வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

கடந்த அக்டோபர் மாதத்திற்கான நிஸான் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

நடப்பாண்டு அக்டோபர் மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை நிஸான் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி நிஸான் இந்தியா நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 10,011 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், 3,061 கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 6,950 கார்களாக உள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நிஸான் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 116 யூனிட்கள் குறைந்துள்ளது. ஆனால் ஏற்றுமதி 2 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

தற்போதைய நிலையில் மேக்னைட் மற்றும் கிக்ஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை நிஸான் இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், மேக்னைட்தான் தற்போது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள நிஸான் கார் ஆகும். சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

நிஸான் மேக்னைட் காருக்கு இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை 5.97 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.79 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

நிஸான் நிறுவனம் மேக்னைட் எஸ்யூவி காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது. அதே நேரத்தில் இந்த கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

வரும் காலங்களில் நிஸான் மேக்னைட் காருக்கு போட்டி இன்னும் கடுமையாகவுள்ளது. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் சிறிய எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது. டாடா பன்ச் காருக்கு இது மிக முக்கியமான போட்டி மாடலாக இருக்கும்.

வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

அதே நேரத்தில் நிஸான் மேக்னைட் காருக்கும், ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த சிறிய எஸ்யூவி கார் விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையடுத்துதான், நிஸான் நிறுவனம் மேக்னைட் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

வாடிக்கையாளர்களை காந்தம் போல் இழுக்கும் மேக்னைட்... இந்தியால நிஸான் நிறுவனத்தை தூக்கி நிப்பாட்டியிருக்கு!

நிஸான் நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே, மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மிக பிரம்மாண்டமான வரவேற்பை வழங்கி வருகின்றனர். இது நிஸான் இந்தியா நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கார்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan india october 2022 sales report
Story first published: Sunday, November 6, 2022, 23:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X