மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான்...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5, 3 வரிசை சீட் கொண்ட கார்களின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம். GNCAP சோதனையில் சிறப்பான ரேட்டிங் வாங்கிய கார்களின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் விற்பனையாகும் பல கார்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படாதாதால் அது பட்டியலில் சேர்க்கப்படவில்லை. வரும் காலத்தில் இந்த கார்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டால் இந்த பட்டியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

இந்தியாவில் மக்கள் பலர் பெரிய குடும்பமாக வாழ்வதால் இந்தியர்களுக்கு 7-8 சீட்டர் கார்கள் அதிகம் தேவைப்படுகிறது. அதனால் இந்த செக்மெண்டில் உள்ள கார்கள் சிறப்பான விற்பனையைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில் அந்த செக்மெண்டில் தற்போது வந்த கார் கியா கேரன்ஸ்.

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

இந்த கார் சமீபத்தில் குலோபல் NCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுவும் இந்தியாவில் விற்பனையாகும் பாதுகாப்பாக கார்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்த செய்தியில் இந்தியாவில் உள்ள 3 வரிசை சீட்கள் உள்ள கார்களில் டாப் 5 பாதுகாப்பான கார்கள் குறித்துக் காணலாம்.

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

மஹிந்திரா எக்ஸ்யூவி 700

இந்தியாவிலேயே 3 வரிசை சீட்கள் கொண்ட காரில் பாதுகாப்பான கார் என்றால் அது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார்தான். இந்த கார் கிராஷ் சோதனையில் பெரியவர்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்றுள்ளது. GNCAP-லிருந்து பாதுகாப்பான கார் என்ற பட்டமும் வாங்கியுள்ளது. இந்த காரின் ESC முதல் பல விஷயங்கள் இந்த 5 ஸ்டார் ரேட்டிங்கிற்கு காரணம்

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த 3 வரிசை சீட் கொண்ட கார் இந்த மஹிந்திரா மராஸ்ஸோ. இது GNCAP சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரின் 7 சீட்டர் வெர்ஷன் காரில் இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ், டிரைவருக்கான எஸ்பிஆர், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் அன்சோரேஞ்சஸ், இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்றுள்ளது.

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

ரெனால்ட் டிரைபர்

ரொனால்ட் நிறுவன கார்களில் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார் டிரைபர் கார் தான். இந்த கார் GNCAP சோதனையில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான க்ராஷ் டெஸ்ட் சோதனையில் 4 ஸ்டார்களை பெற்றிருந்தாலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் குறைவான ரேட்டிங்கையே பெற்றுள்ளது.

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

கியா கேரன்ஸ்

கியா நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் கேரன்ஸ் காரை வெளியிட்டது. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் GNCAP சோதனையில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஆனால் குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் அதே 3 ஸ்டார் ரேட்டிங் இந்த காருக்கு கிடைத்துள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாடல் பேசிக் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மாடல்தான்.

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

மாருதி சுஸூகி எர்டிகா

மாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்த எர்டிகா கார் தான் பட்டியலில் கடைசியாக இருக்கும் கார். இந்த காரும் க்ராஷ் டெஸ்டில் 3 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியிருந்தாலும் புள்ளி கணக்கில் பார்க்கும் போது கியா கேரன்ஸை விட விடக் குறைவான புள்ளிகளையே இந்த எர்டிகா கார் பெற்றுள்ளது.

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

இது போக மார்கெட்டில் மஹிந்திரா பொலிரோ, ஸ்கார்ப்பியோ, டொயோட்டா ஃபார்ச்சூனர், இன்னோவா க்ரைஸ்டா, ஜீப் மெரிடியன் ஆகிய கார்கள் இருக்கின்றன. இதில் ஸ்காப்பியோ காரின் முந்தைய மாடல் க்ராஷ் டெஸ்டில் பாஸ் ஆகவில்லை. ஃபாச்சூனர் கார் GNCAP டெஸ்டிற்கு செல்லவில்லை. ஆனால் ASEAN NCAP க்ராஷ் டெஸ்டில் பாஸ் ஆகியுள்ளது.

மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது தான் . . .

இன்னோவா க்ரைஸ்டா ஜீப் மெரிடியன் ஆகிய கார்கள் இதுவரை எந்த விதமான க்ராஷ் டெஸ்டிற்கும் செல்லவில்லை. இதுபோக மாருதி சுஸூகி எக்ஸ்எல்6, டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களும் இதுவரை க்ராஷ் டெஸ்டிற்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
List of top5 safest three rows cars in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X