இந்த ரகசியம் பாதிப் பேருக்குத் தெரியாதே! 30-35 கி.மீ மைலேஜ் கொடுக்குற கார் எல்லாம் இந்தியாவில் இருக்குதா?

இந்தியாவில் மக்கள் அதிகமாக மைலேஜ் தரும் கார்களை தான் அதிகம் விரும்புகின்றனர். மாசுக் கட்டுப்பாடு காரணமாக டீசல்கள் கார்களை பெரும்பாலான நிறுவனங்கள் நிறுத்திவிட்ட நிலையில் சிஎன்ஜின கார்கள் பிரபலமாகி வருகிறது. இங்கு நாம் டாப் 10 சிஎன்ஜி கார்களின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.

டாடா டியாகோ, டிகோர் சிஎன்ஜி கார்கள்

டாடா நிறுவனத்தின் இந்த டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்கள் நாட்டிலேயே பாதுகாப்பான சிஎன்ஜி கார்களில் ஒன்று, இந்த காரில் 1.2லி ரெவோட்ரான், பை-ப்யூயல் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.49 லிட்டர் மைலேஜ் கொடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சிறப்பான சிஎன்ஜி மைலேஜ் தரும் கார்களில் இதுவும் ஒன்று

இந்த ரகசியம் பாதிப் பேருக்குத் தெரியாதே! 30-35 கி.மீ மைலேஜ் கொடுக்குற கார் எல்லாம் இந்தியாவில் இருக்குதா?

ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி

ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி கார் இந்தியாவில் பிரபலமான சிஎன்ஜி கார்களில் ஒன்று. இந்த காரில் 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 69 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.4 கி.மீ பயணிக்கும் மைலேஜை வழங்கும். இந்த காரின் விலை ரூ7.88 லட்சம் என விற்பனையாகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிஎன்ஜி

இந்த கிராண்ட் ஐ10 சிஎன்ஜி கார் மார்கெட்டில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி மற்றும் டியாகோ சிஎன்ஜி ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.5 கி.மீ வரை மைலேஜை வாரி வழங்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை ரூ7.16 லட்சமாகும்.

டொயோட்டா கிளான்ஸா சிஎன்ஜி

டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸா சிஎன்ஜின இந்தியாவில் இருக்கும் ஒரே பிரிமியம் சிஎன்ஜி காராகும். இந்த கார் பிராடிக்டிகாலிட்டி மற்றும் அதிக இடவசதி கொண்ட கேபினை மட்டுமல்ல இதன் மைலேஜூம் அதிகம் தான். இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 30.61 கி.மீ வரை மைலேஜைவாரி வழங்கும். சிஎன்ஜி கார்களிலேயே சிறப்பான மைலேஜை வழங்கும் காரில் இதுவும் ஒன்று

மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி

மாருதி ஸ்விஃப்ட் கார் அதிக மக்கள் விரும்பி வாங்கும் கார் இந்த காரின் சிஎன்ஜி வேரியன்டும் நல்ல ஹிட்டானது. இந்த காரில் 1.2 லிட்டர் பை-ப்யூயல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 77 எச்பி பவரையும், 98.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்த கார் மார்கெட்டில் டாடா டியாகோ சிஎன்ஜி காருடன் போட்டியிடுகிறது. இந்த காரின் விலை ரூ7.77 லட்சம் ஆகும்.

மாருதி சுஸூகி டிசையர் சிஎன்ஜி

டிசையர் கார் ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி, டிகோர் சிஎன்ஜிக்கு பிறகான 3வது செடான் காராகும். இந்த காரில் ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே சிஎன்ஜி இன்ஜின் தான் இருக்கிறது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 31.12 கி.மீ மைலேஜை வாரி வழங்கும் . இந்த கார் ரூ8.23 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜி

மாருதியில் எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜி கார் இந்தியாவில் உள்ள குறைந்த விலை சிஎன்ஜி கார்களில் இதுவும் ஒன்று, இந்த காரில் 1.0 லிட்டர் கே10சி பை-ப்யூயல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிஎன்ஜின மோடில் 57 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் ரூ5.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.73 கி.மீ வரை மைலேஜை வாரி வழங்கும்.

மாருதி ஆல்டோ சிஎன்ஜி

ஆல்டோ கார் இந்தியாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன்களும் விற்பனையாகிறது. இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் ஒரு காராக இது உள்ளது. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் ரூ5.95 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 33.85 கி.மீ மைலேஜை வாரி வழங்குகிறது.

மாருதி வேகன் ஆர் சிஎன்ஜி

மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் சிஎன்ஜி கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஒரு சிஎன்ஜி காராகும். இந்த காரில் 1.0 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 65எச்பி பவரையும் 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 34.05 கி.மீ வரை மைலேஜை வழங்குகிறது.

மாருதி செலிரியோ சிஎன்ஜி

மாருதி நிறுவனத்தின் செலிரியோ சிஎன்ஜி கார் இந்தியாவில் அதிக சிஎன்ஜின மைலேஜ் கொடுக்கும் காரில் ஒரு காராகும். இந்த கார் ரூ6.69 லட்சம் என் விலையில் விற்பனையாகிறது. இந்த காரில் 1.0லி பை-ப்யூயல் சிஎன்ஜின இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் டியாகோ சிஎன்ஜி காருக்கு போட்டியாக களத்தில் உள்ளது.

Most Read Articles
English summary
List of fuel efficient CNG cars
Story first published: Sunday, November 27, 2022, 16:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X