டாடாவை ஓரங்கட்ட இதுதான் வழி... அஸ்திரத்தை கையில் எடுக்கும் மஹிந்திரா நிறுவனம்.. என்ன தெரிஞ்சா அசந்துடுவீங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார்குறித்த சூப்பரான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது என்ன என்பது பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இப்போதையே நிலவரப்படி இந்தியாவில் டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காருக்குதான் வரவேற்பு அதிகம். குறிப்பாக நிறுவனத்தின் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு மக்களின் பேரதாரவு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டாடாவை ஓரங்கட்ட இதுமட்டும்தான் வழி... அஸ்திரத்தை கையில் எடுக்கும் மஹிந்திரா நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களே அசந்துடுவீங்க!

இதைவிட குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றபோதிலும் நெக்ஸானுக்கே டிமாண்ட் அதிகம். இதற்கு குறைவான விலையில் அதிக சிறப்பு வசதிகள் அக்காரில் வழங்கப்படுவதே முக்கிய காரணம் ஆகும். இத்தகைய ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு ஆப்பு வைக்கக் களமிறங்கிக் கொண்டிருக்கின்றது மஹிந்திரா நிறுவனம்.

இந்நிறுவனம் நெக்ஸான் இவி-க்கு போட்டியளிக்க எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை களமிறக்க இருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. டிசம்பர் இறுதிக்குள்ளாக இந்த பணியை தொடங்கிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ப்ரீ புக்கிங் பணிகல் ஜனவரி 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லைங்க, ஜனவரி மாதத்திலேயே டெலிவரி பணிகளையும் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆகையால், நிச்சயம் டாடா நெக்ஸான் இவிக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 400 வெகு விரைவில் டஃப் கொடுக்க தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே தற்போது இந்த மின்சார கார் எத்தனை வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது என்பது பற்றி விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ், இபி மற்றும் இஎல் ஆகிய தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த வேரியண்டுகளை தனித்துவமானதாக காண்பிக்கம் வகையில் என்னென்ன சிறப்பு வசதிகள் பிரத்யேக வழங்கப்பட இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

இருப்பினும், 39.4kWh பேட்டரி பேக்கையே பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 456 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இது அராய் சான்றளித்திருக்கும் ரேஞ்ஜ் திறன் ஆகும். இதைத்தொடர்ந்து, எலெக்ட்ரிக் க150 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரும் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது. இதன் போட்டியாளனான நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் 40.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதை மிஸ் பண்ணிடாதீங்க: இந்த காரை தான் அதிகமா திருடிட்டு போறாங்களாம்... அப்படி என்ன பாதுகாப்பு வசதி குறைவா இருக்கிறது?இதை மிஸ் பண்ணிடாதீங்க: இந்த காரை தான் அதிகமா திருடிட்டு போறாங்களாம்... அப்படி என்ன பாதுகாப்பு வசதி குறைவா இருக்கிறது?

இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 437 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது மஹிந்திரா எக்ஸ்யூவி 400-ஐக் காட்டிலும் சற்று குறைவே ஆகும். இதேபோல் இதன் மோட்டார் திறனும் சற்று குறைவாக இருக்கின்றது. நெக்ஸான் இவி மேக்ஸில் 143 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது.

இதேபோல் சிறப்பம்சங்களில் சில இடங்களில் தான் பெஸ்டானது என மஹிந்திரா எக்ஸ்யூவி 400 நிரூபித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில் டிஜிட்டல் எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினாக்ஸ் மென்பொருள் வசதி, சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, டூயல் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள், டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv400 e car varient details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X