கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா? மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட் கார் அறிமுகம்...

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 காரில் டர்போ ஸ்போட் எடிசன் காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் அதிவேக இன்ஜின் திறன் கொண்ட இந்த கார் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் . . .

மஹிந்திரா நிறுவனத்தின் முக்கியமான எஸ்யூவிகார் எக்ஸ்யூவி 300 இந்த காரின் டர்போ ஸ்போர்ட்ஸ் எடிசனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் TGDi இன்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகமாகியுள்ளது. 1.2 லிட்டர் எம்ஸ்டாலின் டிஜிடிஐ இன்ஜின் கொண்டுள்ள ஒரே எஸ்யூவி கார் இது தான். இந்த கார் குறைந்த விலையில், வேகமாகச் செல்லும் காரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் . . .

இந்த இன்ஜின் காருக்கு 250 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. இது இந்த செக்மெண்டில் உள்ள கார்களிலேயே சிறப்பான டார்க் திறனாகும். இந்த கார் தற்போது மொத்தம் 4 கலர்களில் கிடைக்கிறது. அதில் 3 டூயல் டோன் கலர்கள். பிளாஸிங் பிரான்ஸ் - கருப்பு நிற ரூஃப், நேபோளி பிளாக் - ஒயிட் ரூஃப், பியர்ல் ஒயிட்- கருப்பு நிற ரூஃப், மற்றும் பிளாஸிங் பிரான்ஸ் சிங்கிள் டோன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதில் பியர்ல் ஒயிட் மற்றும் நேபோளி பிளாக் நிறம் ஏற்கனவே இந்த காரில் இருக்கிறது. தற்போது இந்த டர்போ ஸ்போர்ட்ஸ் வெர்ஷனிலும் இருக்கிறது.

கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் . . .

மற்ற வேரியன்டிற்கும் இந்த டர்போ ஸ்போர்ட்ஸ் வேரியன்டிற்கு வித்தியாசம் ஏற்படுத்தும் வகையில் இதன் வெளிப்புற தோன்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் முகப்பு கிரின் பகுதியில் சிவப்பு நிற இன்சர்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இது போக இன் ஓஆர்விஎம் முழுமையாகக் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் . . .

இது போக க்ரோம் ஃபினீஷ் பெடல் மற்றும் டூயல் டோன் வெளிப்புறத் தோற்றம் ஆகிய மாற்றப்பட்டுள்ளன. மற்ற எல்லாம் வெளிப்புறத்தில் பழைய காரில் உள்ள அதே அம்சங்கள் தான்.

கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் . . .

மஹிந்திரா நிறுவனம் இந்த எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் 0-60 கி.மீ வேகத்தை வெறும்5 நொடியில் பிக்கப் செய்து விடும் என கூறியுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன 1.2 லிட்டர் டிஜிடிஐ டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5000 ஆர்பிஎம்மில் 130 பிஎஸ் பவரையும் 1500 மற்றும் 3750 ஆர்பிஎம்மில் 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் . . .

இந்த டர்போ ஸ்போர்ட்ஸ் எடிசன் மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் வெளியாகிறது. W6 TGDi, W8 TGDi, W8(O) TGDi ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இதில் W6 TGDi வேரியன்ட் மேனோ டோன் கலரில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ10.35 லட்சம், W8 TGDi வேரியன்ட் மேனோ டோன் மற்றும் டூயல் டோன் ஆகிய 2 வேரியன்டிலும் கிடைக்கிறது. இதன் மோனோ டோன் விலை ரூ11.65 லட்சம், டூயல் டோன் விலை ரூ11.80 லட்சமாகும். W8(O) TGDi வேரியன்டும் மோனோ மற்றும் டூயல் டோனில் கிடைக்கிறது. இதன் விலை ரூ 12.75 லட்சம் மற்றும் ரூ12.90 லட்சமாகும்.

கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் . . .

இந்த எக்ஸ்யூவி 300 காரின் டர்போ ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்கள், தற்போது டெஸ்ட் டிரைவ் செய்யக் கிடைக்கிறது. இந்த கார்களுக்கான புக்கிங் மற்றும் டெலிவரி வரும் அக்டோபர் 10ம் தேதி துவங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள மஹிந்திரா ஷோரூம்களில் இந்த காரை புக் செய்து கொள்ளலாம். இந்த காரின் உட்புறத்திலும் பாதுகாப்பு அம்சங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கம்மி விலையில இவ்வளவு வேகமான காரா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் . . .

முக்கியமாக இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும் என்றால் இந்த கார் ஆல்வீல் டிஸ்க் பிரேக் கொண்டது. இது போக முன்பக்க பார்க்கிங் சென்சார்,6 ஏர்பேக்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உடன் கூடிய இஎஸ்பி, ஏபிஎஸ், பயணிகளுக்கான ஏர்பேக் டிஆக்டிவேட் ஸ்விட்ச், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சீட்ஸ், கார்னர் பிரேக்கிங் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra launched XUV300 Turbo Sportz car launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X