பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

பிரேக் பிரச்சனையின் காரணமாக சுமார் 10 லட்ச பழைய பென்ஸ் கார்களை திரும்ப அழைப்பதாக மெர்சிடிஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

ஆட்டோமொபைல் வாகனங்கள் ஒன்றும் இயற்கையாக உருவாகுவதில்லை, மனிதர்களால் தயாரிக்கப்படுபவையே. ஆதலால் எவ்வளவு கவனமாக வேலை பார்த்தாலும் தவறுகளை முற்றிலுமாக, 100% தவிர்ப்பது என்பது முடியாத காரியமே. தற்போது கார்கள் தயாரிப்பில் பல மெஷின்கள் வந்துவிட்டாலும், அவற்றை இயக்குவது மனிதர்களே. ஒரு சில சமயங்களில், உற்பத்தி செய்யும்போது சரியாக தெரிந்த அளவுகள் பின்னர் காலத்தில் தவறாக தெரியலாம்.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

இவ்வாறான காரணங்களாலேயே பல ஆட்டோமொபைல் வாகனங்கள் கடந்த காலங்களில் தயாரிப்பு நிறுவனங்களால் பழுதை சரிச்செய்ய தொழிற்சாலைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் தற்போது ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் திரும்ப அழைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, விற்கப்பட்ட சுமார் 1 மில்லியன், அதாவது 10 லட்ச பென்ஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

இதற்கான அறிக்கையை சமீபத்தில்தான் மெர்சிடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்றாலும், அதற்கு முன்னதாக கடந்த ஜூன் 1ஆம் தேதியே KBA எனப்படும் ஜெர்மனியில் உள்ள கூட்டாட்சி போக்குவரத்து ஆணையம் இந்த தகவலை வெளியிட்டுவிட்டது. ஜெர்மனியை சேர்ந்த ஊடகம் ஒன்றிற்கு இந்த ஆணையம் அளித்த அறிக்கையில், கடந்த 2004இல் இருந்து 2015 வரையில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் எஸ்யூவி கார்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் உட்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

இந்த மெர்சிடிஸ் எஸ்யூவி கார்களில் எம்.எல் மற்றும் ஜி.எல் மாடல்கள் அடங்குகின்றன. அதுமட்டுமின்றி, மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதிலும் விற்பனை செய்யப்பட்ட ஆர்-கிளாஸ் லக்சரி மினி வேனும் இந்த திரும்ப அழைப்பில் உட்படுகின்றன. இதற்கான காரணமாக கூட்டாட்சி போக்குவரத்து ஆணையம் கூறுகையில், "பிரேக் பூஸ்டரில் அரிப்பு ஏற்படுகிறது.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

இது பிரேக் பெடலுக்கும், பிரேக்கிங் அமைப்புக்கும் இடையேயான மோசமான இணைப்புக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, சர்வீஸ் பிரேக் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தி கொள்ளலாம்" என குறிப்பிட்டுள்ளது. KBA -இன் அறிக்கையின்படி, 2004இல் இருந்து 2015ஆம் ஆண்டிற்குள் தயாரிக்கப்பட்ட வாகனங்களாக உலகளவில் சுமார் 9,93,407 பென்ஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

இதில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கார்கள் மெர்சிடிஸின் தாயகமான ஜெர்மனியில் விற்பனை செய்யப்பட்டவையாகும். இந்த திரும்ப அழைப்பு குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சார்பில், "இது சில வாகனங்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகளின் பகுப்பாய்வு. அதிகப்படியான அரிப்பு ஏற்படும் அரிதான சந்தர்ப்பங்களில், குறிப்பாக வலுவான பிரேக் அழுத்தத்தால் பிரேக் பூஸ்டருக்கு இயந்திர சேதம் ஏற்படலாம்.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

இதன் காரணமாக பிரேக் பெடல் மற்றும் பிரேக் அமைப்பிற்கு இடையேயான இணைப்பு தோல்வியடையும். இந்த மிகவும் அரிதான நிகழ்வில் பயன்பாட்டாளர்களால் சர்வீஸ் பிரேக் வாயிலாக பழுதை கண்டறிய இயலாது. இது சிறிய விபத்தில் இருந்து பெரிய அளவிலான விபத்திற்கு கூட வழிவகுக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திரும்ப அழைக்கும் நடவடிக்கையை விரைவாக துவங்கியுள்ளதாகவும் மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

இந்தியாவில் எத்தனை பென்ஸ் கார்கள் இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கையில் உட்படுகின்றன என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும், சம்மந்தப்பட்ட கார் உரிமையாளர்களை மெர்சிடிஸ் நிறுவனம் நிச்சயமாக தொடர்பு கொள்ளும். மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட பென்ஸ் கார்களை பயன்படுத்தி வருகிறீர்கள் எனில் அருகில் உள்ள மெர்சிடிஸ் டீலர்ஷிப் மையத்தை நேரடியாகவோ அல்லது தொலைப்பேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

இதுகுறித்து மெர்சிடிஸ் சார்பில் மேலும் தெரிவிக்கையில், "இந்த திரும்ப அழைப்பின்படி, பாதிக்கப்பட்ட வாகனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட உள்ளன. இதன் மூலம் பெறப்படும் முடிவுகளை பொறுத்தே வாகனத்திற்கு எத்தகைய பழுது பார்ப்பு வழங்கப்பட வேண்டும்? தொடர்புடைய பாகங்களை மாற்ற வேண்டுமா? என்பது தீர்மானிக்கப்படும்.

பிரேக் சிஸ்டம் சரியில்ல... சுமார் 10 லட்ச பென்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் மெர்சிடிஸ்!!

பரிசோதிப்பு நடந்து முடியும்வரையில் வாடிக்கையாளர்கள் அவர்களது வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கடைசியாக கடந்த மே மாத துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்ட 2022 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காரை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

Note: Images are representative purpose only.

Most Read Articles
English summary
Mercedes benz recalls nearly 10 lakhs cars globally
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X