அறிமுகமானது இந்தியாவின் பிரீமியம் வசதிகள் நிறைந்த பிரவைக் டெஃபி இ- கார்.. இத இந்திய தயாரிப்புனே நம்ப முடியல!!

இந்தியாவின் டெஸ்லா என்றழைக்கப்படும் பிரவைக் டைனமிக்ஸ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஃபி எலெக்ட்ரிக் காரை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிரவைக் டைனமிக்ஸ். இந்நிறுவனம் அதன் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிரவைக் டெஃபி எனும் புத்தம் பதிய எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி உள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த எலெக்ட்ரிக் காரில் பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் கார்

இதன் தோற்றமும் மிகவும் தனித்துவமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய சிறப்புகள் நிறைந்த காரை தயாரித்திருக்கின்ற காரணத்தினாலேயே அனைவராலும் இந்த நிறுவனம் 'இந்தியாவின் டெஸ்லா' என செல்லமாக அழைக்கப்படுகின்றது. பிரவைக் டைனமிக்ஸ் ஓர் புதுமுக மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கிய பின்னர் விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவே ஆகும்.

இதற்கு அறிமுகமாக ரூ. 39.50 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் என அனைத்தும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் இத்தகைய அதிகபட்ச விலையைக் கொண்டதாக பிரவைக் டெஃபி காட்சியளிக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

எலெக்ட்ரிக் கார்

இந்த திறன்களும் எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச விலைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. காரின் உற்பத்தி பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த பணிகள் அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் தொடங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை முன்னிட்டு இப்போதே புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின் வாயிலாக பிரவைக் டெஃபி காரை ப்ரீ புக் செய்து கொள்ளலாம்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரின் ஸ்டைலில் இந்த எலெக்ட்ரிக் காரை பிரவைக் டைனமிக்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. அந்த வாகனம் பெட்டி போன்ற தோற்றத்தில் இருக்கும். இதேமாதிரியான ஓர் ஸ்டைலிலேயே பிரவைக் டெஃபி காட்சியளிக்கின்றது. ஆனால், அலங்கார விஷயத்தில் மாறுபட்ட யுக்தியை பிரவைக் டைனமிக்ஸ் கையாண்டிருக்கின்றது. முற்றிலும் மாறுபட்ட முகப்பு பகுதியைக் கொண்டதாக இவ்வாகனம் இருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார்

ஹெட்லைட், மெல்லிய இழைபோன்ற லைட் பார், கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட பாடி பேனல் உள்ளிட்டவற்றால் இந்த கார் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. இதேபோல், வழக்கமான கை பிடிகளுக்கு பதிலாக, பாடி பேனலோடு இணைக்கப்பட்ட பிடிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, பிரீமியம் தோற்றத்தை இரட்டிப்பாக்கும் விதமாக முற்றிலும் கருமையான நிறத்தினாலான கண்ணாடி பேனல் கூரை, பின் பக்கத்திற்கு கூபே தோற்றம், பெரிய பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுடன் 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர், மல்டிபிள் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஒயர்லெஸ் சார்ஜிங், பயணிகளுக்கான சிறிய திரை என எக்கசக்க அம்சங்கள் பிரவைக் டெஃபியில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மின்சார கார் அதிகபட்சமாக 500 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என குறிப்பிட்டிருந்தோம். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 90.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். உதாரணமாக டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்யும்போது வெறும் 30 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த அளவு சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திலேயே பிரவைக் டெஃபி சார்ஜாகும். ஆகையால் நீண்ட நேரம் காத்திருந்து இதை சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

இந்த எலெக்ட்ரிக் காரின் அதிக வேகத்திற்காக 402 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் ஏற்கனவே கூறியதைப் போல் மணிக்கு 210 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதுதவிர, வெறும் 4.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இத்தகைய ஆச்சரியமிகு வசதிகளுடனேயே பிரவைக் டெஃபி விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Pravaig dynamics launched defy
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X