மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை மீண்டும் கணிசமாக அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அசத்தலான டிசைன், தொழில்நுட்ப அம்சங்களுடன் மிகவும் செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் ரூ.11.99 லட்சம் என்ற மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்ததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

அறிமுகம் செய்யப்பட்டு முதல் இரண்டு வாரங்களில் 65,000 பேர் புக்கிங் செய்தனர். இதனால், காத்திருப்பு காலம் பல மாதங்கள் எகிறியதால், புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், கடந்த அக்டோபர் மாதம் எக்ஸ்யூவி700 விலையை மஹிந்திரா அதிரடியாக உயர்த்தியது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

முதலில் புக்கிங் செய்த 50,000 பேருக்கு மட்டும் அறிமுகச் சலுகை விலை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், அதற்கு மேல் புக்கிங் செய்தவர்களுக்கு கூடுதல் சுமை தலையில் ஏறியதால் ஏமாற்றம் அடைந்தனர். அந்த அதிர்ச்சியுடன் தற்போது மீண்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆம், இந்த முறையும் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேஸ் வேரியண்ட் விலை ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.12.49 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.12.95 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, சில மாதங்களில் பேஸ் வேரியண்ட்டின் விலை கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தை நெருங்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது மஹிந்திரா எக்ஸ்யூவி700 வாங்கும் கனவில் மிதந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் MX5 என்ற பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட்டின் விலை அறிமுகச் சலுகையுடன் ஒப்பிடுகையில், ரூ.96,000 அதிகரித்துள்ளது. அதேபோன்று, AX7 என்ற பெட்ரோல் டாப் வேரியண்ட்டின் விலை ரூ.75,000 வரை அதிகரித்துள்ளது. தற்போது இந்த பெட்ரோல் டாப் வேரியண்ட் ரூ.22.04 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட MX5 என்ற பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.13.47 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக தற்போது மாறி இருக்கிறது. தற்போது விலை ரூ.48,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆனால், டீசல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட விலை உயர்ந்த AX7 வேரியண்ட்டின் விலை ரூ.23.80 லட்சம் அதிகரித்துள்ளது. அதாவது, விலை ரூ.81,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் புக்கிங் செய்த 50,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விலை உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதால், அதற்கு மேல் புக்கிங் செய்த அல்லது புக்கிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் உள்ள 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் உள்ள 2.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 182 பிஎச்பி பவரையும் 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். விலை குறைவான டீசல் வேரியண்ட்டுகளில் இருக்கும் எஞ்சின் 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மேலும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has increased XUV700 again upto Rs.81,000.
Story first published: Wednesday, January 12, 2022, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X