நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா! நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க.. மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்!

நிஸான் நிறுவனம் மூன்று புதுமுக கார்களை இந்திய சந்தையில் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

நிஸான் நிறுவனம் இன்று ஒரே நாளில் மூன்று புதுமுக வாகனங்களை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. சரவெடி பட்டாசை மிஞ்சும் அளவிற்கு நிறுவனத்தின் இந்த அடுத்தடுத்த வெளியீடு இந்தியாவில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. நவம்பர் 18, இன்றைய தினத்தில் நிஸான் நிறுவனம் கார் ஒன்றை வெளியீடு செய்ய இருப்பதாக மட்டுமே கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

இந்த மாதிரியான சூழலில் ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தையும் அதகளப்படுத்தும் வகையில் நிஸான் நிறுவனம் மூன்று புதுமக கார் மாடல்களை வெளியீடு செய்துள்ளது. அனைத்தும் எஸ்யூவி ரக கார் மாடல்களாகும். எக்ஸ்-டிரெயில் (Nissan X-Trail), காஷ்காய் (Nissan Qashqai) மற்றும் ஜூக் (Nissan Juke) ஆகிய புதுமுக கார்களையே நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வெளியீட்டு நிகழ்வு இந்தியாவிற்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்குமானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் சூப்பரான விற்பனை எண்ணிக்கையைப் பெற்று வருகின்றது. இந்த மாதிரியான சூழல் இந்தியாவில் நிலவுகின்ற காரணத்தினாலேயே தனது இந்த மூன்று எஸ்யூவி கார்களின் வெளியீட்டை இந்தியாவை மையமாகக் கொண்டு நிஸான் செய்திருக்கின்றது.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

நிஸான் அறிமுகம் செய்திருக்கும் எக்ஸ்-டிரெயில் எட்டாம் தலைமுறை வெர்ஷன் ஆகும். எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த கார் இந்திய சந்தையை வந்தடைய இருக்கின்றது. ஏற்கனவே இந்த காரின் சோதனையோட்டத்தை நிறுவனம் இந்தியாவில் தொடங்கிவிட்டது. ஆகையால், எப்போது வேண்டுமானாலும் இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

இதேபோல், காஷ்காய் எஸ்யூவி காரின் சோதனையோட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. காஷ்காய் மற்றும் எக்ஸ்-டிரெயில் இவையிரண்டைக் காட்டிலும் சற்று சிறிய காராக ஜூக் உருவாக்கப்பட்டுள்ளது. கிரெட்டா மற்றும் செல்டோஸ் போன்ற எஸ்யூவி கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் ஜூக் கார் மாடலை நிஸான் தயார்படுத்தியிருக்கின்றது.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

அதேவேலையில், இந்த மூன்றில் நிஸான் நிறுவனம் எக்ஸ்-டிரெயில் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. சோதனையோட்டம் தற்போது தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது. இது வெற்றிகரமாக நிறைவுறும்பட்சத்தில் இதன் விற்பனைக்கான வெளியீடு அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, நிஸான்.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

நிஸான் பிராண்டின் இ-பவர் டிரைவ் எனும் ஹைபிரிட் சிஸ்டமே எக்ஸ்-டிரெயிலில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த தொழில்நுட்பமே காரை மின்சார திறனிலும் ஓடக் கூடியதாக மாற்றியிருக்கின்றது. இதன் அடிப்படையில் பிரத்யேக 150 kW எலெக்ட்ரிக் மோட்டார் முன் பக்க வீலிலும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் வேரியபிள் கம்பிரஸன் ரேஷியோ டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றன.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

இத்தகைய அம்சங்களுடன் எக்ஸ்-டிரெயில் விற்பனைக்கு வருமானால் அது நிச்சயம் மாருதி சுஸுகியின் அதிகம் மைலேஜ் தரும் ஹைபிரிட் காரான கிராண்ட் விட்டாராவிற்கு மிக சிறப்பான போட்டியாளானாக அமையும். இந்த காருக்கு மட்டுமல்ல டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கும், இதன் வருகை மிகப் பெரிய போட்டியாக அமையும்.

நீங்க வெக்குறது எல்லாம் ஒரு சரவெடியா... நிஸான் வெடிச்சிருக்க வெடிய பாருங்க... முக்கியமா மாருதியை ஓரங்கட்ட தயாரானது நிஸான்...

எக்ஸ்-டிரெயில் வழங்கப்படும் ஹைபிரிட் அம்சத்தை தனியாக சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்காது. அது காரின் ஓட்டத்திலேயே தானாக சார்ஜாகிவிடும். இதற்காக 12வோல்ட் மைல்டு ஹைபிரிட் செட்-அப்பையே எக்ஸ்-டிரெயிலில் நிஸான் வழங்க இருக்கின்றது. இந்த காரை போலவே அடுத்தடுத்தாக வெளியீட்டைப் பெற இருக்கும் கார்களும் அதிநவீன அம்சங்களைக் கொண்டதாகவே இருக்கும். இந்த கார்களின் வாயிலாகவே எதிர்காலத்தில் இந்திய சந்தையை முழுமையாக ஆள நிஸான் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan unveiled suv line up for india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X