கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா எனும் பெயர் கொண்ட புதுமுக காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பிரெஸ்ஸா எஸ்யூவி காரை சென்ற வாரம் வியாழக்கிழமை அன்று இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 7.99 லட்சம் இக்காருக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

புதிய பிரெஸ்ஸாவைத் தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் மற்றுமொரு புதுமுக காரை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. விட்டாரா (Vitara) எனும் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் மிட்-சைஸ் எஸ்யூவி காரையே நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த சம்பவம் எப்போது அரங்கேற உள்ளது என்கிற தகவலே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் புதிய மாருதி சுஸுகி விட்டாரா வரும் ஜூலை 20 ஆம் தேதி அன்று அரங்கேற இருப்பதாக தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சஷாங்க் ஸ்ரீவஸ்தவாவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், காரின் உற்பத்தி பணிகள் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட இருப்பதாகவும், அதற்கு பின்னரே அதனை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

ஆகையால், வரும் ஜூலை 20ம் தேதி அன்று விட்டாரா பொதுப்பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்படும் என நம்மால் யூகிக்க முடிகின்றது. அதேநேரத்தில் அன்றைய தினத்தில் காருக்கான புக்கிங் பணிகளும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரை, மாருதி சுஸுகி நிறுவனம் உலக சந்தைக்காகவும் உருவாக்கியிருக்கின்றது.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

ஆகையால், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் விட்டாராவை மாருதி நிர்வாகம் ஏற்றுமதி செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் விட்டாராவை வெளியேற்றிவிட்டு இந்த புதிய தலைமுறை விட்டாராவை அது வெளிநாடுகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்ல இருக்கின்றது.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

மாருதி சுஸுகி நிறுவனம் இக்காரை டொயோட்டா நிறுவனத்துடனான கூட்டணியின்கீழே உருவாக்கியிருக்கின்றது. அண்மையில், இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டாவிற்கான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

இதைத்தொடர்ந்து, மாருதி சுஸுகியும் அதற்கான தயாரிப்பாக உருவாகியிருக்கும் விட்டாராவை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. விட்டாரா மற்றும் ஹைரைடர், இரு கார்களும் சுஸுகியின் குளோபல்-சி பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பிளாட்பாரத்தின் சிறப்பம்சங்களுடனேயே பிரெஸ்ஸா, சியாஸ், எஸ்-கிராஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய விட்டாராவில் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை, 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் மோட்டார் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடனும், 1.5 லிட்டர் டிஎன்ஜிஏ மோட்டார் டொயோட்டாவின் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடனும் கிடைக்க இருக்கின்றன.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

Source:motorbeam

இதுமாதிரியான அம்சங்கள் தேர்வுகளுடனேயே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரிலும் எஞ்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இதில், டிஎன்ஜிஏ மோட்டார் 91 எச்பி பவரையும், 122 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. அதேநேரத்தில், கே15சி மோட்டாரானது 79 எச்பி மற்றும் 141 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது.

கொஞ்சம் நாள் காத்திருங்க... வர 20ம் தேதி விட்டாரா எனும் பெயரில் புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸுகி...

இத்தகைய சூப்பரான மோட்டார் தேர்வுடனேயே மாருதி சுஸுகியின் விட்டாரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதேநேரத்தில் சிறப்பு வசதியாக இக்காரில் சுஸுகியின் ஆல் கிரிப் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை கூடுதல் தேர்வாக நிறுவனம் வழங்க இருக்கின்றது. இந்த ஆல் கிரிப் அம்சத்தின் வாயிலாக பன்முக டிரைவிங் மோட்கள் போன்ற சிறப்பு வசதியை விட்ராவில் மாருதி சுஸுகி வழங்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki vitara to be Revealed on coming july 20
Story first published: Tuesday, July 5, 2022, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X