கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

இந்தியாவில் கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களுக்கு கடந்த சில வருடங்களில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. எஸ்யூவி கார்கள் பொதுவாக, மைக்ரோ, சப்-காம்பெக்ட், காம்பெக்ட், நடுத்தர-அளவு மற்றும் முழு-அளவு என வகைப்படுத்தப்படுகின்றன.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

இதில் சப்-காம்பெக்ட் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களை நம் நாட்டில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். ஏனெனில் இவற்றின் விலைகள் பலருக்கு ஏற்றதாக, வாங்கக்கூடியதாக உள்ளது. இவற்றை காட்டிலும் அளவில் சிறிய மைக்ரோ எஸ்யூவி கார்கள் குறுகிய உட்புற கேபினினால் இன்னும் பெரியதாக வரவேற்பை பெறவில்லை.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

இதற்கு நேர்மாறான, முழு-அளவு எஸ்யூவி கார்கள் பெயருக்கு ஏற்ப பெரிய அளவிலான உடலமைப்பில் அதிகப்பட்சமாக 8இல் இருந்து 9 பேர் வரையில் பயணிப்பதற்கு உகந்த வாகனங்களாக உள்ளன. இவற்றிற்கு மத்தியில் உள்ள நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களும் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்றவைகளாக உள்ளதால், இவற்றிற்கும் ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர்.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

கடந்த 2022 பிப்ரவரி மாத விற்பனையை பொறுத்தவரையில், அதிகம் விற்பனையான நடுத்தர-அளவு எஸ்யூவி காராக கியா கேரன்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பிரிவில் இடம்பெற்றிருப்பினும், கேரன்ஸை எர்டிகாவிற்கு போட்டியாக, எம்பிவி ரக மாடலாகவே கியா அறிமுகப்படுத்தியது. ஆனால் கிட்டத்தட்ட எஸ்யூவி போன்றதான உடலமைப்பை கொண்டதினால், இதனை இந்த பிரிவில் இணைத்துள்ளோம்.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 5,109 கேரன்ஸ் கார்களை கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது நாம் எதிர்பார்த்த விற்பனை எண்ணிக்கையே ஆகும். ஏனெனில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் தான் புதிய கியா காராக கேரன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுவாக, புதியதாக அறிமுகமாகும் காரின் விற்பனை அடுத்த சில மாதங்களுக்கு சிறப்பானதாகவே இருக்கும்.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

கடந்த பிப்ரவரியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், கியா கேரன்ஸிற்கான முன்பதிவுகள் கடந்த 2022 ஜனவரி மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டன. இதனால் அந்த மாதத்திலும் 575 கேரன்ஸ் கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதாக கியா சார்பில் கடந்த மாதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், கேரன்ஸின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பிடுகையில் சுமார் 788.52% அதிகரித்துள்ளது.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

கடந்த 2022 பிப்ரவரியில் மொத்த நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனையில் கேரன்ஸின் பங்கு 26.30% ஆகும். இந்த கியா மாடலுக்கு அடுத்து இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான எக்ஸ்யூவி700 4,138 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதற்கு இணையாக 4,119 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

இந்த வகையில் இந்த மஹிந்திரா 7-இருக்கை எஸ்யூவி காரின் விற்பனை 0.46% அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில் எக்ஸ்யூவி700 மாடலின் பங்கு 21.30% ஆகும். கியா கேரன்ஸின் அறிமுகத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள மாடல்கள் என்று பார்த்தால், இந்த வரிசையில் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ள டாடா ஹெரியர் மற்றும் ஹூண்டாய் அல்கஸாரை சொல்லலாம். ஏனெனில் இவை இரண்டின் விற்பனையும் மாதம்-மாதம் ஒப்பிடுகையில் முறையே 3.07% மற்றும் 20.58% குறைந்துள்ளது.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

கடந்த மாதத்தில் மொத்தமாக 2,619 டாடா ஹெரியர் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முந்தைய ஜனவரி மாதத்தில் இந்த டாடா காரின் விற்பனை எண்ணிக்கை 2,702 ஆக பதிவாகி இருந்தது. அதுவே, 2022 ஜனவரியில் 3,168 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த ஹூண்டாய் அல்கஸார் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2,516 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

எம்ஜி மோட்டாரின் முதல் இந்திய காரான ஹெக்டர் இந்த வரிசையில் 5வது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. கடந்த மாதத்தில் 2,102 ஹெக்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2022 ஜனவரி (2,039 யூனிட்கள்) உடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையில் பெரியதாக மாற்றமில்லை. வெறும் 3.09%, அதாவது 63 யூனிட்கள் மட்டுமே அதிகரித்துள்ளது.

கியா கேரன்ஸிற்கு சவாலான போட்டி மாடலாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி700!! சரிவை காணும் ஹூண்டாய் அல்கஸாரின் விற்பனை

இதற்கு அடுத்து, ஹெரியரின் 3-இருக்கை வரிசை மாடலாக விளங்கும் டாடா சஃபாரி கடந்த மாதத்தில் 1,919 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2022 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட சஃபாரி கார்களை காட்டிலும் கிட்டத்தட்ட 58.60% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 1,210 சஃபாரி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சஃபாரிக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் கடைசி 7வது இடத்தில் 1,020 யூனிட்களின் விற்பனை உடன் ஜீப் காம்பஸ் உள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Mid size suv sales feb 2022 kia carens takes lead
Story first published: Wednesday, March 9, 2022, 13:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X