உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார்.. யார் வாங்கினார்கள் தெரியுமா?

உலகிலே அதிக விலைக்கு ஒரு கார் ஒன்று சமீபத்தில் ஏலம் போய் உள்ளது. ரூ1105 கோடிக்கு மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் 300 எஸ்எல்ஆர் காரை ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். அவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த காரில் என்ன விஷயம் இருக்கிறது. இந்த பணம் இந்த காருக்கு உண்மையிலேயே ஒர்த்தா? வாருங்கள் காணலாம்.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

இந்த உலகில் விலை உயர்ந்த கார் என்றால் நீங்கள் எதைச் சொல்வீர்கள். பெரும்பாலானவர்கள் புகாட்டி, பென்ட்லி கார்களை பற்றித் தான் சொல்லுவார்கள். ஆனால் இந்த உலகில் அதை விட விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கிறது. புகாட்டி, பென்ட்லி என்றால் புதிய கார்கள் அதிகவிலையில் விற்பனையாகும் கார்கள் ஆனால் பழைய கார்கள் ஏலம் விடப்படும் போது அது புதிய கார்களை காட்டிலும் பல மடங்கு விலையில் ஏலம் போகிறது. அந்த வகையில் இந்த உலகிலேயே அதிகவிலைக்கு ஏலம் போன காரை பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம்...

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

சமீபத்தில் ஜெர்மனியை சேர்ந்த சோத்திபை என்ற நிறுவனம் 1955ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் உக்லென்ஹவுத் கூப் காரை ஏலம் விட்டது. கடந்த மே 5ம் தேதி நடந்த இந்த ஏலத்தில் அந்த கார் இந்திய மதிப்பில் ரூ1105 கோடிக்கு ஏலம் போய் உள்ளது. அட ஆமாங்க நீங்க படித்தது உண்மை தான் உண்மையிலேயே இந்த காரை ஒருவர் ரூ ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் கொடுத்த வாங்கியுள்ளார். அவ்வளவு விலை கொடுத்து வாங்க இந்த காரில் அப்படி என்ன இருக்கிறது வாருங்கள் விரிவாகக் காணலாம்

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

இந்த கார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளது இந்தியாவில் உள்ள நமக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் விண்டேஜ் கார் பிரியர்கள் மத்தியில் இந்த காருக்கு இவ்வளவு தான் விலையா என வியக்க வைத்துள்ளனர். உலகிலேயே அதிகவிலைக்கு இந்த கார் ஏலம் போயிருந்தாலும் இந்த விலை எதிர்பார்க்கப்பட்ட விலையை விடக் குறைவு தான் என கார் பிரியர்கள் சொல்கிறார்கள்.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

இந்த கார் 1954-1955ல் நடந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா வீரர் ஜூவன் மேனுவன் பாங்கியோ பயன்படுத்திய மெர்சிடீஸ் பென்ஸ் W196 காரை அடிப்படையாக வைத்து இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ஃபார்முலா 1 காரில் உள்ள அதே இன்ஜின் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அந்த காரில் மிகவும் பிரபலமான கார். இந்த காருக்கு 300 எஸ்எல்ஆர் உக்லென்ஹவுத் எனப் பெயரிட்டனர். மக்கள் பலர் இந்த காரை மோனாலிசா கார் என அழைத்தார்கள்.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

இந்த காரின் பெரில் உள்ள எஸ்எல்ஆர் என்பதற்கு அர்த்தம் ஸ்போர்ட் லைட் ரேஸிங் என அர்த்தம் 1930 முதல் சிறப்பாகச் செயல்படும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இந்த எஸ்எல்ஆர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த காருக்கும் அந்த பட்டம் உள்ளது. மெர்சிடீஸ் நிறுவனம் மொத்தம் 9 எண்ணிக்கையில் மட்டுமே 300 எஸ்எல்ஆர் காரை உருவாக்கினர். அதில் இரண்டு கார்கள் மட்டுமே எஸ்எல்ஆர் உக்லென்ஹவுத் கூப் புரோட்டோ டைப்பை பெற்றிருந்தது.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

