இது பென்ஸோட மூனாவது எலெக்ட்ரிக் கார்... இந்தியர்களின் மனசுக்கு பிடிச்ச அம்சங்கள் உடன் விற்பனைக்கு வந்திருக்கு!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் மூன்றாவது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியர்களின் மனசுக்கு பிடித்த பன்முக சிறப்பம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் காரை பென்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த சொகுசு மின்சார கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் புதுமுக எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இக்யூபி எனும் மின்சார காரையே நிறுவனம் இன்று (டிசம்பர் 2) விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. ஏற்கனவே இந்திய சந்தையில் இக்யூஎஸ், இக்யூசி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே புதிதாக இக்யூபி மின்சார காரை அந்-நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்கள் வரிசையில் இணைந்துள்ளது.

எலெக்ட்ரிக் கார்

இது நிறுவனத்தின் மூன்றாவது மின்சார கார் மாடல் ஆகும். இதே கார் மாடல் ஐசிஇ மோட்டாருடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அந்த வாகனம் ஜிஎல்பி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் அறிமுகமும் இன்றையே தினமே இந்தியாவில் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்யூபி சொகுசு எலெக்ட்ரிக் காருக்கு அறிமுக விலையாக ரூ. 74.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎல்பி-யைக் காட்டிலும் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே அதிகம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்யூபி ஓர் மூன்று வரிசைகள் இருக்கை அமைப்புக் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

இதனை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இக்யூபி 300 மற்றும் இக்யூபி 350 ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதுமட்டுமில்லைங்க, இந்த காரை அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் காராக மெர்சிடிஸ் பென்ஸ் உருவாக்கியிருக்கின்றது. காரின் வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல உட்புறமும் அசத்தலானதாக தயார் செய்யப்பட்டுள்ளது. பிளாங்கட்-ஆஃப் கிரில், ட்வீக் ரக ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் உள்ளிட்டவை இக்யூபி காரின் வெளிப்புறத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அழகான தோற்றம் கொண்ட பம்பர், முழு அகல எல்இடி லைட் பார், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவற்றையும் இந்த காரில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. காஸ்மோஸ் பிளாக், ரோஸ் கோல்டு, டிஜிட்டல் ஒயிட், மவுண்டெயின் கிரே மற்றும் இரிடியம் சில்வர் ஆகிய ஐந்து விதமான தேர்வுகளிலேயே இக்யூபி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதேபோல் காரின் உட்பக்கமும் அட்டகாசமான பிரீமியம் அம்சங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் மின் விளக்கு, பவர்டு டெயில்கேட் மற்றும் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் முன் பக்க இருக்கை உள்ளிட்டவை இக்யூபி எலெக்ட்ரிக் வழங்கப்பட்டிருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார்

ஏற்கனவே கூறியதைப் போல் இந்த கார் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் இக்யூபி வேரியண்டில் 228 எச்பி பவர் மற்றும் 390 என்எம் டார்க்கை வழங்கும் மின்சார மோட்டாரும், இக்யூபி 350 இல் 292 எச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டாரும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கை பொருத்தவரை இரு கார்களிலும் ஒரே மாதிரியான திறன் கொண்டதே பயன்படுத்தப்பட்டுள்ளது.

66.5 kWh பேட்டரி பேக்கே இக்யூபி எலெக்ட்ரிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 423 கிமீ ரேஞ்ஜை தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்கிற்கு 8 ஆண்டுகள் வாரண்டியை வழங்க நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 25 நிமிடங்கள் போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

வழக்கமான 11 kW ஏசி சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்திலேயே இந்த அதிகபட்ச நேரத்தை இக்யூபி எலெக்ட்ரிக் கார் எடுத்துக் கொள்ளும். அதுவே, 100 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 32 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான வசதிகளுடனேயே மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூபி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த காரின் வருகை வால்வோ எக்ஸ்சி 40 எலெக்ட்ரிக் காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
Mercedes benz eqb e car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X