2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிற 2022 பிப்ரவரி மாதத்தில் கூடுதல் ரேஞ்ச் உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் முதல் முழு எலக்ட்ரிக் காராக கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இசட்.எஸ் இவி மாடலை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகவும் சில எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுள் இதுவும் ஒன்றாகும்.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

எம்ஜி இசட்.எஸ் இவி மாடலின் அப்டேட் வெர்சன் நம் இந்திய சாலைகளில் கடந்த சில மாதங்களில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறோம். காரின் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால், சோதனை ஓட்டங்களின்போது புதிய இசட்.எஸ் மாடல் முற்றிலுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தது.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

இருப்பினும் வருகிற பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் மிக முக்கிய மாற்றம் அதன் பவர்ட்ரெயினில் தான் கொண்டுவரப்பட உள்ளதாக தற்போது நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இசட்.எஸ் மாடலின் பேட்டரி தொகுப்பு மேம்படுத்தப்பட உள்ளதாம்.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் 72kWh மற்றும் 51kWh என்கிற இரு விதமான பேட்டரி தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 51kWh பேட்டரி தேர்வு மட்டுமே புதியதாக அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பேட்டரி தொகுப்பே தற்போதைய 44.5kWh பேட்டரி தொகுப்பை காட்டிலும் கூடுதல் இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கும்.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

இதனால் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் நிரப்பினால், அது காரை இயக்கி செல்லும் தொலைவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எம்ஜி இசட்.எஸ் இவி மாடலின் தற்போதைய ரேஞ்ச் 419கிமீ ஆக உள்ளது. இத்துடன், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் காரில் முக்கிய டிசைன் மாற்றங்கள் அனைத்தும் முன்பக்கத்தில் தான் வழங்கப்படும். இதன்படி கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய பம்பர்களை எதிர்பார்க்கிறோம்.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

அதேபோல் புதிய இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் பின்பக்கத்திலும் ரீஸ்டைலில் டெயில்லைட்கள் மற்றும் புதிய பம்பர்கள் வழங்கப்படலாம். இவை எம்ஜி மோட்டாரின் சமீபத்திய அறிமுகமான ஆஸ்டர் எஸ்யூவி காருக்கு இணையானதாக இருக்கும். ஆனால் அலாய் சக்கரங்களை ஆஸ்டருடன் ஒப்பிடுகையில் வித்தியாசமான டிசைனில் 2022 இசட்.எஸ் இவி மாடலில் எதிர்பார்க்கிறோம்.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

முன்பக்க க்ரில்லிற்கு பதிலாக, மெஷ்-போன்ற டிசைன் மற்றும் சார்ஜிங் துளை உடன் காரின் உடல் நிறத்தில் பேனல் வழங்கப்படலாம். இவற்றுடன் 2022 எம்ஜி இசட் இவி மாடல் உட்புறத்திலும் மாற்றங்களை பெற்றுவரும் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் மிகவும் குறைவானதாகவே இருக்கும். உட்புற கேபினின் ட்ரிம் மற்றும் உள்ளமைவுகள் சற்று திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படலாம்.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

கூடுதல் வசதிகளாக, வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜர், பெரியதாக 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை இந்த இ-எஸ்யூவி காரில் சேர்க்கப்படலாம். இவற்றுடன் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகளையும் (ADAS) புதிய இசட்.எஸ் இவி மாடலில் எதிர்பார்க்கிறோம். ஆனால் இது டாப் ட்ரிம் நிலையில் மட்டுமே கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

ஆஸ்டரின் உட்புற டேஸ்போர்டில் செயற்கை நுண்ணறிவு கொண்ட குட்டி ரோபோ ஒன்று ஓட்டுனரின் தனிப்பட்ட உதவிக்காக வழங்கப்பட்டிருந்தது. இது 2022 இசட்.எஸ் இவி காரிலும் புகுத்தப்படலாம். இத்தகைய அப்டேட்களினாலும், அளவில் சற்று பெரிய பேட்டரி தொகுப்பினாலும் எம்ஜி மோட்டாரின் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை சற்று அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் வரும் பிப்ரவரியிலா? ஆற்றல்மிக்க பேட்டரியை பெறவுள்ளதாம்...!

தற்சமயம் இந்திய சந்தையில் எம்ஜி இசட்.எஸ் இவி எஸ்யூவி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.49 லட்சங்களில் இருந்து ரூ.25.18 லட்சங்கள் வரையில் உள்ளன. இந்தியாவில் இந்த எம்ஜி எலக்ட்ரிக் காருக்கு ஹூண்டாயின் கோனோ இவி எஸ்யூவி நேரடி போட்டி மாடலாக விளங்குகிறது. அதேபோல் டாடா நெக்ஸான் இவி-யும் போட்டியாக உள்ளது என்றாலும், இவை இரண்டை காட்டிலும் டாடா எலக்ட்ரிக் காரின் விலை பல லட்சங்கள் குறைவானதாக உள்ளது.

Most Read Articles

English summary
Mg will introduce zs ev facelift in indian market in feb as per recent report
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X