கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள்... இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது...

கியா கேரன்ஸ் காரில் பலருக்கும் தெரியாத சில ரகசிய அம்சங்கள் இருக்கிறது. அதைப் பற்றித் தான் இந்தப் பதிவில் முழுமையாக காணப்போகிறோம்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

சமீபத்தில் இந்திய மார்கெட்டிற்குள் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிறுவனம் கியா. இந்நிறுவனத்தின் கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கத் துவங்கிவிட்டனர். இன்று சாலைகளில் கியா கார்களின் ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய மக்கள் விரும்பும் அளவிற்கு அந்த காரின் காரின் வடிவமைப்புகள் இருப்பது தான்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

இந்நிறுவனம் தனது தயாரிப்புகளின் பட்டியலில் சிறப்பான காராக வைத்திருப்பது கியா கேரன்ஸ் காரை தான். இந்த கார் எம்பிவி செக்மெண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் சிறப்பான விற்பனையில் இருந்தது மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான். இதற்குப் போட்டியாக பல நிறுவனங்கள் கார்களை வெளியிட்டும் பெரியதாக ஜெயிக்க முடியவில்லை.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

இந்நிலையில் தான் கியா நிறுவனம் இந்த செக்மெண்டை குறி வைத்து அந்த செக்மெண்டில் உள்ள மக்கள் எதை விரும்புவார்கள் என ஆய்வு செய்து கியா கேரன்ஸ் காரை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியில் கியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று பலர் கியா கேரன்ஸ் காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் சாலையில் கியா கேரன்ஸ் காரை அதிகம் காண முடிகிறது.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

கியா கேரன்ஸ் கார் அதிக தொழிற்நுட்டப வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் தொழிற்நுட்ப வசதிகள் குறித்த பட்டியலை எல்லாம் நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள். ஆனால் இங்கு நாம் சொல்லப்போவது அதை அல்ல. மாறாக இந்த கியா காரில் சில ரகசியமான அம்சங்களும் இருக்கிறது. இப்படி சில அம்சங்கள் இருப்பது இந்த கார்களை விற்பனை செய்யும் சில ஷோரூம் விற்பனையாளர்களுக்கே தெரியாது. அதன் பட்டியலைக் கீழே காணலாம்

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

லாக்/அன்-லாக்

பொதுவாக காரை கீ ரிமோட்டில் லாக் செய்யும் போதும் அன்லாக் செய்யும் போதும் அதிலிருந்து சத்தம் ஒன்று வரும் சிலருக்கு அந்தச் சத்தம் எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும் பெரும்பாலான கார்களில் இப்படியான சத்தம் வருவதை நிறுத்த முடியாது. ஆனால் கியா கேரன்ஸ் காரின் கீ ரிமோட்டில் லாக் மற்றும் அன்லாக் பட்டனை ஒரே நேரத்தில் நொடிகள் தொடர்ந்து அழுத்தினால் போதும் காரின் இன்டிகேட்டர் லைட் மட்டும் எரிந்து அணையும் அதன் பின்னர் காரை லாக் செய்யும் போதும் அன்லாக் செய்யும்போதும் சத்தம் வராது.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

ரூஃப் ரெயில்கள்

பொதுவாக கார்களில் வழங்கப்படும் ரூஃப் ரெயில்கள் வெறும் லுக்கிற்காக மட்டுமே வழங்கப்படும். இதில் பொருட்களை வைக்க முடியாது. இப்படித் தான் பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். கியா கேரன்ஸ் காரில் உள்ள ரூஃப் ரெய்ல்களும் கிட்டத்தட்ட அப்படிதான். ஆனால் அந்த ரூஃப் ரெயில்கள் 50 கிலோ எடை வரை தாங்கும் திறன் கொண்டது . அதிகமான எடை கொண்ட பொருளை வைக்காவிட்டாலும் குறைந்த எடை கொண்ட பொருளை வைத்துக்கொள்ளலாம்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்

இந்த காரில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் டிரைவருக்கான புரோஃபைல் செட்டிங்ஸ் உள்ளது. இதில் டிரைவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு செட்டிங்ஸை மாற்றி வைத்துச் சேமித்துக்கொள்ளலாம். மற்றவர்கள் காரை ஓட்டி செட்டிங்ஸை மாற்றினாலும் ஒரே கிளிக்கில் அந்த டிரைவர் தனக்கான செட்டிங்ஸை மீண்டும் மாற்றிக்கொள்ள முடியும்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

ஆம்பியன்ட் லைட்

இந்த காரில் ஆம்பியன்ஸ் லைட் மொத்தம் 64 விதமான ஷேட்களில் இருக்கிறது. இதில் உங்களுக்கு எந்த கலரில் லைட் இருந்தால் நன்றாக இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த கலரில் வைத்துக்கொள்ள முடியும். பெரும்பாலான கார்களில் ஒரே நிறத்தில் மட்டும் தான் ஆம்பியன்ட் லைட் இருக்கும். ஆனால் இந்த காரில் 64 நிறங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

