2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

நிலையான தேர்வாக அனைத்து வேரியண்ட்களிலும் 4 காற்றுப்பைகளை கியா செல்டோஸ் & சொனெட் எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே முதல்முறையாக பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

தென்கொரிய கியா நிறுவனம் அதன் செல்டோஸ் எஸ்யூவி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை மாதிரிகள் வெளிநாட்டு சாலைகளிலும் பலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

2022 செல்டோஸில் முக்கியமான அப்டேட்களை வழங்க கியா தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் முக்கியமானதாக, டீசல் என்ஜின் உடன் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது. செல்டோஸ் டீசல் ஐஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு வரவுள்ளதாக கடந்த ஆண்டில் இருந்தே தகவல்கள் வெளியாகி வந்தன.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

புதியதாக ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை பெறுவதினால் செல்டோஸ் டீசல் ட்ரிம் நிலைகளின் தற்போதைய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்படுமா என்பது தெரியவில்லை. தற்சமயம் செல்டோஸில் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

இந்த கியா எஸ்யூவி காரில் பெட்ரோல் என்ஜின் உடன் பல மாதங்களாக ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் ட்ரிம் நிலைகளில் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வானது எச்டிகே+ ட்ரிம் நிலையில் இருந்தே வழங்கப்படுகிறது. புதிய செல்டோஸ் டீசல் ஐஎம்டி வேரியண்ட்டின் விலை, தற்போதைய டீசல் மேனுவல் வேரியண்ட்டை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.50,000 வரையில் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய அம்சமாக 4 காற்றுப்பைகள் (ஏர்பேக்குகள்) 2022 செல்டோஸின் அனைத்து விதமான வேரியண்ட்களிலும் நிலையான தேர்வாக வழங்கப்பட உள்ளது. இதேபோல் அப்டேட் செய்யப்பட்ட புதிய சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் 4 காற்றுப்பைகளை எல்லா வேரியண்ட்களிலும் நிலையான தேர்வாக வழங்க கியா முடிவு செய்துள்ளதாம்.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

இதன் மூலமாக நடுத்தர-அளவு எஸ்யூவி கார் பிரிவிலும் (செல்டோஸ்), காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவிலும் 4 ஏர்பேக்குகளை நிலையான தேர்வாக அனைத்து வேரியண்ட்களிலும் பெறவுள்ள மாடல்களாக இந்த கியா கார்கள் விளங்கவுள்ளன. நான்கிற்கு அதிகமான, கூடுதல் காற்றுப்பைகள் 2022 செல்டோஸின் எச்டிஎக்ஸ்+ வேரியண்ட்டில் இருந்து வழங்கப்படுமாம். டிராக்‌ஷன் கண்ட்ரோல்/ட்ரைவ் மோட்கள் உள்ளிட்டவை எச்டிஎக்ஸ் ட்ரிம் நிலைகளில் இருந்தே வழங்கப்பட உள்ளன.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

இவற்றுடன் டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு, பின்பக்க டிஸ்க் ப்ரேக்குகள், பக்கவாட்டு காற்றுப்பைகள், இஎஸ்சி, வாகன ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏறுமுகமான சாலையில் ஏறுவதற்கான கண்ட்ரோல் & பிரேக் உதவி போன்றவற்றையும் நிலையான அம்சங்களாக புதிய செல்டோஸின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்க கியா திட்டமிட்டுள்ளது.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

மேலும், இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் சஸ்பென்ஷன் அமைப்பையும் திருத்தியமைக்கும் முடிவில் கியா உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்டோஸின் சஸ்பென்ஷன் அமைப்பு இந்திய சாலைகளுக்கு ஏற்றப்படியாக இல்லை என்கிற கருத்து பரவலாக உள்ளது. இதன் காரணமாக பயண அனுபவம் சில பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக கிடைப்பதில்லை. இதனை புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்டின் வாயிலாக கியா நிவர்த்தி செய்ய பார்க்கும்.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

இத்தகைய அப்டேட்கள் மட்டுமின்றி, புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க காஸ்மெட்டிக் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இதன்படி, ஸ்பார்க்லிங் சில்வர் மற்றும் இம்பெரியல் நீலம் என்கிற இரு புதிய நிறத்தேர்வுகளில் 2022 செல்டோஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், காரை சுற்றிலும் வழங்கப்படும் லோகோ-களும் எச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் இருந்து புதுமையானதாக பொருத்தப்பட உள்ளன.

2022 கியா செல்டோஸ் & சொனெட்டில் 4 ஏர்பேக்குகள் நிச்சயம்!! விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட...!

விலை குறைவான எச்டிஇ மற்றும் எச்டிகே வேரியண்ட்களில் புதிய 16-இன்ச் இரும்பு சக்கரங்கள் ஆபரணங்கள் போன்றதான சக்கர கவர்களுடன் வழங்கப்பட உள்ளன. செல்டோஸ் எக்ஸ் லைன் வேரியண்ட்டின் உட்புறத்தில் இண்டிகோ பெரா இருக்கைகளில் புதிய எக்ஸ் லைன் முத்திரை பொறிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. இந்த அப்டேட்களுக்கு ஏற்ப 2022 செல்டோஸின் விலை நிச்சயமாக சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia seltos sonet to get 4 airbags as standard
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X