2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷனோட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

2022 ரெனால்ட் கைகர் (2022 Renault Kiger) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இக்கார் குறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஓர் விலை குறைவான காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். ரெனால்ட் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக அது தற்போது இருக்கின்றது. இக்கார் மாடல் நிறுவனத்தின் பிற முன்னணி மாடல்களான ட்ரைபர் மற்றும் க்விட் ஆகியவற்றை போல் சூப்பரான வரவேற்பை நாட்டில் பெற்று வருகின்றது.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

சமீப காலமாக தொடர் விற்பனை வளர்ச்சியையும் இக்கார் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ரெனால்ட் நிறுவனம், கைகர் கார் மாடலின் 2022 வெர்ஷனை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ரூ. 5.84 லட்சம் என விலை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

சில அப்டேட்டுகளுடன் 2022 கைகர் விற்பனைக்கு வந்துள்ளது. ஆர்எக்ஸ்டி (ஓ) தேர்வை தவிர மற்ற அனைத்தும் அப்டேட்டை பெற்றிருக்கின்றன. மிக முக்கியமான அப்டேட்டாக 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் வெர்ஷன் இருக்கின்றது. இத்துடன், புதிய நிற தேர்வு மற்றும் சிறப்பம்சங்களையும் இக்காரில் ரெனால்ட் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

விற்பனைக்கான அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகளையும் நிறுவனம் தொடங்கி வைத்திருக்கின்றது. ரெனால்ட் நிறுவனம் இக்காரை அதன் புகழ்பெற்ற CMF-A+ ஆர்கிடெக்சரை பயன்படுத்தி உருவாக்கி வருகின்றது. எனவே, தொழில்நுட்பத்திலும், தோற்றத்திலும் மிக சிறந்த காராக கைகர் காட்சியளிக்கின்றது.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

அப்டேட்டுகள்:

மேலே கூறியதை போல் 2022 கைகர் காரில் சில அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், காரின் டெயில் கேட்டில் குரோம் பூச்சு கொண்ட அணிகலன், முன் பக்கத்தில் ஸ்கிட் பிளேட், டர்போ டீகேல்கள் மற்றும் 16 இன்ச் அளவுள்ள டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

இதுதவிர, மிஸ்ட்ரி பிளாக் - மெட்டல் மஸ்டர் ஆகிய இரு நிறங்கள் கொண்ட ரூஃப், வீல் கேப், ரெட் ஃபேட் டேஷ்போர்டு அக்செண்ட், பிஎம்2.5 ஏர் ஃபில்டர் ஆகிய அம்சங்களும் கூடுதல் சிறப்பு வசதிகளாக 2022 கைகரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய தையல்களாலும் காரின் இருக்கைகள் உள்ளிட்டவை அலங்கரிக்கப்பட்டுள்ளன.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

எஞ்ஜினை பொருத்த வரை இரு விதமான எஞ்ஜின் தேர்வில் 2022 கைகர் விற்பனைக்குக் கிடைக்கும். 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே கிடைக்கும்.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

இதில் முதல் மோட்டாரில் எம்டி மற்றும் ஈசி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும், இரண்டாவது மோட்டாரில் எம்டி மற்றும் எக்ஸ்-ட்ரானிக் சிவிடி தேர்வும் வழங்கப்படும். இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்குக் கிடைக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 20.5 கிமீ வரை மைலேஜ் தரும்.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

நார்மல், ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட மூன்று விதமான ரைடிங் மோட்கள் 2022 கைகரில் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ரெனால்ட் கைகர் ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடலாகும்.

2022 ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம்... இந்த வெர்ஷோனட விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் ஐந்து ஸ்டார்களுக்கு நான்கு நட்சத்திரங்களை பெற்று நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தது. நான்கு ஏர் பேக்குகள், இபிஎஸ் உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இம்பேக்ட் சென்சிங் டூர் அன்லாக், ஸ்பீடு சென்சிங் டூர் லாக், 60/40 ஸ்பிளிட் ரியர் இருக்கை அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பு: முதல் இரு படங்கள் மட்டுமே 2022 ரெனால்ட் கைகர் காருடையதாகும்.

Most Read Articles

English summary
Renault launches 2022 kiger in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X