டாடாவையே என்ன சேதினு கேக்க போறாங்க! மிகவும் குறைவான விலையில் வருகிறது ஓலா எலெக்ட்ரிக் கார்! இவ்ளோ கம்மியா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு (Electric Two Wheelers) தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி கொண்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்திலேயே, இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக ஓலா எலெக்ட்ரிக் உருவடுத்துள்ளது.

தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 (S1) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) விற்பனை செய்து வருகிறது. ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air), ஓலா எஸ்1 ஸ்டாண்டர்டு (Ola S1 Standard) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) என மொத்தம் 3 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இந்த சூழலில், இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களையும் (Electric Motorcycles) விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

டாடாவையே என்ன சேதினு கேக்க போறாங்க! மிகவும் குறைவான விலையில் வருகிறது ஓலா எலெக்ட்ரிக் கார்! இவ்ளோ கம்மியா!

வரும் 2024ம் ஆண்டு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2 புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்பதை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) உறுதி செய்துள்ளார். இதில் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரீமியமான மாடலாக இருக்கும். எனவே இதன் விலையும் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் மற்றொரு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாஸ் மார்க்கெட்டிற்கான மாடலாக இருக்கும். எனவே இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் குறைவான விலையிலும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை களமிறக்கவுள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் தவிர, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் கார் (Ola Electric Car) குறித்தும், பாவிஷ் அகர்வால் பேசியுள்ளார். இதன்படி புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் வரும் 2024ம் ஆண்டு அறிமுகம் செய்வதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முதலில் செடான் ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவுள்ளது. இதை தொடர்ந்து வரும் 2025ம் ஆண்டு, எஸ்யூவி ரகத்தில் பிரீமியமான எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்வதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் விலையும் சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் மிகவும் குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் வரும் 2026ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு முறையான எலெக்ட்ரிக் கார் என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாகதான் உள்ளது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நடப்பு 2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.50 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டும் வைத்து கொண்டு (3 வேரியண்ட்கள்) ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இமாலய விற்பனை எண்ணிக்கையை தொட்டுள்ளது. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்யவுள்ள தயாரிப்புகளின் எண்ணிக்கை உயரவுள்ளதால், அந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எதிர்காலத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. ஒரே நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் சேர்த்து, எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் கார் என பல விதமான தயாரிப்புகளை விற்பனை செய்யவிருப்பதும் இந்திய சந்தையில் மிகவும் புதுமையான ஒரு விஷயம்தான் என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ஆனால் செல்வந்தர்களுக்காக பிரீமியம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், நடுத்தர வர்க்க மக்களுக்காக மிகவும் குறைவான விலையிலும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சவால் அளிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

Most Read Articles
English summary
Ola electric motorcycles car india launch timeline
Story first published: Wednesday, December 28, 2022, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X