ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

ரூ.6 லட்சம் செலவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரினை உரிமையாளர் ஒருவர் ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி காருக்கு இணையானதாக மாற்றியுள்ளார். இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸாவும் ஒன்றாக உள்ளது. அதேநேரம் இந்தியாவின் மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாகவும் விட்டாரா பிரெஸ்ஸா விளங்குகிறது.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

இதனால் இந்த காரில் ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு இணையான செயல்படுதிறனை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் இது பெரியதாக குறையாக இருந்ததில்லை. ஆனால் இங்கு ஒரு உரிமையாளருக்கு இது குறையாக இருந்திருக்கிறது போலும். ஏனெனில் கேரளாவை சேர்ந்த இந்த உரிமையாளர் தனது விட்டாரா பிரெஸ்ஸாவை ரேஞ்ச் ரோவரின் எவோக் எஸ்யூவி காருக்கு இணையானதாக மாற்றியமைத்து கொண்டுள்ளார்.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்களில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட விட்டாரா பிரெஸ்ஸா காரின் (மத்திய வேரியண்ட்) விலை ஏறக்குறைய ரூ.10 லட்சம். ஆனால் வாங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாடிஃபிகேஷனுக்கு சுமார் ரூ.6 லட்சம் வரையில் செலவாகியுள்ளது. இதில் ஆச்சிரியம் என்னவென்றால், இவ்வளவு தொகையும் காரின் காஸ்மெட்டிக் அலங்கரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Image Courtesy: Gafu Edits

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

அதாவது காரின் சட்டகம், என்ஜின் மற்றும் மற்ற இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விட்டாரா பிரெஸ்ஸா காரின் முன்பக்கத்தில் வழக்கமான க்ரில் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ரேஞ்ச் ரோவர் எவோக்கின் கருப்பு நிற க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் எவோக்கின் க்ரில் பகுதியில் வழங்கப்படும் க்ரோம் ஹைலைட்கள் எதுவும் இந்த மாடிஃபைடு காருக்கு வழங்கப்படவில்லை.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

ஆனால் ஹெட்லைட்கள் மற்றும் சில்வர் நிற சறுக்கு-தட்டு உள்ளிட்டவை அப்படியே எவோக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இந்த குறிப்பிட்ட விட்டாரா பிரெஸ்ஸாவின் முன்பக்க பம்பரில் பகல்நேரத்தில் எரியும் விளக்குகள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. உண்மையில், இந்த விளக்குகள் காரின் முன்பக்கத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பதாக உள்ளன.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

இவை எல்லாவற்றையும் விட எவோக்கின் தோற்றத்தை இந்த விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு நேர்-கட் ஃபெண்டர் தான் வழங்குகிறது. தட்டையான பொனெட் டிசைனை பார்க்கும்போது தெரிகிறது, இது எவோக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது. பக்கவாட்டு பகுதி பெரும்பான்மையாக வழக்கமான விட்டாரா பிரெஸ்ஸாவையே ஒத்து காணப்படுகிறது. இருப்பினும் அலாய் சக்கரங்களில் பிரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

அப்படியே பின்பக்கத்திற்கு வந்தால், பின்கதவு எவோக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப டெயில்லைட்கள் மற்றும் ஸ்பாய்லரும் எவோக்கில் இருந்து பெறப்பட்டுள்ளன. பின்பக்கத்திலும் சில்வர் நிற சறுக்கு-தட்டு, இரட்டை எக்ஸாஸ்ட் குழாய் அமைப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட விட்டாரா பிரெஸ்ஸா காரின் அனைத்து பில்லர்களும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

அதேபோல் மேற்கூரையும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காரின் வெளிப்புறத்தில்தான் மிக முக்கியமான மாடிஃபிகேஷன் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உட்புறத்தில் கதவு கைப்பிடிகள், ஏசி துளைகள் மற்றும் ஸ்டேரிங் சக்கர உள்ளிடுகள் சில்வர் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் டேஸ்போர்டு, கதவு கவர்கள் மற்றும் இருக்கைகள் உள்ளிட்டவை சிவப்பு நிற ஷேடை பெற்றுள்ளன.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

இவ்வாறு உட்புற அலங்கரிப்பும் ரேஞ்ச் ரோவர் எவோக் காருக்கு இணையானதாக மாற்றப்பட்டாலும், உட்புற தொழிற்நுட்ப அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், அதே 1.3 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜினே தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 90 எச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ரூ.6 லட்சம் செலவில் ரேஞ்ச் ரோவர் காராக மாற்றப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! கேரள உரிமையாளரின் புதிய முயற்சி

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆதலால் மற்ற விட்டாரா பிரெஸ்ஸா கார்களில் இருந்து தங்களது கார் தனித்து தெரிய வேண்டும் என விரும்புபவர்கள் டீலர்ஷிப் மூலமாகவும் தனிப்பயனாக்கி கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Maruti suzuki vitara brezza modified into range rover evoque find here all details and changes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X