கண் சிமிட்டாம ரசிப்பாங்க! அவ்வளவு சூப்பரான காராக மாறியிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி..

சிறப்பு அலங்காரங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார காரை நிறுவனம் சிறப்பு ஏலத்தின் வாயிலாக விற்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் எக்ஸ்யூவி 400 இவி எலெக்ட்ரிக் காரின் வாயிலாக மீண்டும் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த கார் மாடலின் சிறப்பு பதிப்பு ஒன்றை உருவாக்கி, அதனை நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. வழக்கமான எக்ஸ்யூவி 400 இவி-யைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்புகள் தாங்கிய வாகனமாக இதனை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400

மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரியான பிரதாப் போஸ் மற்றும் பேஷன் டிசைனர் ரிம்சிம் தது ஆகியோர் இணைந்தே இந்த அட்டகாசமான எக்ஸ்யூவி 400 இவி-யை வடிவமைத்திருக்கின்றனர். இந்த காரை ஏலத்தின் வாயிலாக விறபனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது ஓர் ஸ்பெஷல் வாகனம் என்பதாலேயே இவ்வாறு விற்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நிறுவனத்தின் 'சஸ்டைனபிலிட்டி சாம்பியன்' விருதுகளை வென்றவர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் டிசம்பர் 10ம் தேதி அன்றே இந்த காரை மஹிந்திரா நிறுவனம் ஏலம் விட இருக்கின்றது. ஆனால், என்ன விலையில் இதன் ஏலம் தொடங்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் 18 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரையிலான விலையில் அது விற்கப்படலாம் என தெரிவிக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பை ஒரே ஒரு யூனிட் மட்டுமே உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இது மேலும் ஸ்பெஷல் தயாரிப்பாக பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமே இந்த காரின் ஸ்பெஷல் இல்லைங்க. இன்னும் பல சிறப்புகள் இந்த காரில் பொதிந்துள்ளன. அந்தவகையில், பிரத்யேக ஃபேப்ரிக் (துணியை) கொண்டு இந்த காரின் உட்பகுதி அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

இருக்கை மற்றும் ஹெட்ரேஸ்ட் போன்ற பகுதிகளில் அதனைக் காணலாம். இத்துடன், செப்பு நிறத்திலான தையல்களும் இந்த இருக்கைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வடிவமைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 'ரிம்ஜிம் தது எக்ஸ் போஸ்' எனும் எழுத்துக்கள் செப்பு நிற தையலால் எம்பிராய்டு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க இந்த காரின் வெளிப்புறத்தையும் நிறுவனம் ஸ்பெஷல் ப்ளூ நிறத்தால் அலங்கரித்திருக்கின்றது. இதுதவிர காரின் உட்புறத்தில் செய்ததைப் போலவே வெளிப்புறத்திலும் செப்பு நிற அக்செண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்துடன், பான்னெட், பூட் லிட், மற்றும் சி பில்லர் ஆகியவற்றிலும் இந்த செப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மஹிந்திராவின் ட்வின்-பீக் லோகோவிலும் இதே சிறப்பு நிற அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எக்ஸ்யூவி 400 இவி காருக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த காரில் பேட்டரி பேக்கை பொருத்த வரையில் 39.4 kWh திறன் கொண்ட பேட்டரி அமைப்பே பயன்படுத்தப்பட இருக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400

இத்துடன், 150 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரே எக்ஸ்யூவி 400 இவி-யில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மின்சார மோட்டார்கள் காரின் முன் பக்க ஆக்ஸில்களில் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும். அதேநேரத்தில் வெறும் 8.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எக்ஸ்யூவி 400 இவி எட்டிவிடும்.

எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 456 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய சூப்பரான ரேஞ்ஜ் திறனுடனயே விரைவில் இந்திய மின் வாகன சந்தையில் தனது கால் தடத்தை எக்ஸ்யூவி 400 இவி பதிக்க இருக்கின்றது. இதன் வருகை எதிர்நோக்கில இந்தியர்கள் ஏற்கனவே பெருத்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளைப் போலவே இந்த தயாரிப்பிற்கும் நல்ல வரவேற்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களின் இந்த அதீத எதிர்பார்ப்பிற்கு எக்ஸ்யூவி 400 இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களும் ஓர் காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், டிஜிட்டல் எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினாக்ஸ் மென்பொருள் வசதி, சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, டூயல் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள், டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்ட அம்சங்களே எக்ஸ்யூவி 400 இவியில் வழங்கப்பட்ட இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv400 ev auction soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X