ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களை புலம்ப விட்ட நிஸான்! 18ம் தேதி சர்ப்பிரைஸ்

நிஸான் நிறுவனம் வரும் 18ம் தேதி ஒரு சர்ப்ரைஸ் விஷயத்தைச் சொல்லப்போவதாக அறிவித்துள்ளது. இது என்னது புதிய காரா அல்லது வேறு ஏதாவது விஷயமா? வாருங்கள் இது குறித்து விரிவாகக் காணலாம்.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

நிஸான் இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் ஒரு முன்னணி நிறுவனம். இந்நிறுவனத்தின் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் கிக்ஸ், மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் மேக்னைட் ஆகிய கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகும். கார்கள். ஒரு காலத்தில் நிஸான் நிறுவனத்தின் கிட்டத்தட்ட எல்லா செக்மெண்டிலுமே கார்கள் இருந்தன. ஆனால் அவை எல்லாம் போதிய வரவேற்பு கிடைக்காததால் நிறுத்தப்பட்டுவிட்டன. இருந்தாலும் இந்தியாவில் எப்படியாவது தனக்கான ஒரு பெரும் இடத்தை பிடிக்க நிஸான் நிறுவனம் போராடி வருகிறது.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

இந்நிலையில் சமீபத்தில் நிஸான் நிறுவனம் வரும் அக்டோபர் 18ம் தேதி ஒரு சர்ப்பரஸ் ஒன்று இந்திய மக்களுக்குக் காத்திருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது அந்நிறுவனம் குறிப்பிட்ட அந்த நாளில் ஒரு புதிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவது தெரியவந்துள்ளது. இது குறித்து தற்போது வந்துள்ள தகவலின் படி நிஸான் நிறுவனம் தனது சர்வதேச பிராண்டில் உள்ள ஒரு காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

இது குறித்து விசாரிக்கும் போது இந்தியாவில் தற்போது பெரும் நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் கார்களில் இறங்கிவிட்டன. டாடா, எம்ஜி,ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்கிவிட்டன. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையே அதிகமாக இருக்கும் எனப் பலர் கணித்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் நிஸான் நிறுவனமும் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

நிஸான் நிறுவனத்திடம் தற்போது சர்வதேச பிராண்டில் லிஃப் என்ற எலெக்ட்ரிக் கார் இருக்கிறது. இந்த காரை இந்தியாவில் களம் இறக்க ஏற்பாடு நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டால் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக், மற்றும் எம்ஜி ஸிஎஸ் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

ஏற்கனவே இந்த செக்மெண்டில் தான் டாடா நெக்ஸான் இவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 400, பிஒய்டி அட்டோ 3 ஆகிய கார்களும் உள்ளன. இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 மற்றும் பிஒய்டி அட்டோ 3 கார் எல்லாம் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் இந்த காரும் 2023ல் விற்பனைக்கு வந்துவிட்டால் 2023 முழுவதுமே எலெக்ட்ரிக் கார்களின் பட்டாளம் களத்தில் இறங்கிவிடும். அதன் பின்பு மார்கெட்டில் பெரும் புரட்சியே ஏற்படும் எனச் சொல்லிவிடலாம்.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

நிஸான் லிஃப் எலெக்ட்ரிக் கார் சர்வதேச அளவில் இரண்டு வேரியன்ட்களாக வெளியாகிறது லிஃப் எஸ், மற்றும் எஸ்வி ப்ளஸ் ஆகிய வேரியன்ட்களில் உள்ளது. இதல் லிஃப்எஸ் வேரியன்டை பொருத்தவரை இதில் 40 கிலோவாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் 147 எச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

லிஃப் எஸ்வி ப்ளஸ் வேரியின்டை பொருத்தவரை 60 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டது இது 214 எச்பி பவரையும்339 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். லிஃப் எஸ் வேரியன்ட் கார் 40 கிலோவாட் ஹவர் பேட்டரி மூலம் 240 கி.மீ ரேஞ்சையும், லிஃப் எஸ்வி ப்ளஸ் வேரியன்ட் கார் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி மூலம் 341 கி.மீ ரேஞ்சையும் வழங்கும் திறன் கொண்டது.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

ஒரு வேளை நிஸான் லிஃப் இல்லை என்றால் மற்றொரு வாய்ப்பு நிஸான் ஆர்யா என்ற பெயரிலும் ஒரு எலெக்டரிக் காரில் சர்வதேச அளவில் தயாரித்து வருகிறது. இந்த காரும் 63 கிலோ வாட் ஹவர், 87 கிலோ வாட் ஹவர் என இரண்டு பேட்டரி ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் முழு சார்ஜில் 500 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரின் அம்சங்கள் எல்லாம் உயர்தர அம்சங்களாக பெஆரத்தப்பட்டுள்ளன.

ஒரு வேளை இதுவா இருக்குமோ, இல்ல அதுவா இருக்குமோன்னு போட்டியாளர்களைப் புலம்ப விட்ட நிஸான் . . . 18ம் தேதி நடக்கபோறது செம மாஸ் . . .

இந்த காரும் இல்லை என்றால் நிஸான் நிறுவனத்திடம் ஸி என்ற ஸ்போர்ட்ஸ் காரும், எக்ஸ்-டிரையல் என்ற எஸ்யூவி காரும் சர்வதேச பிராண்டில் இருக்கிறது. இதில் ஒன்று கூட இந்தியாவிற்கு வரலாம். ஆனால் நிச்சயம் எலெக்ட்ரிக்க காராக தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது. இன்னும் 6 நாட்கள் தானே பொறுத்திருந்து பார்ப்போம்...

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan may make a big announcement on October 18
Story first published: Wednesday, October 12, 2022, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X