மன நிறைவான காருக்காக பணத்தை கொட்டி கொடுக்க தயாரா?.. யாருமே எதிர்பார்த்திராத சூப்பரான திறன் கொண்ட கார்!

"இந்த மாதிரி ஒரு எலெக்ட்ரிக் காருக்காகதான் எல்லாரும் தவமா தவம் கெடுக்குறாங்க" என கூறுமளவிற்கு மிக சிறப்பான வசதிகளுடன் உருவாகியிருக்கும் எலெக்ட்ரிக் காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கான்செப்ட் மாடலாக உருவாக்கப்பட்ட விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் (Vision EQXX), எனும் கார் மாடலை வெளியீடு செய்தது. லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சிஇஎஸ் 2022 (CES 2022)-லேயே கார் வெளியீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த கான்செப்ட் காரை பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்தியிருக்கின்றது. இது ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராகும்.

இக்யூஎக்ஸ்எக்ஸ்

இந்த காரையே பென்ஸ் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நிறுவனத்தின் இந்த செயல் மெர்சிடிஸ் பென்ஸ் கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக மின்சார கார் பிரியர்களை இந்த காரின் காட்சிப்படுத்துதல் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிக திறன் வாய்ந்த காராகவே விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூன் மாதத்தில் இந்த காரை கொண்டு ஓர் மிகப் பெரிய சாதனையை பென்ஸ் நிறுவனம் படைத்தது. சிங்கிள் (ஓர் முழு) சார்ஜில் 1,202 கிமீ பயணம் மேற்கொண்டே அந்த கார் சாதனை படைத்தது. இந்த தகவல் இக்யூஎக்ஸ்எக்ஸ் மீது இன்னும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. இத்தகைய மிக சூப்பரான திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரையே விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பென்ஸ் நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது.

இக்யூஎக்ஸ்எக்ஸ்

அதிக கிமீ பயணித்து இந்த கார் சாதனை படைப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை இதே இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் ஓர் ஃபுல் சார்ஜில் 1008 கிமீ பயணித்து சாதனைப் படைத்தது. எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச ரேஞ்ஜிற்கு அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சூப்பரான பேட்டரி பேக்கே காரணமாக இருக்கின்றது. அதேவேலையில், இதுமட்டுமே அந்த காரின் அதிக ரேஞ்ஜிற்கு காரணம் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், இந்த அதிகபட்ச ரேஞ்ஜில் அக்-காரின் அட்டகாசமான ஏரோடைனமிக் தோற்றமும் ஓர் முக்கிய பங்காளியாக இருக்கின்றது. மேலும், 0.17 என்ற இழுவை குணமும் எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச ரேஞ்ஜிற்கு காரணமாக இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. பென்ஸ் நிறுவனம் இக்காருக்கு புதிய வடிவமைப்பு மொழியைப் பயன்படுத்தியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதன் அடிப்படையிலேயே மிக சிறப்பான ஏரோடைனமிக் தோற்றம் இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இக்யூஎக்ஸ்எக்ஸ்

இதுமட்டுமில்லைங்க, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திலான ஹெட்லைட், பம்பர் மற்றும் பானெட் உள்ளிட்டவை அந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவையே அந்த காரின் உச்சபட்ச கவர்ச்சியான தோற்றத்திற்கும் காரணாக உள்ளது. காரின் முகப்பு பகுதி மட்டுமல்ல பக்கவாட்டு மற்றும் பின் பக்கத்திலும் எக்கசக்கமான கண் கவர் அலங்காரப் பொருட்கள் பன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் காரை அதிக தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த காராகவும் உருவாக்கியிருக்கின்றது.

இதன் அடிப்படையில் காரின் உட்பகுதியில் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் பல வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. 47.5 அங்குல 8கே திறன் கொண்ட் ஓஎல்இடி திரை (உயர் ரக டிவியைப் போல் இது செயல்படும்), 3டி மேப், காக்டஸ் ரக லெதர், மூங்கிள் கார்பெட்டுகள் உள்ளிட்டவை காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுபோன்று எண்ணற்ற சிறப்பு வசதிகளால் காரின் தரம் வேற லெவலில் காட்சியளிக்கின்றது. 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கே இந்த எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

100 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கில் இருந்து வெளியாகும் 95 சதவீத ஆற்றல் அதன் சக்கரங்களுக்கு மட்டுமே செல்லும் வகையில் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட் காரில் 241.65 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி மேலே பார்த்தது போன்று எண்ணற்ற சிறப்பு வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக் காராகவே விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது விற்பனைக்கு வரும்போது இன்னும் பல கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Mercedes benz vision eqxx world premiere
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X