டாடா கம்மிங் ஒத்தே! நம்பர் 1 இடத்தில் டாடா கார்... மாருதில பெயருக்கு ஒரு கார் மட்டும் லிஸ்ட்ல இருக்குது!

கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப்பட்டியலின்படி டாடா நிறுவனத்தின் நெக்ஸான் எஸ்யூவி கார் அதிகமாக விற்பனையாகி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் அதிகம் விரும்பும் இந்த எஸ்யூவி செக்மெண்டில் கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலைக் காணலாம் வாருங்கள்

10. மஹிந்திரா எக்ஸ்யூவி 700

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த காருக்கு மார்கெட்டில் செம டிமாண்ட் இருக்கிறது. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் புக் செய்துவிட்டு 2 ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த கார் தயாராகத் தயாராக விற்பனையாகிறது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 5701 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் மொத்தம் 3207 கார்கள்தான் விற்பனையாகியிருந்தது ஒரே ஆண்டில் 78 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது.

டாடா கம்மிங் ஒத்தே! நம்பர் 1 இடத்தில் டாடா கார்... மாருதில பெயருக்கு ஒரு கார் மட்டும் லிஸ்ட்ல இருக்குது!

9. மஹிந்திரா எக்ஸ்யூவி 300

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் சிறிய வெர்ஷன் தான் எக்ஸ்யூவி 300 கார் இந்த காருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மொத்தம் 5903 கார்கள் கடந்த நவம்பர் மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு வெறும் 4005 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. விற்பனையில் ஒரே ஆண்டில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.

8. மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மார்கெட்டில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகி வரும் ஒரு எஸ்யூவி காராகும். சமீபத்தில் ஸ்கார்பியோ என் காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 6455 ஸ்கார்பியோ கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் வெறும் 3370 ஸ்கார்பியோ கார்கள் தான் விற்பனையாகியிருந்தன. ஒரே ஆண்டில் 92 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

7. கியா சோனட்

குயா நிறுவனம் குறுகிய காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவு வெற்றியைப் பெற்ற நிறுவனம் இந்நிறுவனம் தனது கியா சோனட் என்ற எஸ்யூவி காரை கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 7834 கார்களை விற்பனை செய்துள்ளது.இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் மொத்தம் 4719 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. விற்பனை 66 சதவீதம் ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது.

6. கியா செல்டோஸ்

கியா நிறுவனம் வெளியிடும் கார்களில் பிரபலமான கார்களில் இதுவும் ஒன்று. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 9284 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் மொத்தம் 8859 கார்கள் விற்பனையாகியுள்ளன. விற்பனையில் 5 சதவீதம் வளர்ச்சி என்றாலும் தொடர்ச்சியான சிறப்பான விற்பனை நடந்து வருகிறது. விரைவில் இந்த காரின் அப்டேட் வெர்ஷன் வரும் என எதிர்பார்க்கலாம்.

5. ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது வென்யூ காரை அப்டேட் செய்து வெளியிட்டது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 10,738 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனையான 7932 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 35 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

4. மாருதி சுஸூகி பிரெஸ்ஸா

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாகவுள்ளது. இந்நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டில் வெளியிட்டுள்ள கார் பிரெஸ்ஸா தான். கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 11,324 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் மொத்தம் 10,760 கார்கள் விற்பனையாகியுள்ளது. நீண்ட காலமாக இந்த கார் விற்பனையில் இருப்பதால் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை.

3. டாடா பஞ்ச்

டாடா நிறுவனம் வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற கார் இந்த டாடா பஞ்ச் கார். இந்த காரை அதிகமான மக்கள் விரும்பு வாங்கி வருகின்றனர். இந்த காரின் விற்பனை பெரும் அளவில் உயர்ந்துள்ளது கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 12,131 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் வெறும் 6110 கார்களை தான் விற்பனை செய்திருந்தனர் ஒரே ஆண்டில் 99 சதவீத விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

2. ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது பெரிய நிறுவனம். இந்நிறுவனத்தின் க்ரெட்டா கார் எஸ்யூவி செக்மெண்டிலேயே பிரபலமான கார் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் மட்டும் இந்தியாவில் மொத்தம் 13,321 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 10,300 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

1. டாடா நெக்ஸான்

டாடா நிறுவனம் இந்தியர்களால் அதிகம் விருப்பப்படும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் நெக்ஸான் காரை அதிகமான மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 15,871 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் மொத்தம் 9831 கார்களை விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் இந்த காரின் விற்பனை 61 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
List of top 10 best sold SUVs in November 2022
Story first published: Wednesday, December 7, 2022, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X