இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

இந்தியாவில் தற்போது அதிக காத்திருப்பு காலம் கொண்ட 4 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

இந்திய ஆட்டோமொபைல் துறை சரிவில் இருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டுள்ளது. இங்கு தற்போது புதிய கார்களுக்கான தேவை தொடர்ந்து நல்ல நிலையில் இருந்து வருகிறது. ஒரு சில கார்களுக்கு, அதன் உண்மையான உற்பத்தி திறனை விட, அதிக தேவை காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த கார்களுக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

இந்த சூழலில் இந்திய சந்தையில் தற்போது மிகவும் அதிகமான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ள மிகவும் பிரபலமான 4 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். நடப்பு ஜூன் மாத நிலவரப்படி இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 - 21 மாதங்கள் வரை

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ள கார்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 உள்ளது. இந்த காரின் ஒரு சில வேரியண்ட்களை டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் 21 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த காரின் வசதிகளின் பட்டியலும், சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்திருப்பதே இதற்கு காரணம்.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

கியா கேரன்ஸ் - 18 மாதங்கள் வரை

கியா கேரன்ஸ் கார் நடப்பு 2022ம் ஆண்டில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கியா கேரன்ஸ் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு சுமார் ஒன்றரை வருடம் காத்திருப்பு காலம் நிலவி வருவதாக டீலர்ஷிப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த வேரியண்ட்களை டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் 18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

அதே நேரத்தில் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-டீசல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் சுமார் 8 மாதங்கள் வரை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற எம்பிவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு கியா கேரன்ஸ் முக்கியமான போட்டியாளராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

மாருதி சுஸுகி எர்டிகா - 9 மாதங்கள் வரை

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் பிரபலமான எம்பிவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா உள்ளது. குறைவான விலை மற்றும் சௌகரியம் என இரண்டும் கலந்த கலவையாக மாருதி சுஸுகி எர்டிகா இருப்பதுதான் இதற்கான மிக முக்கியமான காரணம். இந்த காரின் ஸ்டாண்டர்டு பெட்ரோல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 4 மாதங்கள் என்ற அளவில் இருப்பதாக டீலர்ஷிப் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 9 மாதங்கள் வரை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகா காரின் 2022 மாடலை வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கியா கேரன்ஸ் காரின் வருகையால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில், எர்டிகா காரை மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு விதங்களில் மேம்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

ஹூண்டாய் க்ரெட்டா - 6 மாதங்கள் வரை

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டா உள்ளது. இந்த காருக்கு தற்போது 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக டீலர்ஷிப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த காருக்கு 6 மாதங்கள் காத்திருப்பு காலம் என்பது மிகவும் அதிகமாக கருதப்படுகிறது.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டிற்குதான் 6 மாதங்கள் என்ற மிகவும் நீண்ட காத்திருப்பு காலம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் மற்ற வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருப்பதாக டீலர்ஷிப் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த கார்களை வாங்க வேண்டுமென்றால் ஒற்றை காலில் தவம் கிடக்கணும்... அவ்ளோ டிமாண்ட் இருக்கு!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு சமீப காலமாக போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்கனவே கியா செல்டோஸ் என்ற வலிமையான போட்டி மாடல் இருக்கும் நிலையில், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற புதுவரவுகளும் கோதாவில் குதித்துள்ளன. இந்த போட்டியை சமாளிப்பதற்காக க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra xuv700 kia carens maruti suzuki ertiga hyundai creta waiting period in june 2022
Story first published: Saturday, June 11, 2022, 19:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X