இந்த காருக்கு உக்லென்ஹவுத் என பெயர் வருவதற்குக் காரணம் இந்த காரை வடிவமைத்த Rudolf Uhlenhaut என்ற மெர்சிடீஸ் நிறுவனத்தின் இன்ஜினியர் தான். இவர் மெர்சடீஸ் நிறுவனத்தின் டெஸ்ட்டிங் துறைத் தலைவராக இருந்தவர். இவர் இந்த கார்களை பயன்படுத்தினால் அவரின் பெயரை இண்டு கார்களின் புரோட்டோ டைப்பிற்கு வைத்தார். அதில் ஒரு கார் தான் இது.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

ந்த கார் இதுநாள் வரை ஸ்டட்கார்டில் உள்ள மெர்சிடீஸ் மியூசியத்தில் இருந்தது. இந்த காரை ஒருவர் ஏலம் எடுத்தாலும் அவரால் இந்த காரை தன் வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. அந்த மியூசியத்திற்கும் கார் தயாரிப்பாளர்களுக்கு உள்ள ஒப்பந்தத்தின் படி இந்த கார் இங்கு தான் இருக்க வேண்டும் தேவைப்படும் இந்த காரின் ஓனர் தேவைப்படும் நேரத்தில் மட்டும் இதை எடுத்துப் பயன்படுத்த முடியும். ஆனால் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தலாம் என்ற விதியிருக்கிறது.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

இந்த காரை ரூ1105 கோடி பணம் கொடுத்து ஏலம் எடுத்தது யார் என்ற விபரத்தை ஏல நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் உலகிலேயே அதிகவிலைக்கு ஏலம் போன கார் இது தான். இதற்கு முன்னர் 1962ம்ஆண்டு தயாரிக்கப்பட்ட ஃபெராரி 250 ஜிடிஓ கார் கடந்த 2018ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. இந்த கார் ரூ375 கோடிக்கே ஏலம் போனது. தற்போது அதை விட 3 மடங்கு அதிகமான விலையில் இந்த கார் ஏலம் போய் உள்ளது.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

இதே புரோட்டோ டைப்பில் உருவான மற்றொரு கார் 24 ஹவர் லீ மேன்ஸ் ரேஸில் விபத்தில் சிக்கியது. இதில் காரை ஓட்டிச்சென்ற பிரஞ்ச் டிரைவர் பைரி லிவேக், மற்றும் 83 பார்வையாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்த கார் ரேஸில் அனுமதிக்கப்படிவில்லை. தற்போது இந்த கார் ஒரே ஒரு கார் தான். இருக்கிறது. இந்த புரோட்டோ டைப்பில் இல்லாத மற்ற 300எஸ்எல்ஆர் கார்கள் இருக்கிறது. அந்த கார்களும் ரேஸில் கலந்து கொள்ளத் தடை உள்ளது.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

இந்த கார் 3.0 லிட்டர் ஸ்டிரைட் 8 சிலிண்ட் இன்ஜின் உடன் வருகிறது. இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 289 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. இந்த கார் 00008/55 என் சேசிஸ் எண்ணைக் கொண்டது. இது உக்லென்ஹவுத் பயன்படுத்திய கார் மொத்தம் உருவாக்கப்பட்ட இரண்டு கார்களில் இது இரண்டாவது காராகும். தற்போது இந்த கார் ஏலம் விடப்பட்ட நிலையில் இந்த கார் ஏலம் எடுக்ப்பட்டபணம் நேரடியாக மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்திற்குச் செல்லும்.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார் . . யார் வாங்கினார்கள் தெரியுமா ?

அந்நிறுவனம் இந்த பணத்தைக் கல்விக்கான உதவி, இன்ஜினியரிங், கணிதம், அறிவியல் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது உலகிலேயே அதிக விலையில் ஏலம் போன இந்த காரை வாங்கியது யாராக இருக்கும்? உங்களுக்குத் தோன்றும் நபரை கமெண்டில் குறிப்பிடுங்கள்

Image Courtesy: RM Sotheby's

Most Read Articles
English summary
Old mercedes benz car auction for 1105 crore rupees is world high price car auction know full detail
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X