150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு!

150 ரூபா செலவு பண்ணினா 300 கிமீ பயணிக்கும் ஹைட்ரஜனால் இயங்கும் காரை இந்திய விவசாயி ஒருவரின் மகன் உருவாக்கியிருக்கின்றார். இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

இந்தியாவின் மிக அதிகம் மைலேஜ் தரும் கார்களாக மாருதி சுஸுகி செலிரியோ, கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் உள்ளிட்டவை இருக்கின்றன. செலிரியோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25.24 கிமீ தொடங்கி 26.68 கிமீ வரையிலும், டொயோட்டா ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா கார்கள் 28 கிமீ வரையிலும் மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றன.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

இந்த அனைத்து கார்களுக்கம் டஃப் கொடுக்கும் ஓர் காரை இந்தியாவைச் சேர்ந்த விவசாயியின் மகன் ஒருவர் உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கியிருக்கும் அந்த கார் வெறும் ரூ. 150 செலவில் 300 கிமீ மைலேஜை தரும் என அவர் கூறியிருக்கின்றார். மஹாராஷ்டிரா மாநிலம், யவத்மல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்சல் நக்ஷன்.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

இவரே தனது வீட்டில் வைத்து ரூ. 150 செலவில் 300 கிமீ மைலேஜை தரக் கூடிய காரை உருவாக்கியவர் ஆவார். காற்று மாசை ஏற்படுத்தாத ஹைட்ரஜனால் இயங்கும் காரையே அவர் உருவாக்கியிருக்கின்றார். எம்-டெக் பட்டதாரியான இவர் தன்னுடைய நண்பர் குணால் அஸ்துகர் உதவியுடன் இந்த காரை உருவாக்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

ரூ. 25 லட்சம் செலவில் இந்த காரை தனது சொந்த பயன்பாட்டிற்காக உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஹர்சல் கூறியிருக்கின்றார். இன்னும் இந்த காரின் உருவாக்க பணிகள் முடிவடையாத நிலையே தென்படுகின்றது. இருப்பினும், இப்போதே அக்கார் வழங்க இருக்கும் பலன்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளன. தற்போது, அவர் இணைய சேவை வழங்குபவராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

இதற்கிடையிலேயே நண்பரின் உதவியுடன் ஹைட்ரஜன் காரை உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த காரை அதிகம் மைலேஜ் தரும் வாகனமாக மட்டுமின்றி ஆட்டோமேட்டிக்காக இயங்கும் வகையிலும் அவர் உருவாக்கி வருகின்றார். இதன் காரணத்தினாலேயே பெரும் தொகை இக்காருக்கு செலவாகியிருக்கின்றது.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

இந்த காரை எதிர்காலத்தில் விற்பனைக்காக உருவாக்கவும் இருப்பதாக அவர் திட்டமிட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக சுமார் 100 யூனிட்டுகளையாவது உற்பத்தி செய்ய இருக்கின்றார் ஹர்சல். ஆனால், இது எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படும், என்ன மாதிரியான புதிய அம்சங்களுடன் அது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

அதேவேலையில், தற்போதைய நிலவரப்படி இக்காரை சிசர் ரக டூர்கள், சன்ரூஃப், அட்டானமஸ் டிரைவிங் அம்சம் மற்றும் பல அம்சங்களுடன் இக்காரை அவர் உருவாக்கி வருகின்றார். இத்தகைய சிறப்புகள் கொண்ட வாகனமாகவே விவசாயியின் மகன் ஹர்சல் உருவாக்கி வரும் கார் வெகு விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. மேலும், இதற்கான புக்கிங்குகளையும் ஏஐகார்ஸ் (AiCars.in) எனும் தளத்தின் வாயிலாக அவர்கள் ஏற்க தொடங்கியிருக்கின்றனர்.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

உரிய அனுமதிகள் பெற்ற பின்னரே இக்கார்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒன்று லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் ஒன்று ரூ. 94.24-க்கும் விற்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் வெறும் 150 ரூபாய் செலவில் தங்களுடைய இந்த கார் 300 கிமீ வரை செல்ல உதவும் என ஹர்சல் தெரிவித்திருக்கின்றார்.

150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு வரபோகுதாம்!

இதன் விளைவாக மைலேஜை அதிகம் விரும்பும் இந்தியர்கள் இந்த காரின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கியிருக்கின்றனர். பொதுவாகவே இந்தியர்கள் மத்தியில் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது மாருதி சுஸுகி செலிரியோ, கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற கார்கள் விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, சமீபத்திய அறிமுகமான மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் கார்களுக்கு புக்கிங் மிக அமோகமாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த இரு கார்களும் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையில் அவரவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Maharashtra youngster built a hydrogen powered car
Story first published: Friday, October 7, 2022, 13:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X