங்கள் பார்வை மற்றும் தயாரிப்புகளில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.

பிப்ரவரியில் 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் கியா!! 8.50% விற்பனை அதிகரிப்பு!

கேரன்ஸ் தொடங்கப்பட்டதன் மூலம், புதிய உயரங்களை எட்டுவதற்கும், இந்தியாவில் எங்களது நிலையை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். எங்கள் அனந்தபூர் தொழிற்சாலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட 3வது ஷிஃப்ட் காரணமாக, எங்கள் அனைத்து மாடல்களுக்கும் காத்திருப்பு காலத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். இருப்பினும் குறைக்கடத்திகளின் பற்றாக்குறை உலகளவில் மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களை போலவே எங்களுக்கும் கவலையாக உள்ளது." என்றார்.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia motors india sales february 2022 details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X