டாடா, ஹூண்டாய், மஹிந்திரா இந்த மூனுபேரும் சேர்ந்தாலும் மாருதியை இந்த விஷயத்தில் வீழ்த்த முடியாது!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் ஒட்டு மொத்தமாகப் பயணிகள் வாகன விற்பனை கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 30.92 சதவீதம் வளர்ந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டாப் 10 கார் நிறுவனங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

10. எம்ஜி

எம்ஜி நிறுவனம் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மாதம் மட்டும் மொத்தம் 4079 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே நவம்பர் மாதம் மொத்தம் 2481 கார்களை தான் விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 64 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவே கடந்த அக்டோர் மாதம் மொத்தம் 4367 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த விற்பனையை ஒப்பிடும் போது 6.59 சதவீதம் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.

டாடா, ஹூண்டாய், மஹிந்திரா இந்த மூனுபேரும் சேர்ந்தாலும் மாருதியை இந்த விஷயத்தில் வீழ்த்த முடியாது!

9. ஸ்கோடா

இந்த பட்டியலில் 9 இடத்தில் ஸ்கோடா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 4433 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் வெறும் 3389 கார்களை விற்பனை செய்திருந்தது. ஒரே மாதத்தில் 30.81 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனையை ஒப்பிட்டால் அப்பொழுது வெறும் 2196 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனை 101.87 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

8. ரெனால்ட்

இந்த பட்டியலில் 8வது இடத்தில் ரெனால்ட் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 6330 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 5052 கார்களை தான் விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 25.30 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 7778 கார்களை விற்பனை செய்திருந்தது. ஒரே மாதத்தில் 18.62 சதவீத வீழ்ச்சியையும் இந்நிறுவனம் சந்தித்துள்ளது.

7. ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 7051 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 9543 கார்களை விற்பனை செய்திருந்தது. ஒர மாதத்தில் 26.11 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் அப்பொழுது வெறும் 5457 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. இது 29.51 சதவீத வளர்ச்சியாகும்.

6. டொயோட்டா

கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 11,765 கார்களை விற்பனை செய்து டொயோட்டா நிறுவனம் இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்தாண்டு நவம்பர் மாதம் மொத்தம் 13,003 கார்களை விற்பனை செய்திருந்தது. இதை ஒப்பிட்டால் தற்போது 9.52 சதவீதம் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுவே கடந்த அக்டோர் மாத விற்பனையான 13,143 என்ற விற்பனையுடன் ஒப்பிட்டால் 10.48 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆண்டு விற்பனை மற்றும் மாத விற்பனை ஒப்பீடு ஆகிய இரண்டிலுமே இந்நிறுவனம் சரிவைச் சந்தித்துள்ளது.

5. கியா

கியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களில் 5வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 24,025 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 23,323 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. ஒரே மாதத்தில் 3.01 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. அதே நேரம் கடந்தாண்டு நவம்பர் மாதம் மொத்தம் 14,214 கார்களை விற்பனை செய்திருந்தது இத்துடன் ஒப்பிட்டால் 69.02 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

4. மஹிந்திரா

கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 30,392 கார்களை விற்பனை செய்து மஹிந்திரா நிறுவனம் இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு நவம்பர் மாதம் மொத்தமே 19,458 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த அக்டோபர் மாதம்32,298 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இத்துடன் கடந்த நவம்பர் மாத விற்பனையை ஒப்பிட்டாண்டு ஓராண்டில் 56.19 சதவீத வளர்ச்சியையும், ஒரு மாதத்தில் 5.90 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.

3. டாடா

டாடா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 46,037 கார்களை விற்பனை செய்திருந்தது.கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 45,217 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு நவம்பர் மாதம் மாெத்தம் 29,778 கார்களை விற்பனை செய்திருந்தது. இது ஒரு ஆண்டில் 54.60 சதவீத வளர்ச்சியையும், ஒரு மாதத்தில் 1.81 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் டாடா நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

2. ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனமும் ஒரு வழியாகக் கடந்த நவம்பர் மாதம் 2ம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது. கடந்த மாதம் மட்டும் 48,003 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு வெறும் 37,001 வாகனங்களைத் தான் விற்பனை செய்திருந்தது. இது 29.73 சதவீத வளர்ச்சியாகும். கடந்த அகடோபர் மாதமும் கடந்த நவம்பர் மாதத்தை விட 2 கார்கள் குறைவாக அதாவது 48,001 காரை விற்பனை செய்திருந்தது. கடந்த அக்டோபர் மாத விற்பனையை ஹூண்டாய் நிறுவனம் தக்க வைத்துள்ளது.

1. மாருதி

இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாகத் தொடர்ந்து நம்பர் 1 இடத்திலேயே இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 1,32,395 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் வெறும் 1,40,337 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில் 5.66 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனையான 1,09,726 வாகனங்களைத் தான் விற்பனை செய்திருந்தது. இது 20.66 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி நிறுவனம் தான் நீண்ட ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. அதன் பின் 2,3 மற்றும் 4ம் இடங்களில் உள்ள ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் ஒட்டு மொத்த விற்பனையைக் கூட்டினால் கூட மாருதி நிறுவனத்தின் விற்பனை அதிகமாக இருக்கிறது. இவர்கள் யாரும் கிட்டக் கூட நெருங்க முடியாத உயரத்தில் மாருதி இருக்கிறது. இதுநீண்ட காலமாக மாருதியின் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு பெரும் பெருமை என்றே சொல்லலாம்!

Most Read Articles

English summary
Maruti got to number 1 place as usual in top 10 cars brands list
Story first published: Monday, December 5, 2022, 16:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X