சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டம்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடலான ஆல்டோ கே10 (Alto K10) காரை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தயாரித்த புகழ்பெற்ற கார் மாடல்களில் ஆல்டோ கே10 (Alto K10)-ம் ஒன்று. இந்த காரை கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனையில் இருந்து வெளியேற்றியது. புதிய மாசு உமிழ்வு விதி உள்ளிட்ட கெடுபிடியே இக்காரின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதன் விளைவாக இப்போது இக்காரை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

இந்த சூழலை மாற்றியமைக்கும் முயற்சியிலேயே தற்போது மாருதி சுஸுகி களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு பேட்டியளித்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான கவுரவ் வங்காள், தற்போது இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களுக்கு மிகப் பெரிய ஓபனிங் இருப்பதாகவும், இதனை நிரப்ப தங்கள் நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

பல ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்கள் தற்போது சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றன. சில நிறுவனங்கள் தங்களின் முதன்மையான ஹேட்ச்பேக் கார் மாடல்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் எஸ்யூவி கார்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதனால் ஹேட்ச்பேக் கார்கள் குறைவான விற்பனை எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

இதுவே நிறுவனங்கள் பெரியளவில் மூவிங் இல்லாத ஹேட்ச்பேக் கார்களை வெளியேற்றும் திட்டத்தைக் கையில் எடுக்க காரணமாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மாருதி சுஸுகி மட்டும் மாற்று சிந்தனையாளியாக மாறியிருக்கின்றது. இது, என்ட்ரீ லெவல் ஹேட்ச்பேக் கார்களை மீண்டும் விற்பனைக்குக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

இது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் புதுமுக ஆல்டோ கே10 காரை ஒய்0எம் என்ற குறியீட்டு பெயரைக் கொண்டு அழைக்கத் தொடங்கியுள்ளது. இக்கார் விற்பனையில் இருந்தபோது ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனையாகிய காராகும். தற்போதும் இந்த வாகனத்திற்கு பட்ஜெட் கார்கள் பிரியர்கள் மத்தியில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதாக மாருதி சுஸுகி நம்புகின்றது.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

எனவேதான் என்ட்ரீ லெவல் ஹேட்ச்பேக் கார் சந்தையை மீண்டும் ஆளும் நோக்கில் நிறுவனம் விரைவில் ஆல்டோ கே10 காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றது. 2000, இந்த ஆண்டிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ காரை முதன் முதலில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு முதல் 2012 வரையில் முதல் தலைமுறை ஆல்டோவே விற்பனையில் இருந்தது.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

சுமார் 1.8 மில்லியன் யூனிட்டுகள் இந்த ஆண்டிற்குள்ளாகவே விற்பனையாகியது. அதேநேரத்தில், விற்பனைக்கு வந்த 20 வருடங்களுக்கு உள்ளாக 4.3 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையைக் கடந்து சாதனைப் படைத்தது. இந்தளவிற்கு மிக மிக சூப்பரான வரவேற்பைப் பெற்ற காராக ஆல்டோ உள்ளது. எனவேதான் இதனை மீண்டும் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் மாருதிசுஸுகி களமிறங்கியிருக்கின்றது.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஆல்டோவை மட்டுமின்றி இன்னும் சில கார்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. அந்தவகையில், வெகு விரைவில் நிறுவனம் விட்டாரா எனும் புதுமுக மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதனை டொயோட்டா உடனான கூட்டணியிலேயே நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இவ்வாகனத்தின் அறிமுகம் வரும் ஜூலை 20ம் தேதி அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் பிளானில் மாருதி சுஸுகி... ஆல்டோ கே10 காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது!

புதிய விட்டாரா மைல்டு மற்றும் ஸ்ட்ராங் என இரு விதமான ஹைபிரிட் வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வெர்ஷன் மாருதி சுஸுகியின் கே15சி மோட்டாராகும். ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட விட்டாராவில் டொயோட்டாவின் டிஎன்ஜிஏ மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவையிரண்டும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Maruti suzuki planning to bring back alto k10 here is full details
Story first published: Tuesday, July 5, 2022, 19:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X