எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

பழமை வாய்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாகனங்கள் டெஸ்லாவின் பவர்ட்ரெயின் உடன் எலக்ட்ரிக் வாகனங்களாக திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

பழமையான வாகனங்கள் புதிய தோற்றத்தில் புத்துயிர் பெற்றுள்ள நிகழ்வுகள் பலவற்றை இதற்குமுன் பார்த்துள்ளோம். இந்த வகையில் இ.சி.டி ஆட்டோமோட்டிவ் டிசைன் நிறுவனம் மூலமாக பழைய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

அமெரிக்காவில், ஃப்ளோரிடாவில் கிளாசிக் லேண்ட் ரோவர் எஸ்யூவிகளை திருத்தியமைப்பதிலும், கஸ்டமைஸ்ட் செய்வதிலும் பிரபலமான நிறுவனமாக விளங்கும் இசிடி ஆட்டோமோட்டிவ் டிசைன் இதற்குமுன் கடந்த காலங்களில் பல லேண்ட் ரோவர்களையும், ரேஞ்ச் ரோவர்களையும் பழைய தோற்றத்தில் இருந்து அழகான தோற்றத்திற்கு மாற்றியுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

இந்த நிலையில்தான் தற்போது இரு பழைய-தலைமுறை டிஃபெண்டர் 110 மாடல்கள் புதிய தோற்றத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இவை இரண்டும் எலக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளன என்பதுதான். பிராஜெக்ட் பிரிட்டன் மற்றும் பிராஜெக்ட் மார்பியஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிளாசிக் எஸ்யூவி கார்களில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

100kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட்டுள்ள இந்த ஒற்றை எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 450 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இவற்றின் உதவியுடன் 100kmph வேகத்தை வெறும் வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மாடிஃபை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாகனங்களை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 350கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது இசிடி ஆட்டோமோட்டிவ் டிசைன்.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

இவற்றின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 5 மணிநேரங்கள் ஆகுமாம். மேலுள்ள உள்ள படத்தில் காட்சியளிக்கும் பிராஜெக்ட் பிரிட்டன் வாகனம் ஆர்லஸ் நீலம் மற்றும் சாவ்டன் வெள்ளை என்கிற இரட்டை-நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் பிஎஃப் கூட்ரிச் டயர்கள் உடன் அதே பழைய 18-இன்ச் 1983 கான் சக்கரங்களே தொடரப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

அதேபோல் முன்பக்கத்தில் டிஆர்எல்-கள் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட கிளாசிக் பம்பரை இந்த மாடிஃபை வாகனம் கொண்டுள்ளது. இதன் வெளிப்பக்கத்தில் முன்பக்க மேற்கூரை ஏணி, கூடுதல் சக்கரத்திற்கான கேரியர், பின்பக்க பம்பர் படி, காற்றின் மூலம் செயல்படும் சஸ்பென்ஷன் மற்றும் முன்பக்க சன்ரூஃப் உள்ளிட்டவை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

இதன் உட்புறம் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிராஜெக்ட் பிரிட்டன் வாகனத்தின் உட்புற கேபினில் சூடான காற்றை வழங்கக்கூடிய & மடக்கும் வசதிக்கொண்ட இருக்கைகள், எவண்டர் மர ஸ்டேரிங் சக்கரம், கஸ்டம் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய அல்பைன் ஹலோ இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

இவற்றுடன் ரிமோட் ஸ்டார்ட், வைபை, வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜர்கள், யுஎஸ்பி சார்ஜிங் துளைகள், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக கேமிரா மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி போன்றவையும் இதன் கேபினில் உள்ளன. ஆடியோ அமைப்பில் இன்ஃபினிட்டி கப்பா ஸ்பீக்கர்கள் மற்றும் ஜேஎல் ஆடியோ சப்வூப்பர்கள் அடங்குகின்றன.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

அதுவே பளபளப்பான காக்கி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள பிராஜெக்ட் மார்பியஸ் வாகனத்தில் மேற்கூரை வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிலும் பழைய 18-இன்ச் ஹாவ்கே ஆஸ்ப்ரே சக்கரங்களே தொடரப்பட்டுள்ளன. இதன் வெளிப்பக்கத்தில் கூடுதலாக பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகளுடன் வின்ச் மற்றும் பக்கவாட்டு படிக்கட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவிகள்- அமெரிக்க கஸ்டம் நிறுவனம் அசத்தல்

இவற்றுடன் எல்இடி ஹெட்லைட்கள், சுற்றிலும் விளக்குகள், பின்பக்க பம்பர் படிக்கட்டு, உதிரி சக்கர கேரியர், முன்பக்கத்தில் மேற்கூரை ஏணி போன்ற பிராஜெக்ட் பிரிட்டனில் வழங்கப்பட்டுள்ள சில அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. லெதரில் அலங்கரிக்கப்பட்டுள்ள இதன் கேபினில் எவண்டர் மர ஸ்டேரிங் சக்கரம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி ஜேஎல் ஆடியோ ஸ்பீக்கர்கள் மற்றும் கென்வுட் சப்வூப்பர்கள் உடன் கென்வுட் எக்ஸ்செலோன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Old gen land rover suvs tranformed into evs with tesla electric powertrain
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X