Just In
- 2 hrs ago
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- 3 hrs ago
பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!
- 5 hrs ago
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- 7 hrs ago
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
Don't Miss!
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- News
‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விலை குறைவான மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் இப்படிதான் இருக்கும்!! புக் செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க...
மஹிந்திரா நிறுவனம் இந்த 2022ஆம் வருடத்தில் கவனத்தை பெறக்கூடிய சில கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான ஒன்றாக ஸ்கார்பியோ என் மாடலை சொல்லியே ஆக வேண்டும். மஹிந்திராவின் புதிய எஸ்யூவி காரான இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டாலும், டெலிவிரிகள் கடந்த 2022 செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் தான் துவங்கப்பட்டன.
இந்த ஆண்டு தீபாவளியை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டாலும், ஆரம்பத்தில் ஸ்கார்பியோ என் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான இசட்8 எல் தான் அதிகளவில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டன. அதன்பின் சில வாரங்கள் கழித்தே ஆரம்ப நிலை வேரியண்ட்களை முன்பதிவு செய்தவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கின. இதனால் எளிமையான தோற்றம் கொண்ட ஸ்கார்பியோ என் கார்களை அவ்வளவாக சாலையில் காண முடிந்திருக்காது.

ஆனால் நமது டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்களுள் ஒன்றான இசட்4-இன் படங்கள் நிக் ஸிக் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக கிடைத்துள்ளன. ஸ்கார்பியோ என் காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட் இசட்2 ஆகும். இதற்கு அடுத்த நிலையிலேயே இசட்4 உள்ளது. நமக்கு தற்போது கிடைத்திருக்கும் ஸ்கார்பியோ என் இசட்4 வேரியண்ட்டின் படங்கள் டீலர்ஷிப் மையம் ஒன்றின் வளாகத்திற்குள் எடுக்கப்பட்டவைகளாக உள்ளன.
மேலும், இந்த படங்களில் காட்சி தரும் ஸ்கார்பியோ என் காரின் பெட்ரோல் என்ஜின் ஆனது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. விலை குறைவான வேரியண்ட் என்பதால் இந்த காரில் ஹலோஜன் ஹெட்லேம்ப்களும், இரும்பு சக்கரங்களும் தான் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்களே கொடுக்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உட்பக்கத்தில் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக உள்ளது. இது பெட்ரோல் என்ஜினை கொண்ட வேரியண்ட் என்பதால் எலக்ட்ரிக் பவர் ஸ்டேரிங் தான் வழங்கப்பட்டிருக்கும். டீசல் வேரியண்ட்களில் தான் ஹைட்ராலிக் பவர் ஸ்டேரிங் சக்கரம் பொருத்தப்படுகிறது. ஸ்கார்பியோ என் காரின் இசட்4 வேரியண்ட்டில் ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள், மேனுவல் ஏசி, பின் இருக்கை வரிசையிலும் ஏசி உள்ளிட்டவற்றுடன் துணியால் உட்பக்க கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல் போன்ற வாகன பாதுகாப்பு அம்சங்களும் ஸ்கார்பியோ என் காரின் இந்த இசட்4 வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் ஸிப், ஸாப் மற்றும் ஸூம் என்ற 3 டிரைவ் மோட்கள் வழங்கப்படுகின்றன. நாம் இந்த படத்தில் பார்க்கும் ஸ்கார்பியோ என் இசட்4 காரில் 2.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 203 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. படத்தில் பார்க்கும் ஸ்கார்பியோ என் காரில் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் இந்த பெட்ரோல் என்ஜின் ஸ்கார்பியோ என் காரில் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் தேர்வில் அதிகப்பட்சமாக 10 என்எம் டார்க் திறன் கூடுதலாக கிடைக்கும்.
அதேபோல் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமில்லாமல் 2.2 லிட்டர் எம் ஹாவ்க் டீசல் என்ஜின் உடனும் மஹிந்திராவின் இந்த எஸ்யூவி கார் கிடைக்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 130 எச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதேநேரம் மற்ற வேரியண்ட்களில் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 175 பிஎச்பி வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பெட்ரோல் வேரியண்ட்கள் 2-சக்கர-ட்ரைவ் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் டீசல் வேரியண்ட்களை 4-சக்கர-ட்ரைவ் தேர்விலும் பெறலாம்.
Source: Instagram / Nick Zeek
-
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
-
கனடாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை செல்லும் காரா இது!! மணப்பெண்ணின் ரியாக்ஷன் தான் ஹைலைட்டே...
-
நீங்க வச்சிருக்க ஆக்டிவாலாம் வேஸ்ட்! கார்களுக்கே உரித்தான அம்சத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஆக்டிவா!