ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் காருக்கு ஆர்டர்கள் குவிகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், டாடா மோட்டார்ஸ் போன்ற பட்ஜெட் விலையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டுமல்லாது, சொகுசு கார் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

இதில், மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனமும் ஒன்று. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான், இக்யூஎஸ் 580 4மேட்டிக் (Mercedes-Benz EQS 580 4MATIC) எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சரியாக சொல்வதென்றால், கடந்த செப்டம்பர் 30ம் தேதிதான் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

இது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் மூலமாக இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே இருக்கும் சஹான் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

இங்குதான் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்களே ஆகும் நிலையில், இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு 300க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த தகவலை தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் ஆகும். 300 முன்பதிவுகள்தானே என ஒரு சிலர் இந்த விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடும். ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது தெரிந்தால், நீங்கள் ஆச்சரியமடைவீர்கள் என்பது உறுதி. இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் விலை 1.55 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

இவ்வளவு விலை உயர்ந்த ஒரு எலெக்ட்ரிக் காருக்கு இந்திய சந்தையில் 300க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான். மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் எலெக்ட்ரிக் காரில், 107.8 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 2 எலெக்ட்ரிக் மோட்டார்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

இவை ஒட்டுமொத்தமாக 523 பிஹெச்பி பவரையும், 856 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 857 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

இது அராய் அமைப்பு சான்று வழங்கிய எண்கள் என்பதால், நடைமுறை பயன்பாட்டில் ரேஞ்ச் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அப்படி குறைந்தாலுமே கூட மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் சிறப்பான ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான ரேஞ்ச் வழங்குவதுடன், செயல்திறனிலும் இந்த எலெக்ட்ரிக் கார் அமர்க்களப்படுத்துகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் கார் வெறும் 4.3 வினாடிகளில் எட்டி விடும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிலோ மீட்டர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகளும் உள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களில் எந்த அளவிற்கு வசதிகள் வழங்கப்படும் என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த மாடலாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் எலெக்ட்ரிக் காரை மாற்றியிருக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 850 கிமீ ஓடும் புதிய எலெக்ட்ரிக் கார்! அதுக்குள்ள இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா

தற்போது முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் புதிய இக்யூஎஸ் 580 4மேட்டிக் எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் முயற்சிகளில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Mercedes benz eqs 580 4matic luxury electric car receives over 300 bookings
Story first published: Wednesday, October 12, 2022, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X