3 ஆண்டுகளில் ருத்ரதாண்டவம் ஆடப் போகும் ரெனால்ட்... டாடா மாருதி எல்லாம் இருந்த இடமே தெரியாம போக போகுது...

நிஸான்-ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிற்குள் ரூ4000 கோடி முதலீட்டைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மீண்டும் ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவிற்குள் நிஸான் ரெனால்ட் ஆகிய இரண்டும் தனித்தனியாக பிராண்ட்களாக இருந்தாலும் சர்வதேச அளவில் நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய இரு நிறுவனங்களுக்குள்ளும் ஒப்பந்தம் உள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நிறுவனம் தான் இந்தியாவில் இரண்டையும் தனித்தனி பிராண்ட்களாக விற்பனை செய்து வருகின்றன.

3 ஆண்டுகளில் ருத்ரதாண்டவம் ஆடப் போகும் ரெனால்ட்... டாடா மாருதி எல்லாம் இருந்த இடமே தெரியாம போக போகுது...

இந்தியாவில் ரெனாலட் நிறுவனத்தின் டஸ்டர் கார் மிகவும் புகழ்பெற்றது. பலர் இந்த காரை போட்டிப் போட்டு வாங்கினர். ஆனால் இந்த கார் ஒரு காலகட்டத்திற்குப் பின்பு விற்பனை நின்று விட்டது. இந்நிலையில் மீண்டும் டஸ்டர் கார் மார்கெட்டிற்கு வர வேண்டும் என மக்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர். ரெனால்ட் நிறுவனமும் இதற்கான முயற்சியில் இறங்கியது. தற்போது அந்த முயற்சியின் பலனாகச் சர்வதேச அளவில் நிஸான்-ரெனால்ட் நிறுவனம் ஒரு முடிவுக்கு வரவுள்ளது.

நிஸான்-ரெனால்ட் நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு ரூ4000 கோடி முதலீட்டில் புதிய பிளாட்ஃபார்ம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. CMF-B என அழைக்கப்படும் இந்த பிளாட்ஃபார்மில் பல புதிய தயாரிப்புகளைக் களம் இறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரெனாலட் மிட்-சைஸ் எஸ்யூவி கார் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த CMF-B தயாராகும் கார்கள் முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கார்களாக இருக்கும் என்றும், இதன் பெரும்பான்மையான பொருட்கள் எல்லாம் இ்நதியாவிலிருந்தே வாங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இது மட்டுமல்ல இதே பிளாட்ஃபார்மில் பிக்ஸ்டர் கான்செப்டில் ஒரு 7 சீட்டர் எஸ்யூவி காரையும் உருவாக்க ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளனர்.

இத்துடன் சேர்த்து இந்த CMF-B பிளாட்ஃபார்ம், ஒரு இவி டெரிவேட்டிவ் பிளாட்பார்மாகவும் உருவாக்கப்படவுள்ளது. அதாவது இந்த பிளாட்ஃபார்மில்தயாரிக்கப்படும் கார்களில் இவி வெர்ஷனையும் தயாரிக்கும் வகையில் இந்த பிளாட்ஃபார்ம் இருக்கும். இது போக நிஸான் பேட்ஜில் வெளியாகும் கார்களையும் இதே பிளாட்ஃபார்மில் தயாரிக்க முடியும்.

நிஸான் நிறுவனத்தின் இந்த CMF-B பிளாட்ஃபார்ம் எஸ்யூவி மற்றும் 7 சீட்டிர் எஸ்யூவி தவிர அடுத்த ஆண்டு கேட்ப்சர் காரை போல அர்கானா காரையும், மேகைன் இ-டெக் என்ற காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது ரெனால்ட் நிறுவனத்திடம் CMF-A பிளாட்பார்ம் இருக்கிறது. இதில் ரெனால்ட் கைகர், க்விட், ட்ரைபர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்கள் தயாராகிறது.

CMF-B பிளாட்ஃபார்ம் வந்ததும் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளும் அதிகமாகும். இது மட்டுமல்ல இந்த புதிய பிளாட்ஃபார்மின் மூலம் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவை ஒரு ஏற்றுமதி மையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதில் தயாராகும் கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல்துறையில் ரெனால்ட் - நிஸான் நிறுவனங்கள் பெரிய ருத்ரதாண்டவம் ஆடினாலும் அதிசயம் இல்லை.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Nissan alliance to bring 4 thousand crores investment to bring duster back
Story first published: Thursday, November 24, 2022, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X