ஸ்கூல் படிக்கிற பசங்களுக்குள்ள இவ்ளோ திறமையா!! காற்றை சுத்தம் செய்யும் வசதி உடன் இ-காரை உருவாக்கி அசத்தல்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நான்கு பேர் இணைந்து சூப்பரான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதேவேலையில், இயக்கத்தின் (பயணங்களின்)-போது காற்றையும் சுத்தம் செய்யுமாம்.

இதற்காக அந்த மாணவர்கள் எலெக்ட்ரிக் காரில் 'டஸ்ட் ஃபில்டரேசன் சிஸ்டம்' (Dust Filtration System) பயன்படுத்தியிருக்கின்றனர். இதுவே காரின் இயக்கத்தின் போது காற்றை சுத்திகரிக்கும். அதாவது, ஏர் ஃப்யூரிஃபையரை போல் இயக்கத்தின் போது செயல்படும். இத்தகைய மிக சூப்பரான வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரையே நான்கு பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கி அசத்தியிருக்கின்றனர். விரஜ் மெஹ்ரோத்ரா (வயது 11), ஆர்யவ் மெஹ்ரோத்ரா (வயது 9), கர்வித் சிங் (வயது 12) மற்றும் ஸ்ரேயன்ஷ் மெஹ்ரோத்ரா (வயது 14) ஆகிய நான்கு சிறுவர்கள் இணைந்தே சுற்றுச் சூழலை பாதுகாக்கும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கியிருக்கின்றனர்.

லக்னோ

Image Source: Hindustan Times

இந்த சிறுவர்கள் தங்களை 'Four-ever' என குறிப்பிடுகின்றனர். இவர்களே மிலிண்ட் ராஜ் என்பவரின் வழிக்காட்டுதலுடன் கீழே இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியிருக்கின்றனர். இந்த நபர் ரோபோ எந்திரங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர் என கூறப்படுகின்றது. உலகமே பசுமை இயக்கத்தை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களினால் சுற்றுச் சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.

இதனைக் கருத்தில் கொண்டே இந்திய அரசும் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மானியம் மற்றும் சிறப்பு வரி தள்ளுபடி ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையிலேயே நான்கு பள்ளி மாணவர்கள் இணைந்து தரமான எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றனர்.

இந்த சிறுவர்கள் மொத்தமாக மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியிருக்கின்றனர். விரஜ் மற்றும் ஆர்யவ் ஆகியோர் இணைந்து ஒரு வாகனத்தையும், கர்வித் சிங் மற்றும் ஸ்ரேயன்ஷ் இந்த இருவர் தனி தனியாகவும் ஓர் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த அனைத்தும் காற்றில் கலந்துக் காணப்படும் நுண்ணிய மாசுக்களை அகற்றும் திறன் கொண்டவை. இதுமட்டுமில்லைங்க, ஒரு முழு சார்ஜில் 100 கிமீ பயணிக்கும் திறன் கொண்டவையாகவும் இந்த எலெக்ட்ரிக் கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன், பிரஷ்லெஸ் டைரக்ட் கரன்ட் மோட்டார் இந்த வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1,000 வாட் மற்றும் 1,800 வாட் மோட்டார்களையே இந்த கார்களில் சிறுவர்கள் பயன்படுத்தி உள்ளனர். தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் காரை மேம்படுத்தும் பணியையும் சிறுவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தற்போது அவர்கள் தாங்கள் தயாரித்திருக்கும் எலெக்ட்ரிக் காரை 5ஜி ரெடி வாகனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே விரைவில் இந்த மின்சார வாகனங்களில் 5ஜி இணைப்பு வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறுவர்கள் இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை மறு சுழற்சி பாகங்களைக் கொண்டே உருவாக்கி இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 250 நாட்கள் செலவில் அவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியிருக்கின்றனர். மேலும், சிறுவர்கள் உருவாக்கியிருக்கும் மூன்று மின்சார வாகனங்களும் தனித்துவமான ஸ்டைல் மற்றும் தோற்றத்தைக் கொண்டதாக உள்ளன. இது சிறுவர்கள்மீது கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆம், அளவு, வடிவம் என அனைத்திலும் மூன்று வாகனங்களும் மாறுபட்டு காட்சியளிக்கின்றன.

இந்த சிறுவர்களுக்கு இத்தனை திறமையா என ஆச்சரியமடையும் அளவிற்கு அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஷ்ரேயான்ஷ் மெஹ்ரோத்ரா, அவர் உருவாக்கியிருக்கும் எலெக்ட்ரிக் காருக்கு முர்சிலாகோ என பெயரிட்டுள்ளார். இது ஓர் ஸ்பானிஷ் பெயர் ஆகும். வௌவ்வால் என்பதே இந்த பெயருக்கு அர்த்தம் ஆகும். எலெக்ட்ரிக் வாகன உலகின் ஜாம்பவானாக கருதப்படும் எலன் மஸ்க்கை ரோல் மாடலாகக் கொண்டே இந்த வாகனத்தை ஷ்ரேயான்ஷ் உருவாக்கியிருக்கின்றார். காற்றை சுத்திகரிக்கம் வசதிக் கொண்ட இந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்க அவர் ரூ. 2 லட்சம் வரை செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆறாம் வகுப்பே பயிலும் கர்வித் சிங், அவர் உருவாக்கியிருக்கும் காருக்கு ஜிஎஸ் மோட்டார் என பெயர் வைத்துள்ளார். தன்னுடைய பெயரின் முதல் எழுத்துக்களை எடுத்து காருக்கு பெயர் சூட்டியிருக்கின்றார். இந்த வாகனத்தை மேலும் மேம்படுத்த இருப்பதாக அந்த சிறுவன் தெரிவித்திருக்கின்றார். விரஜ் மற்றும் ஆர்யவ் ஆகியோர் இணைந்து ரூ. 2.93 லட்சம் செலவில் தங்களின் எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து எதிர்காலத்திற்கான விலை குறைவான மின்சார கார்களை உருவாக்க இருப்பதாக கூறியிருக்கின்றனர்.

Most Read Articles

English summary
Lucknow school students creates e cars
Story first published: Wednesday, November 30, 2022, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X