எதிர்பாராத சம்பவத்தை செய்யப்போகும் எம்ஜி! புதிய எம்ஜி 4 காரை களம் இறக்க முடிவு!

எம்ஜி நிறுவனம் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் 2 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று எம்ஜி 4 இவி என்ற எலெக்ட்ரிக் ஹேட்ச் பேக் கார். இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைந்ததிலிருந்த தனக்கென் பிரத்தியேகமான வாடிக்கையாளர்களை பிடித்துவிட்டது. இந்நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டர் கார் மார்க்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற காராக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் எம்ஜி நிறுவனம் பல கார்கள மார்கெட்டிற்கு வரிசையாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது. இதற்கிடையில் மாறி வரும் எலெக்ட்ரிக் டிரெண்டில் எம்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் எம்ஜி ஸி என் கார் மிகவும் பிரபலமான காராக இருக்கிறது.

எதிர்பாராத சம்பவத்தை செய்யப்போகும் எம்ஜி! புதிய எம்ஜி 4 காரை களம் இறக்க முடிவு!

இந்நிலையில் எம்ஜி நிறுவனம் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவிற்காக பெரும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனம் 2 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்கவுள்ளது. அதில் ஒன்று எம்ஜி 4 என சர்வதேச பிராண்டில் விற்பனையாகும் காரை இந்தியாவிற்குள் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் ஒரு ஹேட்ச் பேக் காராகும்.

எம்ஜி நிறுவனத்தின் இந்த எம்ஜி 4 கார் SAIC என்ற தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4287 மிமீ நீளமும், 1836 மிமீ அகலமும், 1506 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் அளவு 2705 மிமீ ஆகும்.டிசைன் அளவில் இந்த கார் சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளது. இந்த கார் சர்வதேச அளவில் ஃபோக்ஸ்வேகன் ஐடி 3 மற்றும் கியா நிரோ இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.

இந்த காரின் டிசைனை பொருத்தவரை இது கிராஸ் ஓவர் டிசைனை பெற்றுள்ளது. இது சைபர்ஸ்டர் ரோடுஸ்டர் கான்செப்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில கேரக்டர் லைன்கள், சிறப்பாக வடிவைமக்கப்பட்ட பானட், ஆங்குலர் ஹெட்லைட், அதற்கு மேல் எல்இடி டே டைம் ரன்னிங் லைட், வெளிப்புற முனைகளில் எல்இடி லைட்டிங் அம்சங்கள் ஆகியன இந்த காரில் இருக்கிறது. பக்கவாட்டில் 2 கேரக்டர் லைட்கள், இடம்பெற்றுள்ளது. பின்புறம் நீட்டிக்கப்பட்ட ஸ்பாய்லர்கள், ஆங்கில்டு டெயில் லைட், எல்இடி கிராஃபிக்ஸ்களுடன் கூடியபெரிய டெயில் லைட் அசெம்பிளி, கருப்பு நிற பின்புற பம்பர் ஆகியன இடம் பெற்றுள்ளது.

இந்த காரின் பேட்டரி பேக்கை பொருத்தவரை 51 கிலோ வாட் ஹவர் பேட்டரி மற்றும் 64 கிலோ வாட் ஹவர் பேட்டரி என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. 51 கிலோ வாட் ஹவர் பேட்டரியில் 170 எச்பி பவர் கொண்ட மோட்டரும், 64 கிலோ வாட் ஹவர் பேட்டரியில் 203 எச்பி பவர் கொண்ட மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மோட்டாரும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இரண்டும் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் இருக்கிறது.

இந்த காரின் பேட்டரி சார்ஜை பொருத்தவரை 7 கிலோ வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகுிறது. இது 10 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் ஏற்ற 51 கிலோ வாட் ஹவர் பேட்டரிக்கு 7.5 மணி நேரமும், 64 கிலோ வாட் ஹவர் பேட்டரிக்கு 9 மணி நேரமும் எடுத்துக்கொள்ளும். இது போக 150 கிலோ வாட் ஹவர் டிசி சார்ஜரும் வழங்கப்படுகிறது. இது 10 சதவீதத்திலிருந்து 80 சதவீத சார்ஜை ஏற்ற 51 கிலோ வாட் ஹவர் பேட்டரிக்கு 35 நிமிடமும், 64 கிலோ வாட் ஹவர் பேட்டரிக்கு 39 நிமிடமும் எடுத்துக்கொள்ளும். இந்த கார் முழு சார்ஜில் 51 கிலோ வாட் ஹவர் பேட்டரிக்கு 350 கி.மீ தூரமும், 64 கிலோ வாட் ஹவர் பேட்டரிக்கு 452 கி.மீ தூரமும் பயணிக்கும் திறன் கொண்டது.

இந்த காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிரைவர் டிஸ்பிளே, வயர் லெஸ் சார்ஜிங் பேட், சென்டர் கன்சோலை சுற்றி அதிக ஸ்டோரேஜ் இட வசதி, ஓவர் தி ஏர் அப்டேட் அம்சம் கொண்ட கனெக்டெட் கார் தொழிற்நுட்பம், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் சீட்கள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் உடன் கூடிய ஏடிஏஎஸ் ஆகிய இந்த காரில் இருக்கிறது.

இந்த காரை எம்ஜி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் இந்தியாவிற்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படலாம், அல்லது உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்தியா கட்டமைப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mg plans to showcase mg 4 ev in auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X