கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கேடிஎம் புதிய எக்ஸ்-பவ் ஜிடி-எக்ஸ்ஆர் (X-Bow GT-XR) காரை வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய கேடிஎம் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் இந்தியா உள்பட உலகளவில் பிரபலமான கேடிஎம், ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்தப்படும் கார்களையும் கடந்த காலங்களில் வடிவமைத்துள்ளது. இந்த வகையில் கேடிஎம் பிராண்டில் இருந்து வெளிவந்த ரேஸ் கார் தான் எக்ஸ்-பவ் ஜிடி2 ஆகும். இதன் சாதாரண சாலை சார்ந்த வெர்சனாகவே புதிய எக்ஸ்-பவ் ஜிடி-எக்ஸ்ஆர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

புதிய எக்ஸ்-பவ் ஜிடி-எக்ஸ்ஆர் காரில் 2.5 லிட்டர் 5-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜினை கேடிஎம் நிறுவனம் பொருத்தியுள்ளது. ஆனால் இந்த என்ஜினை வடிவமைத்தது என்னவோ ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ஆகும். இந்த புதிய கேடிஎம் காரில் இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 6,350 ஆர்பிஎம்-இல் 486 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 581 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்பக்கத்தில் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியலை பெற்றுள்ள புதிய கேடிஎம் எக்ஸ்-பவ் ஜிடி-எக்ஸ்.ஆர் காரில் ஸ்போர்ட் & பெர்ஃபார்மன்ஸ் என்ற 2 ட்ரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

இந்த புதிய கேடிஎம் காரின் எடை ஆனது 1,130 கிலோ ஆகும். ஸ்போர்ட்ஸ் கார்களை பொறுத்தவரையில், இது குறைவே. இதனாலேயே 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.4 வினாடிகளிலும், 0-இல் இருந்து 200kmph வேகத்தை 6.9 வினாடிகளிலும் இந்த காரில் எட்டிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் எக்ஸ்-பவ் ஜிடி-எக்ஸ்ஆர் காரின் டாப்-ஸ்பீடு 280kmph ஆகும்.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

சாச்ஸ் ஷாக் அப்சார்பர்களுடன் இந்த கேடிஎம் ஸ்போர்ட்ஸ் காரின் முன் & பின் சக்கரங்களில் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக் பாகங்களாக இரும்பு டிஸ்க்குகளையே கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் இவற்றிற்கு பதிலாக கார்பன் பீங்கான் பிரேக்குகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

அதாவது, 6-பிஸ்டன் காலிபர்களுடன் முன்பக்கத்தில் 380மிமீ-லும், 4-பிஸ்டன் காலிபர்களுடன் 356மிமீ-லும் பீங்கான் பிரேக்குகளை பெறலாம். இந்த பிரேக் யூனிட்கள் ஏபிஎஸ்-இன் உதவியுடன் செயல்படும். கேடிஎம் எக்ஸ்-பவ் ஜிடி-எக்ஸ்.ஆர் காரின் முன் சக்கரங்கள் 19 இன்ச்சிலும், பின் சக்கரங்கள் 20 இன்ச்சிலும் பொருத்தப்பட்டுள்ளன.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

இவற்றிற்கு பதிலாக, முன் சக்கரங்களை 20 இன்ச்சிலும், பின் சக்கரங்களை 21 இன்ச்சிலும் பெற முடியும். இதில் முன் சக்கரங்களில் 235/30 அளவில் டயர்களும், பின் சக்கரங்களில் 295/30 அளவில் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 20-இன்ச் & 21-இன்ச் சக்கரங்களை மையத்தில் பூட்டிக்கொள்ள முடியும் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

புதிய கேடிஎம் எக்ஸ்-பவ் ஜிடி-எக்ஸ்.ஆர் காரின் நீளம் 4,626மிமீ, அகலம் 2,041மிமீ மற்றும் உயரம் 1,164மிமீ ஆகும். இந்த ஸ்போர்ட்ஸ் காரில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு 2,850மிமீ ஆக இருக்க, எரிபொருள் டேங்க் ஆனது 96 லிட்டர்கள் கொள்ளளவில் கொடுக்கப்பட்டுள்ளது. காருக்கு பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 160 லிட்டர் கொள்ளளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

தோற்றத்தை பொறுத்தவரையில், கேடிஎம் எக்ஸ்-பவ் ஜிடி-எக்ஸ்.ஆர் கார் ஜெட் விமானங்களுக்கு இணையான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளதை சொல்லியே ஆக வேண்டும். காரின் வெளிப்பக்கத்தில் முக்கியமான தோற்ற அம்சங்கள் என்று பார்த்தால், முன்பக்கத்தில் பெரிய ஸ்பிளிட்டர், முக்கியமான ஏர் இண்டேக்ஸ், நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள், முன் சக்கரங்களுக்கு பின்னால் துளைகள் மற்றும் முன் & பின் சக்கரங்களில் ஏர் இண்டேக்ஸ் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

கேடிஎம்-இல் பைக் மட்டும்தான் இருக்குனு நினைத்தோம்... புதுசா கார் அறிமுகம்!! என்ஜின் இந்த நிறுவனத்துடையதா...!

அப்படியே பின்பக்கத்திற்கு சென்றால், பெரிய அளவிலான டிஃப்யூஸர் பாகங்களுடன் நிலையான கார்பன்-ஃபைபர் ஸ்பாய்லர் மற்றும் பின் சக்கரங்களுக்கு பின்னால் துளைகள் உள்ளிட்டவை நமது கவனத்தை ஈர்க்கின்றன. உட்புற கேபின் முற்றிலுமாக கார்பன் ஃபைபர் பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களாக ஏசி, ப்ளூடூத் இணைப்பு வசதி, 2 யுஎஸ்பி-சி துளைகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் கேமிரா போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Ktm x bow gt xr revealed with 486 bhp
Story first published: Thursday, September 8, 2022, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X