ஸ்மார்ட் வாட்ச்

இந்த காரின் அடிப்படை செயல்பாடுகளை ஸ்மார்ட் வாட்ச் மூலமே செயல்படுத்த முடியும். காரை லாக் செய்வது, அன்லாக் செய்வது, காரின் லைட்டை எரிய வைப்பது, காரின் நிலையை அறிந்து கொள்வது, கார் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வது, காரின் எவ்வளவு கீ.மீ பயணித்துள்ளது எவ்வளவு எரிபொருள் இருக்கிறது உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்வது இது எல்லாம் செல்போன் மட்டுமல்ல ஸ்மார்ட் வாட்சிலேயே செய்ய முடியும்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

ஐஆர்விஎம்

கார்களில் பொதுவாக பின்னாடி வரும் வாகனங்களைப் பார்க்க ஐஆர்விஎம் கண்ணாடி கொடுக்கப்பட்டிருக்கும். இந்த காரில் இது ஸ்மார்ட் கண்ணாடியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் கண்ணாடியில் பின்னால் உள்ள வாகனத்தின் வெளிச்சம் அதிகமாக இருந்தால் ஆட்டோமெட்டிக்காக டிம் செய்யும், அதே போல காரை ரிவர்ஸ் எடுக்கும் போது அதன் பிரைட்னஸ் தானாக அதிகமாகும். இப்படியாக ஸ்மார்ட்டாக இது செயல்படும்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

ஏசி

பொதுவாக இந்த கியா கேரன்ஸ் காரில், காரின் வெப்ப நிலையைக் காட்டுவது செல்சியஸில்தான் காட்டும் இதை ஃபெரன்ஹீட்டிற்கு மாற்ற முடியும். ஏசியின் ஆஃப் மற்றும் ஆட்டோ பட்டனை ஒரே நேரத்தில் அழுத்தினால் ஃபெரன்ஹீட்டிலிருந்து செல்சியஸிற்கும், செல்சியஸிலிருந்து ஃபெரன்ஹீட்டிற்கும் மாற்றிக்கொள்ளலாம்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

ஆட்டோமெட்டிக் சென்சார்

இந்த கியா கேரன்ஸ் காரில் ஜன்னல் மற்றும் சன்ரூஃப்களை அடையும் போது அதற்கு இடையில் யாராவது கை நீட்டியிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது தடை இருந்தாலோ அதை உடனே உணர்ந்து ஜன்னல் மற்றும் சன்ரூஃபை அடைப்பதை நிறுத்திக்கொள்ளும்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

கூல்டு கப் ஹோல்டர்

கியா கேரன்ஸ் காரில் முன்பக்க சீட்டின் அருகே கப் ஹோல்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது கூல்டு கப் ஹோட்ராகும். அதாவது நீங்கள் குளிர்பானங்களைக் குடித்துவிட்டு வெகுநேரம் அந்த கப் ஹோல்டரில் வைத்திருந்தாலும் அதன் குளிர் குறையாமல் இருக்க தொடர்ந்து குளிர்வித்துக்கொண்டே இருக்கும். கோடைக் காலங்களில் இது உதவிகரமாக இருக்கும்

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

பின்பக்க ஏசிவென்ட்கள்

கியா கேரன்ஸ் காரில் பின்பக்க ஏசி வென்ட்கள் காரின் மேல் பகுதியில் உள்ளது. இந்த ஏசி பின்பக்கச் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் முகத்தில் நேரடியாக அடிக்குமானால் இந்த ஏசியில் நேரடியாக ஏசி வராமல் ரிங் வழியாக வரும் படி மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால் முகத்திற்கு நேராக ஏசி அடிக்காமல் இருக்கும்.

கியா கேரன்ஸ் காரின் ரகசியங்கள் . . . இதெல்லாம் ஷோரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கூடத் தெரியாது . . .

பிராக்டிகாலிட்டி

இந்த கியா கேரன்ஸ் கார் அதிக பிராக்கடிக்கல் அம்சங்கள் நிறைந்த காராகும். இந்த காரில் அதிகமாக ஸ்மார்ட் ஸ்டோரேஜ் பகுதிகள் இருக்கிறது. உதாரணமாக குடை வைக்க தனிப் பகுதி 3 பாட்டில்களை வைக்க கதவுகளில் ஹோல்டர்கள், எக்ஸ்ட்ரா கிரிப் உடன் கூடிய கப் ஹோல்டர்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #கியா #kia #kia carens
English summary
List of Secret features in kia carens car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X