225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

போலரிஸ் (Polaris) நிறுவனம் அதன் அதிக திறன் வாய்ந்த ஆஃப்-ரோடு வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

ஆஃப்-ரோடு வாகன தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் போலரிஸ் (Polaris), அதன் பிரபலமான வாகனம் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆர்இசட்ஆர் ப்ரோ ஆர் ஸ்போர்ட் (RZR Pro R Sport) எனும் வாகனத்தையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

இந்த வாகனத்தில் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்பெஷலாக மலை மற்றும் மணல் பரப்பைச் சார்ந்த நிலப்பரப்பில் பயன்படுத்தும் விதமாக இவ்வாகனத்தை போலரிஸ் நிறுவனம் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்திற்கு அறிமுக விலையாக ரூ. 59 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த ஆஃப்-ரோடு வாகனத்திற்கு இத்தகைய அதிகபட்ச விலையாக என பலரை இவ்வுயரிய விலை நம்மைக் கேள்வி எழுப்பச் செய்திருக்கின்றது. இந்தியாவில் இதைவிட பல லட்சக் கணக்கான விலையைக் கொடுத்துக்கூட வாகனத்தை வாங்குவதற்கு இந்தியர்கள் பலர் தயாராக இருக்கின்றனர். ஆனால், இந்த மாதிரியான ஓர் வாகனத்தை தயாராக இருக்கின்றார்களா என்பதை இவ்வாகனம் விற்பனையாகும் எண்ணிக்கையை வைத்துதான் கூற முடியும்.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

போலரிஸ் ஆர்இசட்ஆர் ப்ரோ ஆர் ஸ்போர்ட் வாகனம் 3 விதமான டிரைவிங் டைப்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, இரு வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் லாக் ஆகிய டைப்களிலேயே அது கிடைக்கும். இந்த வாகனத்தின் ஓர் யூனிட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக போலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓர் வாடிக்கையாளர்களுக்கே இவ்விலையுயர்ந்த ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனம் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றது. வாகனத்தை போலரிஸ் விஜயவாடா விற்பனையகத்தின் தலைமை அதிகாரி பிரகாஷ் ராவ் என்பவரே வாடிக்கையாளருக்கு நேரடியாக வாகனத்தை டெலிவரி கொடுத்திருக்கின்றார். ஆனால், என்ன டைப் டிரைவிங் வசதிக் கொண்ட போலரிஸ் ஆர்இசட்ஆர் ப்ரோ ஆர் ஸ்போர்ட் டெலிவரிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

பிரபல ஆன்லைன் கேம் பப்ஜியில் வரும் பஃக்கி வாகனத்தைபோல் இவ்வாகனம் காட்சியளிக்கின்றது. இந்த தோற்றம் விளையாட்டு பிரியர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆம், ஆஃப்-ரோடு வாகன காதலர்களுடன் சேர்த்து இவர்களையும் ஆர்இசட்ஆர் ப்ரோ ஆர் ஸ்போர்ட் வாகனம் ஈர்த்துள்ளது.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

இந்த வாகனத்தில் 225 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய 4 ஸ்ட்ரோக் டிஓஎச்சி இன்லைன் 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அனைத்து விதமான ஆஃப்-ரோடுகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது. மணல் பரப்பில்கூட வாகனத்தை அதிக வேகத்தில் செல்ல அது உதவியாக இருக்கும்.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

இந்த திறனை கூடுதல் படுத்தும் விதமாக மிகவும் முரட்டுத் தனமான டயர்களை வாகனத்தில் போலரிஸ் பயன்படுத்தியுள்ளது. இது பாறைகள், கரடு- முரடான சாலைகள் மற்றும் பாலைவனத்தில்கூட வாகனத்தை எந்த தடையும் இல்லாமல் இயங்க செய்ய உதவியாக இருக்கும். இதுமட்டுமில்லைங்க மிக உயரமான மலை மற்றும் குன்றுகளைக்கூட இந்த வாகனத்தால் மிக சுலபமாகக் கடக்க முடியும்.

225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!

மேலும், நீர் நிறைந்த குளம், குட்டை போன்றவற்றையும்கூட இந்த வாகனம் அசால்டாக சமாளித்துவிடும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இதற்கேற்பவே இதன் எக்சாஸ்ட் சிஸ்டம் அமைப்பும், சஸ்பென்ஷன் அமைப்பும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றினால் வழக்கமான பயணத்தை மேற்கொள்ளும்போதுகூட மிக பெரிய சாகச பயணத்தை மேற்கொள்வதைப் போன்று ஏற்படும்.

Most Read Articles
English summary
Polaris rzr pro r sport launched in india
Story first published: Friday, August 5, 2022, 21:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X