நிச்சயம் வாங்க தூண்டும்... மிக மிக குறைவான விலையில் மஹிந்திரா இ-ஆல்ஃபா அறிமுகம்! செம்ம ஸ்டைலா வேற இருக்குங்க!

மஹிந்திரா இ-ஆல்ஃபா (Mahindra e Alfa) கார்கோ எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார்கோ ஆட்டோரிக்ஷாவின் விலை மற்றும் பிற சிறப்பம்சங்கள் பற்றிய விபரத்தை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

மஹிந்திரா குழுமத்தின் (Mahindra Group) துணை நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (Mahindra Electric Mobility Ltd), இ-ஆல்ஃபா (e-Alfa) எனும் பெயர் கொண்ட எலெக்ட்ரிக் கார்கோ ஆட்டோரிக்ஷாவை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இ-கார்ட் பிரிவில் தன்னுடைய நுழைவை குறிக்கும் விதமாக இந்த மூன்று சக்கர மின்சார வாகனத்தை மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த வாகனம் சரக்குகளைக் கையாள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.44 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இவ்வளவு குறைவான விலையில் மின்சார வாகனம் நாட்டில் விற்பனைக்கு வந்திருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

அதேவேலையில், இ-ஆல்ஃபா பயணிகள் வாகனமாக அல்லாமல் சரக்கு வாகனமாக விற்பனைக்கு வந்திருப்பது ஒரு சிலர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, மலிவு விலை மின்சார வாகனங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்கள் சற்றே கலக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அசத்தலான ஸ்டைல், கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக பயன்பாட்டு வசதிகளுடன் இ-ஆல்ஃபா விற்பனைக்கு வந்திருக்கின்றது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

இப்புதிய எலெக்ட்ரிக் கார்கோ ஆட்டோவை பயன்படுத்துவதன் வாயிலாக பல மடங்கு கூடுதல் சேமிப்பை பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு ரூ. 60 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடியும் என அது கூறியுள்ளது. டீசல் ஆட்டோக்களுக்கு இதைவிட பல மடங்கு செலவாவதைக் குறிப்பிட்டே மஹிந்திரா இதனை கூறியிருக்கின்றது. ஏற்கனவே, மஹிந்திரா நிறுவனம் ட்ரியோ ஜோர் (Treo Zor) எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

இது மூன்று விதமான வேரியண்டுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பயணிகள் பிரிவில் இவ்வாகனம் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே வர்த்தக மின்சார வாகன பிரிவிலும் தனது கால் தடத்தைப் பதிக்கும் விதமாக புதிய இ-ஆல்ஃபா கார்கோ ஆட்டோவை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

எலெக்ட்ரிக் ஆட்டோவில் 310 கிலோ வரை ஏற்றிச் செல்ல முடியும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், செல்போனை சார்ஜ் செய்வது போல மிகவும் சுலபமானது இந்த ஆட்டோவை சார்ஜ் செய்வது என மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதற்காக ஆஃப்-போர்டு 48 V/15 சார்ஜிங் திறன் இவ்வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

நகர்ப்புற பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இ-ஆல்ஃபா வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கேன் டெலிவரி, உள்ளூர் பார்சல் சர்வீஸ் போன்ற பயன்பாட்டிற்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும். மஹிந்திரா இ-ஆல்ஃபா கார்கோ ஆட்டோவில் ட்யூவ் ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.5 கிலோவாட் திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாகனம் உச்சபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் இயங்கக் கூடியது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

ஆகையால், இதனை பதிவு செய்யவோ அல்லது இவ்வாகனத்தை இயக்க லைசென்ஸோ தேவைப்படாது என கருதப்படுகின்றது. நாட்டில் மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைவான வேகம் திறன் கொண்ட வாகனத்தை இயக்க பதிவு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இ-ஆல்ஃபா கார்கோ ஆட்டோவை கூடுதல் சிறப்பான தயாரிப்பாக காட்டும் வகையில் மஹிந்திரா நிறுவனம் இதில், முழு டிஜிட்டல் திறன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை வழங்கியிருக்கின்றது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

இது பல்வேறு பயனுள்ள தகவலை வழங்கும். உதாரணமாக ரேஞ்ஜ், ஸ்பீடு, மற்றும் சார்ஜிங் மையங்கள் குறித்த தகவல் என பலவற்றை இது வழங்கும். ஒரூ யூனிட் மின்சாரத்திற்கு ரூ. 8 கட்டணம் என்றால், இ-ஆல்ஃபா எலெக்ட்ரிக் கார்கோ ஆட்டோவை முழுமையாக சார்ஜ் செய்து ஒரு கிமீ பயணிக்க வெறும் 59 பைசா மட்டுமே செலவாகும். இது வழக்கமான பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி கார்களைக் காட்டிலும் மிக மிக குறைவான செலவே ஆகும்.

மஹிந்திரா இ-ஆல்ஃபா கார் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசைப்படுவீங்க!

இ-ஆல்ஃபா கார்கோ அறிமுகம் குறித்து மஹிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமன் மிஸ்ரா கூறியதாவது, "குறைவான இயக்க செலவைக் கொண்டிருப்பதனால், பெட்ரோல்-டீசல் போன்ற எரிபொருளால் இயங்கும் 3 சக்கர வாகனங்களுக்கு எதிராக எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றன. மேலும், பல நிறுவனங்கள் இதை பயன்பாட்டிற்கு ஏற்க தொடங்கியிருக்கின்றன. இந்த பிரிவில் வாடிக்கையாளர் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் நாங்கள் இப்போது இ-ஆல்ஃபா கார்கோ இ-கார்டை அறிமுகப்படுத்துகிறோம்" என்றார்.

குறிப்பு: ஆல்ஃபா, ட்ரியோ பெயரில் கிடைக்கும் ஆட்டோக்களின் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Mahindra enters e cart segment with launch of e alfa cargo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X