Just In
- 3 min ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 2 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 13 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
Don't Miss!
- Technology
5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!
- News
'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'.. தேஜஸ்விக்கு பாஜக செய்த ரகசிய கால் - போட்டு உடைத்த நிதீஷ் கட்சி
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Movies
முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஜூலை 13இல் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! முன்பதிவுகள் விரைவில் ஸ்டார்ட்!
2022 ஹூண்டாய் டக்ஸன் காரின் இந்திய அறிமுக தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நான்காம் தலைமுறை டக்ஸன் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்தியாவில் பெரியதாக வெற்றியை காணாவிடினும் ஹூண்டாய் டக்ஸன் மாடலின் 4ஆம் தலைமுறைக்கு சர்வதேச சந்தைகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

நான்காம் தலைமுறை டக்ஸன் காரின் இந்திய அறிமுக தேதி வருகிற ஜூலை 13 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய டக்ஸனுக்கான முன்பதிவுகளும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியர்கள் பெரியதாக கண்டுக்கொள்ளாவிடினும், வெளிநாட்டு சந்தைகளில் டக்ஸன் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை நல்லப்படியாகவே உள்ளது.

எந்த அளவிற்கு என்றால், இதுவரையில் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 70 லட்ச டக்ஸன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே டக்ஸனின் புதிய 4ஆம் தலைமுறை மாடலை ஹூண்டாய் நிறுவனம் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளது. புதிய டக்ஸன் மாடல்தான் ஹூண்டாயின் தற்போதைய லேட்டஸ்ட் டிசைன் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் காராகும்.

இதன்படி, எல்இடி ஹெட்லேம்ப் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட க்ரில் அமைப்பை முன்பக்கத்தில் புதிய டக்ஸன் பெற்றுள்ளது. அத்துடன் காரை சுற்றிலும் போதுமான அளவில் கூர்மையான லைன்கள் வழங்கப்பட்டுள்ளதால், புதிய ஹூண்டாய் டக்ஸன் உலகளவில் சிறப்பான தோற்றத்தை கொண்ட 5-இருக்கை க்ராஸ்ஓவர்களுள் ஒன்றாக உள்ளது.

இதனால் புதிய டக்ஸன் இந்தியர்களையும் கவரும் என ஹூண்டாய் நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது. கேபினை பொறுத்தவரையில், புதிய க்ரெட்டாவை பயன்படுத்தி வருபவர்களுக்கு பழக்கப்பட்டதாக தெரியும். இவை இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டேஸ்போர்டு தான் உள்ளது என்றாலும், புதிய டக்ஸன் மாடல் சற்று மெல்லியதான ஏசி துளைகள், டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் திரை உள்பட சற்று பிரீமியம் தரத்திலான பாகங்களை பெற்றுள்ளது.

இந்தியாவிலும் ADAS உள்பட அனைத்து விதமான அம்சங்களையும் கொண்ட டக்ஸன் காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இது நடக்குமேயானால், ADAS அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் ஹூண்டாய் காராக புதிய 4ஆம் தலைமுறை டக்ஸன் மாடல் விளங்கக்கூடும். சிறிய அளவிலான எஸ்யூவி கார்கள் சிலவற்றில் இருந்து பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியின் காரணமாக டீசல் என்ஜின் தேர்வு நீக்கப்பட்டாலும், பெரிய அளவிலான எஸ்யூவி கார்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு, டாடா ஹெரியர், சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இதனால் புதிய ஹூண்டாய் டக்ஸனிலும் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளை எதிர்பார்க்கிறோம். தற்போதைய 3ஆம் தலைமுறை டக்ஸன் காரில் அதிகப்பட்சமாக 150 எச்பி/192 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய பெட்ரோல் மற்றும் அதிகப்பட்சமாக 182 எச்பி/400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டரும், டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டரும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதுவரையில் இந்தியாவில் டக்ஸன் மாடலுக்கு வரவேற்பு கிடைக்காவிட்டாலும், புதிய டக்ஸன் மாடல் மீது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளது.

ஏனெனில் கடந்த காலங்களில் இந்திய சந்தையில் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களும், சிறிய அளவிலான எஸ்யூவி கார்களும் மட்டுமே பெரும்பான்மையாக விற்பனையாகி கொண்டிருந்தன. ஆனால் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் அளவில்-பெரிய எஸ்யூவி கார்களின் மீதும் தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு கிடைத்துவரும் முன்பதிவுகள் தான் சாட்சி.

ஆதலால் சரியான விலையினை நிர்ணயித்தால், டக்ஸன் கார்களையும் அதிகளவில் ஹூண்டாயால் விற்பனை செய்ய முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 மட்டுமின்றி, டாடா ஹெரியரும் புதிய ஹூண்டாய் டக்ஸனுக்கு போட்டியாக விளங்கக்கூடும். எப்படியிருந்தாலும், 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை க்ரெட்டா மத்திய-பிரீமியம் எஸ்யூவி கார்கள் பிரிவில் டக்ஸனுக்கு அனுகூலமான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
-
டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா... எலான் மஸ்கின் "மாஸ்" திட்டம்...
-
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!