தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி... வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது...

எம்ஜி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான தனது விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் கணிசமான வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவிற்குள் வந்து விரைவாக வளர்ந்த நிறுவனம் எம்ஜி, இந்நிறுவனம் வெளியிட்ட பலர் கார்கள் மக்களால் ரசிக்கப்பட்டதால் விற்பனையும் பெருகுகிறது. இதனால் எம்ஜி நிறுவனம் இன்று இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு நிறுவனமாக வளர்ந்துவிட்டது. இந்நிறுவனம் கடந்த மாதம் அட்வான்ஸ்டு க்ளோஸ்டர் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

இதே போல எம்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் காரிலும் தடம் பிடித்துள்ளது. இதில் எம்ஜி ஸிஎஸ் இவி என்ற காரையும் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த காருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் எம்ஜி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான விற்பனை அறிக்கை மற்றும் இந்தாண்டின் 3ம் காலாண்டிற்கான விற்பனை அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் எம்ஜி நிறுவனம் மொத்தம் 3,808 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 3823 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதாவது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 3,241 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 2021 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த செப்டம்பர் மாதம் 567 கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இது 17.49 சதவீத வளர்ச்சியாகும்.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 15 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது வெறும் 0.39 சதவீத சரிவை மட்டும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஓராண்டில் எம்ஜி நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போத சரிவைச் சந்தித்திருந்தாலும் இது மிகப்பெரிய சரிவு எல்லாம் இல்லை மிகச் சிறிய சரிவை தான் சந்தித்துள்ளது.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

இதே அறிக்கையில் இந்த 2022ம் ஆண்டில் 3ம் காலாண்டு அதாவது இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த காலாண்டிற்கான விற்பனை அறிக்கையும் எம்ஜி நிறுவனத்திடமிருந்து வெளியாகியுள்ளது. இந்த காலாண்டில் எம்ஜி நிறுவனம் மொத்தம் 11,644 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2021ம் ஆண்டின் இதே காலாண்டு காலத்தில் மொத்தம் 11,781 கார்கள் விற்பனையாகியிருந்தது.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டான ஏப்-ஜூன் வரையிலான கால கட்டத்தில் மொத்தம் 10,519 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. அதாவது இந்த காலாண்டை அதே காலகட்டத்தில் 2021ம் ஆண்டில் நடந்த விற்பனையுடன் ஒப்பிடும் போது 137 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது இது 1.16 சதவீதம் விற்பனை சரிவாகும். ஆனால் இந்த மூன்றாம் காலாண்டை, இரண்டாம் காலாண்டின் விற்பனையுடன் ஒப்பிட்டால் 1,125 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது 10.69 சதவீத வளர்ச்சியாகும்.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் எம்ஜி அளித்த அறிக்கையின் படி இந்நிறுவனம் சரிவைச் சந்தித்த இடங்களில் மிகக் குறைவான சரிவையே சந்தித்துள்ளது. ஆனால் வளர்ச்சியைச் சந்தித்த காலகட்டங்களில் மிக அதிகமான வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. இதனால் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது என நாம் கருதலாம்.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

ஆட்டோமொபைல் துறையிலேயே இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை டிமாண்ட் சப்ளை செயின், நிறுவனத்தால் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு கார்களை தயாரிக்க முடிகிறது. அதில் எத்தனை கார்கள் விற்பனையாகிறது என்பது முக்கியம். எம்ஜி கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருந்தாலும் உற்பத்தி குறைவாகத் தான் இருக்கிறது. இதனால் எம்ஜி கார்களுக்கு 3-6 மாதம் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும் போது இது குறைவு தான் என்றாலும் வாடிக்கையாளர்கள் இதைப் பெரிதாக விரும்பவில்லை.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

இந்த விற்பனையைப் பொருத்தவரை இந்நிறுவனத்தின் ஹெக்டர் காருக்கு தான் நல்ல வரவேற்பு இருக்கிறது, அந்த கார் தான் அதிகமாக விற்பனையாகிறது என்பதை நமக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் அதே நேரத்தில் அஸ்டர் காருக்கும் டீசென்டான டிமாண்ட் இருக்கிறது. சிப் தட்டுப்பாடு காரணமாக அஸ்டர் காரின் மேனுவல் வேரியன்ட் தான் தற்போது வரை தயாரிக்கப்படுகிறது.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

தற்போது சிப் தட்டுபாடு மெல்ல மெல்ல சரியாகி வரும் நிலையில் அஸ்டர் காரின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் கார் விரைவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி நிறுவனம் தொடர்ந்து 4 ஆயிரம் கார்களை மாதத்திற்கு விற்பனை செய்து வருகிறது. அதற்கான டெலிவரி செயினைதான் எம்ஜி நிறுவனம் வைத்திருக்கிறது. அடுத்தாண்டு அஸ்டர் காருக்கு அதிகமான புக்கிங் வந்தால் டெலிவரி சிரமமாகிவிடும்.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

இதற்கிடையில் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் துவங்கிவிட்டது. பலர் தீபாவளியை முன்னிட்டு கார்களை வாங்க நினைப்பார்கள் அதனால் பொதுவாகவே அக்டோபர், நவம்பர் காலகட்டங்களில் கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டிற்கான விற்பனையை உயர்த்த பலர் இந்த காலகட்டத்தில்தான் முயற்சி செய்வார்கள். எம்ஜி நிறுவனமும் அதற்கான முயற்சியில் தான் இறங்கியுள்ளது.

தனக்கென தனி ராஜியத்தை உருவாக்கும் எம்ஜி . . . வளர்ச்சிக்கான அறிகுறி தெரியுது . . .

இந்நிறுவனம் ஹெக்டர் காரை அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த காரை தீபாவளிக்கும் காரை டீலர் ஷிப்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த கார் விரைவாக வந்தால் இந்தாண்டிற்கான விற்பனையில் எம்ஜி சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Mg motor India 2022 September and Q3 sales report
Story first published: Saturday, October 1, 2022, 16:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X