கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்! சூப்பரான மெர்சிடிஸ் இ-கார் வெளியீடு!

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் இக்யூஇ (EQE) எலெக்ட்ரிக் காரை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த சொகுசு மின்சார கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) அதன் புதுமுக இக்யூஇ (EQE) எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இந்நிறுவனம் சமீப காலமாக ஆடம்பர மின்சார கார்களை அறிமுகப்படுத்துவதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், அண்மையில் இந்திய சந்தையில் இக்யூஎஸ் 580 (EQS 580) எனும் சூப்பரான எலெக்ட்ரிக் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

இந்த சம்பவம் அரங்கேறி ஒரு சில மாதங்களே ஆகின்றநிலையில் இப்போது மீண்டும் ஓர் புதிய மின்சார தயாரிப்பை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இந்த மின்சார கார் ஓர் முழு சார்ஜில் 590 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான ரேஞ்ஜ் தர கூடிய எலெக்ட்ரிக் காரை பென்ஸ் நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

இந்த வாகனம் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வெர்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதில் மூன்று வழக்கமான வேரியண்டுகளாகவும், இரண்டு ஏஎம்ஜி பேட்ஜிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

வழக்கமான வெர்ஷன்களின் விபரம்:

  • இக்யூஇ 350 பிளஸ் ( EQE 350+)
  • இக்யூஇ 350 4மேட்டிக் (EQE 350 4Matic)
  • இக்யூஇ 500 4 மேட்டிக் (EQE 500 4Matic)
  • ஏஎம்ஜி வெர்ஷன்களின் விபரம்:

    • இக்யூஇ 43 4மேட்டிக் (EQE 43 4Matic)
    • இக்யூஇ 53 4மேட்டிக் (EQE 53 4Matic+)
    • கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

      இந்த அனைத்து வெர்ஷன்களிலும் 90.6 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரி விஷயத்தில் அனைத்து வெர்ஷன்களும் ஒரே மாதிரியானதாக இருந்தாலும், ரேஞ்ஜ், மோட்டார் மற்றும் திறன் வெளிப்பாடு ஆகியவற்றில் இவை அனைத்தும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

      கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

      அந்தவகையில், ஆரம்ப நிலை வேரியண்டான இக்யூி 350பிளஸ்-இல் சிங்கிள் மோட்டார், ரியர் வீல் டிரைவ் செட்-அப் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 292 எச்பி பவரையும், 565 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் ரேஞ்ஜ் திறன் 590கிமீ ஆகும். இந்த வெர்ஷனுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருக்கும் இக்யூஇ 350 4மேட்டிக் அதிகபட்சமாக 292 எச்பி பவரையும், 765 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

      கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

      இதன் ரேஞ்ஜ் திறன் 558 கிமீ ஆகும். இரண்டு மோட்டார்கள் இந்த தேர்வில் வழங்கப்பட்டிருப்பதனால் இதன் ரேஞ்ஜ் திறன் சற்றே குறைந்துள்ளது. இவையிரண்டையும் காட்டிலும் அதிக பவரை வெளியேற்றக் கூடிய தேர்வாக இக்யூஇ 500 4மேட்டிக் காட்சியளிக்கின்றது. இதில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், 858 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டவை ஆகும்.

      கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

      அதேவேலையில், இது ஃபுல் சார்ஜில் 547 கிமீ ரேஞ்ஜை வழங்கும். மேலே இரு வெர்ஷன்களைக் காட்டிலும் இது சற்று குறைவான ரேஞ்ஜாகும். அதிக திறன் வெளிப்பாடு காரணமாக ரேஞ்ஜ் திறன் சற்றே குறைந்துக் காணப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த கார் அனைத்து வீல் இயக்கம் திறன் கொண்டதாக இருக்கின்றது. இதுவும் காரின் ரேஞ்ஜ் திறன் குறைவதற்கு காரணமாக இருக்கின்றது.

      கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

      இவற்றிற்கு அடுத்தபடியாக மிக உயரிய தேர்வாக இக்யூஇ 43 4மேட்டிக்கும், இக்யூஇ 53 4மேட்டிக் பிளஸ்-ம் காட்சியளிக்கின்றது. இந்த இரு தேர்வுகளிலும் டூயல் மின் மோட்டாரும், ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், திறன் வெளிப்பாட்டில் இவை இரண்டிற்கும் இடையிலும்கூட பல மடங்கு வித்தியாசங்கள் தென்படுகின்றன.

      கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

      இக்யூஇ 43 4மேட்டிக் அதிகபட்சமாக 476 எச்பியையும், 858 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ ஆகும். அதேவேலையில், வெறும் 4.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியதாக அதுக் காட்சியளிக்கின்றன. ஆனால், இக்யூஇ 53 4மேட்டிக் பிளஸ் வெர்ஷனோ அதிகபட்சமாக 625 எச்பி பவரையும், 950 என்எம் டார்க்கையும் வெளியற்றக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

      கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

      இதைவிட கூடுதல் தேர்வை வெளியேற்றக் கூடிய தேர்வாக இந்த வெர்ஷனில் டைனமிக் பிளஸ் பேக்கேஜ் வழங்கப்படுகின்றது. இந்த தேர்வு அதிகபட்சமாக 687 எச்பி பவரையும், 1000 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ ஆகும். இத்தகைய சூப்பர் வெளிப்பாட்டு திறன்களிலேயே புதுமுக பென்ஸ் கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

      கண்டிப்பா இந்த காருல இருக்க ஒவ்வொரு அம்சமும் உங்களை வாங்க தூண்டும்... மிக சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த மெர்சிடிஸ்!

      இதுமட்டுமில்லைங்க சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சத்திலும் இந்த புதுமுக எலெக்ட்ரிக் கார் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கவர்ச்சிகர அம்சங்கள் பலவற்றை இந்த கார் பெற்றிருக்கின்றது. பனோரமிக ஸ்டைல் க்ரில், ரீ-ஸ்டைல்டு பம்பர்கள், தனித்துவமான வடிவத்திலான வீல்கள், பெரிய ஹைப்பர் திரை, எம்பியூஎக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் என பல அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவரையும் வாங்க தூண்டும் வகையிலேயே இந்த அம்சங்களை பென்ஸ் நிறுவனம் இக்யூஇ எலெக்ட்ரிக் காரில் வழங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Luxury car maker mercedes revealed eqe electric suv
Story first published: Monday, October 17, 2022, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X