தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, ரெனால்ட் நிறுவனத்தின் கைகர், டிரைபர் மற்றும் க்விட் மாடல்களின் புதிய லிமிடெட் எடிசன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய ரெனால்ட் கார்களை பற்றி முழுமையாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

தீபாவளி உள்ளிட்ட இந்தியாவில் பெரும்பாலானோர் கொண்டாடக்கூடிய பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது. ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், பண்டிகை காலங்களில் தான் விற்பனையை அதிகரிக்க புத்தம் புதிய வாகனங்களை நேரம் பார்த்து தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும்.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

முற்றிலும் புதிய காரை கொண்டுவர முடியவில்லை என்றாலும், குறைந்தப்பட்சம் விற்பனையில் இருக்கும் கார்களில் புதிய ஸ்பெஷல் எடிசன்களாவது விற்பனைக்கு களமிறக்கப்படும். இந்த வகையில் தற்போது பிரெஞ்சு கார் பிராண்டான ரெனால்ட்டில் இருந்து கைகர், டிரைபர் & க்விட் கார்களின் புதிய லிமிடெட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

மேற்கூறப்பட்ட ரெனால்ட் கார்களின் உயர்-நிலை வேரியண்ட்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த லிமிடெட் எடிசன் கார்களுக்கான முன்பதிவுகள் நாளை (செப்டம்பர் 2) முதல் துவங்கவுள்ளது. ஸ்பெஷல் எடிசன்கள் என இல்லாமல், லிமிடெட் எடிசன்கள் என கொண்டுவரப்பட்டுள்ளதால் இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும்.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

இந்த புதிய லிமிடெட் எடிசன் கார்களில், தோற்றத்தில் மட்டுமே சில காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர்த்து, இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லிமிடெட் எடிசன் கார்கள் சிவப்பு நிற ஹைலைட்களுடன் இரட்டை-நிறத்தில் பெயிண்ட்டை பெற்று வந்துள்ளன.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

கைகர் லிமிடெட் எடிசன்

இந்த காரின் உடற்பகுதி வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்க, மேற்கூரை ஆனது கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் சக்கரங்கள் சில்வர் நிறத்திலும், அவற்றில் பிரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. இதே சிவப்பு நிறத்தை காரின் முன்பக்க க்ரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் கதவுகளிலும் காண முடிகிறது.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

கைகரின் டாப் வேரியண்ட்டான ஆர்.எக்ஸ்.இசட் -இன் அடிப்படையில் புதிய லிமிடெட் எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெனால்ட் கைகர் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற ஒரேயொரு என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதே என்ஜின் தேர்வுதான் புதிய லிமிடெட் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

க்விட் லிமிடெட் எடிசன்

க்விட் ஹேட்ச்பேக் மாடலின் க்ளிம்பர் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய லிமிடெட் எடிசனும் அதே வெள்ளை-கருப்பு என்ற இரட்டை நிறத்திலேயே பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவப்பு நிற ஹைலைட்களை ஸ்கிட் பிளேட் உள்பட காரின் முன்பக்கத்தில் காண முடிகிறது.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

அதுமட்டுமின்றி, இதே சிவப்பு நிறம் காரின் மேற்கூரையின் பின்பகுதியிலும் பளிச்சிடுகிறது. ஆனால் க்விட்டின் லிமிடெட் எடிசனில் சக்கரங்களும், பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளும் பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு நிறத்தில் சக்கரங்கள் க்விட் லிமிடெட் எடிசனை ஸ்டைலிஷாக காட்டுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

தீபாவளியை சிறப்பிக்க... ரெனால்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார்கள்!! இந்தியாவில் அறிமுகம்

டிரைபர் லிமிடெட் எடிசன்

இந்த வரிசையில் 3வது லிமிடெட் எடிசன் காராக உள்ள டிரைபர் எம்பிவியின் லிமிடெட் எடிசனும் வெள்ளை & கருப்பு நிற பெயிண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நிற ஹைலைட்கள் காரின் முன்பக்க க்ரில் மற்றும் ஃபாக் விளக்குகளில் உள்ளன. டிரைபர் லிமிடெட் எடிசனிலும் சக்கரங்கள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault kwid kiger triber festive edition models launched features details
Story first published: Thursday, September 1, 2022, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X