பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

பொலிரோ (Bolero) காரை கூடுதல் பாதுகாப்பான வாகனமாக மாற்றியிருக்கின்றது மஹிந்திரா (Mahindra) நிறுவனம். புதிய அப்டேட்டின் வாயிலாக இக்காரை அதிக பாதுகாப்பான வாகனமாக மஹிந்திரா மாற்றியிருக்கின்றது. இத்துடன் இரு நிற தேர்வையும் புதிதாக மஹிந்திரா நிறுவனம் பொலிரோ காரில் வழங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த அனைத்து தகவலையும் கீழே காணலாம், வாங்க.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

மிக சிறப்பாக விற்பனையாகும் மஹிந்திரா (Mahindra) தயாரிப்புகளில் பொலிரோ (Bolero) கார் மாடலும் ஒன்று. பல ஆண்டுகளாக இந்த கார் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றது. இந்த நிலை நீடித்து, தொடர்ச்சியாக விற்பனையில் கலக்க வேண்டும் என்பதற்காக இந்த காரில் அவ்வப்போது தயாரிப்பு நிறுவனம் அப்டேட்டினை வழங்கி வழங்கி வருகின்றது.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் இம்முறை பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, மஹிந்திரா நிறுவனம் பொலிரோ கார் மாடலில் இரு ஏற் பேர்க்குகள் கட்டாயமாக வழங்க இருக்கின்றது. ஆகையால், இனி இரு ஏர் வசதிகள் கொண்ட பொலிரோ மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த வசதியை புதிய அப்டேட்டாக வழங்க இருக்கின்றது, மஹிந்திரா. தற்போது விற்பனையில் இருக்கும் பொலிரோ காரில் டிரைவர் பக்கம் மட்டுமே ஒற்றை ஏர் பேக் வசதி வழங்கப்பட்டிருக்கும். இது டிரைவரின் பாதுகாப்பிற்கு மட்டும் போதுமானது. ஆனால், அவருக்கு அருகில் இருக்கும் கோ-டிரைவர் இருக்கையாளருக்கு பாதுகாப்பு வழங்க இத பயனளிக்காது.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு டிரைவருக்கான ஏர் பேக் வசதியுடன் சேர்த்து புதியதாக அவருக்கு அருகில் இருக்கும் பயணிக்கும் பாதுகாப்பை வழங்கும் வகையில் ஏர் பேக் வசதியை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வசதிக் கொண்ட பொலிரோவின் வருகை இந்த மாத இறுதிக்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

இரட்டை ஏர் பேக் வசதியைத் தொடர்ந்து இரட்டை நிற தேர்வும் புதிய பொலிரேவில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் டிசைனில் எந்த மாற்றமும் வழங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, புதிய சிவப்பு நிற பெயிண்ட் கான்ட்ராஸ்டான மற்றொரு நிறத்துடன் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

தற்போது பொலிரோ கார் வெள்ளை, வெள்ளியம் மற்றும் பழுப்பு ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஒற்றை நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதிலேயே புதியதாக இரட்டை நிற தேர்வுகள் சேர்க்கப்பட இருக்கின்றன.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

இதைத் தவிர வேறு மாற்றங்களையும் இந்த காரில் எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில், முன்னதாக வழங்கப்பட்ட ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட மியூசிக் சிஸ்டம் (ஆக்ஸ், யுஎஸ்பி வசதிக் கொண்டது), ஏசி, சாவியில்லா நுழைவு வசதி, பவர் ஸ்டியரிங் வீல் மற்றும் நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்ட பொலிரோவிலும் இடம் பெற்றிருக்கின்றன.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

தொடர்ந்து, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் பார்க்கிங் சென்சார் மற்றும் ஸ்பீடு அலர்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் பொலிரோவில் இடம் பெற்றிருக்கும். புதிய அப்டேட் செய்யப்பட்ட பொலிரோ காரில் 75 பிஎச்பி மற்றும் 210 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர், 3 சிலிண்டர் டீசல் எம்ஹாவ்க் 75 எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

பொலிரோ கார் மாடலை பாதுகாப்பான வாகனமாக மாற்றிய மஹிந்திரா... இரு நிற தேர்வையும் புதுசா கொடுக்க போறாங்க!

இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்கும். இது காரின் பின் வீலுக்கு இயங்கு திறனை கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த காரில் நான்கு வீல்கள் இயக்கம் கொண்ட தேர்வு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது விற்பனையில் இருக்கும் பொலிரோ ரூ. 8.71 லட்சம் தொடங்கி ரூ. 9.70 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதை விட சற்று அதிக விலையில் புதிய அப்டேட்டுகளை பெற்றிருக்கும் பொலிரோ எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra bolero to get dual airbag as standard feature soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X