பேங்க் அக்கவுண்ட்ல ரூ15 லட்சம் விழுந்தா கூட இந்த காரை வாங்க முடியாது! விலைய தாறுமாறா வச்சிருக்காங்க!

மெர்சிடீஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஜிஎல்பி எஸ்யூவி காரை ரூ63.8 லட்சம் என்ற செலவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 7 சீட்டர் சொகுசு எஸ்யூவி காராக இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த கா்ர் குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெர்சிடீஸ் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்து வரும் ஒரு முன்னணி நிறுவனம். இந்நிறுவனம் தற்போது தனது ஜிஎல்பி என்ற 7 சீட்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் ஒரு பெட்ரோல் மற்றும் 2 டீசல் வேரியன்ட் கார்கள் தற்போது அறிமுகமாகியுள்ளது. மெர்சிடீஸ் ஜிஎல்பி 200 பெட்ரோல் காரை பொருத்தவரை ரூ63.8 லட்சம் என்ற விலையிலும், டீசல் கார்களாக ஜிஎல்பி 220 டி மற்றும் ஜிஎல்பி 220 டி 4எம் ஆகிய கார்கள் முறையே ரூ66.8 மற்றும் ரூ69.8 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

பேங்க் அக்கவுண்ட்ல ரூ15 லட்சம் விழுந்தா கூட இந்த காரை வாங்க முடியாது! விலைய தாறுமாறா வச்சிருக்காங்க!

பெட்ரோல் வேரியன்டான ஜிஎல்பி 200 காரை பொருத்தவரை 1.3 லிட்டர் டர்போ சார்ஜ்டு இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜினை கொண்டது. இது 161 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்மிலும், 250 என்எம் டார்க் திறனை 1620-4000 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை கொண்டது.முன்பக்க வீல் டிரைவில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.1 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 207 கி.மீ வேகம் வரை சீறிப் பாயும் அம்சம் இந்த காரில் இருக்கிறது.

அடுத்தாக டீசல் வேரியன்ட்களாக ஜிஎல்பி 220 டி மற்றும் ஜிஎல்பி 220டி 4எம் ஆகிய கார்களை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் இன்ஜினை கொண்டது. இது 188 பிஎச்பி பவரை 3800 ஆர்பிஎம்மிலும், 400என்எம் டார்க் திறனை 1600 மற்றும் 2400 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 220 டி வேரியன்ட முன்பக்க வீல் டிரைவிலும், 220டி 4எம் கார் 4 வீல் டிரைவிலும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 100 கி.மீ வேகத்தை வெறும் 7.6 நொடியிலும், அதிகபட்சமாக 217 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும் தன்மை கொண்டது.

இந்த காரின் டிசைனை பொருத்தவரை பாக்ஸி வடிவில் வெளிப்புறத்தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 7 சீட்டர் வே அவுட் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎல்பி கார் மெர்சிடீஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் இரண்டாவது 7 சீட்டர் காராகும். முதலில் ஏற்கனவே ஜிஎல்எஸ் என்ற காரை வெளியிட்டுள்ளது. இந்த காரின் முகப்பு பக்க கிரில்-ஐ பொருத்தவரை பெரிதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் ஹெட்லைட்கள் கொஞ்சம் உட்புறமாக இருக்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்களில் இருபக்கமும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பரில் பெரிய ஏர் டேம் செக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுஅதிகமான காற்றை உள்ள இன்ஜின் பகுதிக்குள் இழுப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியைப் பொருத்தவரை அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஓஆர்விஎம்கள் பாடியின் கலரிலேயே வழங்கப்பட்டுள்ளது.

பேங்க் அக்கவுண்ட்ல ரூ15 லட்சம் விழுந்தா கூட இந்த காரை வாங்க முடியாது! விலைய தாறுமாறா வச்சிருக்காங்க!

பின்பக்கத்தைப் பொருத்தவரை கட்ட வடிவில் எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இது போக முக்கிய டிசைனாக இந்த காரின் எக்ஸாஸ்ட் காரின் பின்பக்க பம்பர் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. உட்புறத்தைப் பொருத்தவரை 3 வரிசை சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3வது வரிசை குழந்தைகளுக்கு ஏற்றதாகவே இருக்கிறது. டேஷ்போர்டு மல்டி லேயர் அம்சங்களுடன் இருக்கிறது. இதில் இரண்டு 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலாகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்டாகவும் செயல்படும்.

இதுபோக ஏசி வென்ட்கள் டர்பைன் ஸ்டைலிலும், ஸ்டியரிங் வீல் பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீலாகவும் இருக்கிறது. இது போக பாதுகாப்பு அம்சமாக இந்த காரில் 7 ஏர்பேக், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், உங்கள் செல்போனை சார்ஜ் போட மல்டிபிள் யூஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகள் இருக்கிறது. இந்த காரின் பூட் பகுதியைப் பொருத்தவரை 130 லிட்டர் பூட் வசதி இருக்கிறது. இதில் மூன்றாவது வரிசையை மடக்கிவிட்டால் 500 லிட்டர் பூட்டாக இது மாறிவிடும்.

மெர்சிடீஸ் நிறுவனம் இந்த ஜிஎல்பி காரை இந்தியாவிற்குள் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இது தான் இந்த கார் அதிகமாக விலையில் இருப்பதற்கான காரணம். ஜிஎல்சி கார் இந்தியாவிலிருந்து வெளியேறும் வெற்றிடத்தை இந்த ஜிஎல்பி கார் நிரப்பும் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் ஜிஎல்சி கார் அடுத்த ஆண்டு புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவிற்குள் வரவிருக்கிறது.

Most Read Articles

English summary
Mecedes GLB 7 Seater suv car launched in india
Story first published: Friday, December 2, 2022, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X