ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் காரை நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியீடு செய்ய உள்ளது. இந்த நிலையில் இந்த முதல் ஓலா காரை பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவை என்னென்ன என்பதை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆரம்பத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், எலக்ட்ரிக் பைக்குகள் என எலக்ட்ரிக் 2 சக்கர வாகனங்கள் மீது இருந்த இந்த தேவை மெல்ல மெல்ல நான்கு சக்கரங்களை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கமும் விரிவடைந்து வருகிறது.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

இதற்கு டாடா மோட்டார்ஸின் டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி கார்களின் விற்பனை தான் சாட்சியாகும். இதனை நன்கு புரிந்துக்கொண்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விரைவில் தனது முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மூலம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைந்த ஓலா எலக்ட்ரிக், வரவிருக்கும் 2022 சுதந்திர தினத்தில் முதல் எலக்ட்ரிக் காரை களமிறக்குகிறது.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் செடான் உடலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த எலக்ட்ரிக் காரின் உயரம் குறைவாகவும், கார் நன்கு தாழ்ந்ததாகவும் இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய முதல் டீசர் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டது.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

அந்த டீசரில், காரின் தோற்றம் வெளிப்படையாக காட்டப்படவில்லை என்றாலும், U-வடிவ ஹெட்லேம்ப்கள் மற்றும் கிடைமட்டமான ஸ்ட்ரிப் உடன் முற்றிலும் அட்வான்ஸான ஸ்டைலில் முன்பக்கத்தை ஓலா எலக்ட்ரிக் செடான் கார் கொண்டிருந்ததை காண முடிந்தது. முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் ஹெட்லைட் & டெயில்லைட்கள் மெல்லிய விளக்கு பார்-ஆக காரின் முழு அகலத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

இவை எல்லாம் ஏற்கனவே வெளிவந்த விஷயங்களே. இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் சுமார் 500+ கிமீ ரேஞ்ச் உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 500கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்க முடியுமாம்.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

இது உண்மையில் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயமாகும். ஆதலால்தான், இந்த ரேஞ்ச் அளவை பிரதான விளம்பர அம்சமாக ஹைலைட் படுத்தி ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரை வெளியீடு செய்கிறது. தனது முதல் எலக்ட்ரிக் காரை 500கிமீ ரேஞ்ச் உடன் அறிமுகப்படுத்துவது என பல மாதங்களுக்கு முன்பே ஓலா நிறுவனம் முடிவெடுத்துவிட்டது.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

மற்றப்படி, ஓலா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்த விபரங்கள் தற்போதைக்கு இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ரேஞ்ச் அளவை வைத்து பார்க்கும்போது ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் எம்ஜி இசட்.எஸ் இவி உள்ளிட்டவற்றிற்கு விற்பனையில் நேரெதிர் போட்டியாக விளங்கும்.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

நமது தமிழகத்தில் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வாக பாவிஷ் அகர்வால் செயல்பட்டு வருகிறார். இவர் சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ்-ஆக இருக்கக்கூடியவர். கடந்த ஆண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும்போது எவ்வாறு தீவிரமாக செயல்பட்டு வந்தாரோ அதேபோன்று, இந்த எலக்ட்ரிக் காரின் அறிமுகத்திலும் பாவிஷ் அகர்வால் மிகவும் முனைப்பு காட்டி வருகிறார்.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

இதன்படி அவ்வப்போது இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய அறிவிப்புகளையும், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமான பதிவுகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பதிவிட்டு வருகிறார். இதுவரையில் இவர் பதிவிட்ட பதிவுகளின்படி பார்க்கும்போது, இந்தியாவில் தற்போதுவரையில் உருவாக்கப்பட்ட கார்களிலேயே மிகவும் ஸ்போர்டியான தோற்றம் கொண்ட காராக இந்த எலக்ட்ரிக் கார் வெளிவரவுள்ளது என்பது மட்டும் உறுதி.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

இதனால் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய தோற்றத்தில் ஓலாவின் முதல் காரை எதிர்பார்க்கலாம். ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ தனித்துவமான ஸ்டைலால் பலத்தரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதேபோல் இந்த எலக்ட்ரிக் காரும் இணையத்தில் வைரலாகும் என்று இப்போதே கணிக்கப்பட்டுள்ளது.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார்... எல்லாத்தையும் தூக்கி சாப்ட்றும் போலருக்கே!! ஆக.15இல் அறிமுகம்!

அதுமட்டுமின்றி, தற்போதைய மாடர்ன் கார்களின் வசதிகளை பெற்று வருவது மட்டுமில்லாமல், அதிநவீன தொழிற்நுட்பங்கள் பலவற்றையும் ஓலா எலக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கலாம். இவ்வாறு மிகுந்த கவனத்தை ஈர்த்திருக்கும் ஓலாவின் முதல் எலக்ட்ரிக் காரின் பெயர் என்னவாக இருக்கும்? இதன் விலைகள் எந்த அளவில் இருக்கும்? என்பதை அறிய நாம் இன்னும் 1 நாள் காத்திருந்தால் போதும்.

Most Read Articles

English summary
Ola unveil its first electric car with 500 plus km range
Story first published: Saturday, August 13, 2022, 20:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X