கியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட புதிய தலைவலி... கம்பெனி பெயரையே இவ்வளவு நாள் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்காங்க!

கியா (kia) நிறுவனத்தின் லோகோவில் (kia logo) உள்ள குழப்பத்தால் பலர் கியா நிறுவனத்தை KN எனத் தவறாகப் புரிந்து வருவதாக கூகுள் தேடுதல் தகவல்கள் மூலம் ஒருவர் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளார்.

தென் கொரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் கியா. இந்நிறுவனத்தை அந்நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் குழுமம் நிர்வாகித்து வருகிறது. உலகம் முழுவதும் ஹூண்டாய் தனி பிராண்டாகவும், கியா தனி பிராண்டாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட புதிய தலைவலி... கம்பெனி பெயரையே இவ்வளவு நாள் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்காங்க!

கியா பிராண்டில் உள்ள கார்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் ரசிக்கும்படி இந்த பிராண்டில் உள்ள கார்கள் இருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற கியா பிராண்ட் பெரும்பாலான இடங்களில் வெற்றிப் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கியா நிறுவனத்தின் செல்டோஸ், கியா கேரன்ஸ் கியா கார்னிவெல் கார்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது கியா நிறுவனத்திற்கு புதிய தலைவலி ஒன்று கிளம்பியுள்ளது.

கியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு தனது பிராண்டிற்கான புதிய லோகோ ஒன்றை வெளியிட்டது. அதில் ஆங்கிலத்தில் KIA என்ற எழுத்து ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு எழுதப்பட்டது போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் பெரும்பாலானோருக்கு இது கியா என எழுதப்பட்டிருப்பது புரிந்துவிட்டது. ஆனால் சிலர் இதை KN எனத் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் டிவிட்டர் பயனர் ஒருவர் ஒரு பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அவர் சமீபத்தில் கூகுள் டிரெண்ட்ஸ் தளத்தில் தேடுதல் குறித்த தரவுகளை ஆய்வு செய்தார். அதில் ஒவ்வொரு மாதமும் KN cars என்ற சொல்லைக் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் பேர் தேடி வருகின்றனர். உலகின் வேறு எங்கும் KN என்ற பிராண்டில் கார்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. அவர்கள் எல்லாம் கியா நிறுவத்தின் லோகோவை பார்த்து குழப்பம் ஏற்பட்டு கியா என்ற பெயரை KN எனப் புரிந்து கொண்டுள்ளனர்.

இந்த KN கார்ஸ் குறித்த கூகுள் தேடுதல் கியா நிறுவனத்தின் புதிய லோகோ வெளியீட்டிற்குப் பின்னரே நடந்துள்ளது. இது மட்டுமல்ல ரெட்டிட் தளத்தில் ஒருவர் கியா கார்னிவெல் காரின் புகைப்படத்தைப் பதிவிட்டு இது KN காரின் எந்த மாடல் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதன் மூலம் மக்கள் சிலர் கியா நிறுவனத்தை அதன் லோகோ வடிவமைப்பில் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக KN எனப் புரிந்து கொண்டுள்ளது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

KN பிராண்ட் கார் குறித்த தேடுதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்துள்ளது. குறிப்பாக KN SUV, KN car brand, KN Brand Electric, What is KN Car Brand, KN Carnival Car, What is KN மற்றும் KN Telluride car ஆகிய வார்த்தைகள் மூலம் KN காரை மக்கள் அதிகமாகத் தேடி வந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 30 ஆயிரம் தேடுதல்கள் இந்த KN கார் பெயரில் நடக்கிறது. ஆனால் அதுவே கியா கார் பெயரில் 18.3 லட்சம் தேடல்கள் நடக்கிறது.

பெரும்பாலான மக்கள் கியா நிறுவனத்தின் லோகோவை சரியாகப் புரிந்து கொண்டாலும் சிலருக்கு மட்டும் இந்த பிராண்டின் பெயர் சரியாகச் சென்று சேராமல் அவர்கள் வடிவமைப்பில் குழம்பிப் போய் KN எனப் புரிந்து கொண்டுள்ளனர். இது கியா நிறுவனத்திற்குச் சென்றுள்ளதாகவும் கூறுபடுகிறது. ஆனால் மிகக் குறைவான மக்களுக்கே தவறான புரிதல் இருப்பதால் அதை மாற்ற கியா நிறுவனம் தற்போது முடிவு செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பிராண்டிங்கிற்கு அதன் லோகோ எவ்வளவு சரியாகச் சொல்ல வரும் விஷயத்தைக் கடத்த வேண்டியது முக்கியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
People googling kn car instead of kia new logo lead to this confusion
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X