"நாயகன் மீண்டும் வருகிறான்" புதிய அவதாரம் எடுக்கப்போகும் டஸ்டர் கார்! எப்ப ரிலீஸ் தெரியுமா?

ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் மீண்டும் இந்தியாவில் புதிய தோற்றத்தில் களம் இறங்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்த கார் புதிய வடிவமைப்பில் புதிய மாற்றங்களுடன் வரப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ரெனாலட் நிறுவனம் இந்தியாவில் களம் இறங்கிய பிறகு கடந்த 2012ம் ஆண்டு வெளியிட்ட கார் தான் டஸ்டர். இந்த கார் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பலர் இந்த காரை விரும்பி வாங்கினர். இதற்கு முக்கியமான காரணம் இதன் தோற்றம் தான். இந்த கார் அந்நிறுவனமே எதிர்பாராத அளவிற்கு வரவேற்பைப் பெற்றது. சுமார் 10 ஆண்டுகளாக விற்பனையிலிருந்த இந்த காரை போதிய அளவில் விற்பனையாகவில்லை எனக் கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் நிறத்தி விட்டது.

நாயகன் மீண்டும் வருகிறான் புதிய அவதாரம் எடுக்கப்போகும் டஸ்டர் கார்! எப்ப ரிலீஸ் தெரியுமா?

அந்த காரின் விற்பனை குறைந்ததற்குக் காரணம் மற்ற போட்டியாளர்கள் இந்த காரின்வருகைக்குப் பிறகு இதே போலப் பல கார்களை இதை விட அதிக வசதிகள், அம்சங்கள் நிறைந்த கார்களை உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டனர். மக்களின் பார்வை எல்லாம் எந்த காரின் பக்கம் திரும்பி விட்டது. ரெனால்ட் நிறுவனம் இந்த காரை முற்றிலுமாக மாற்றினால் மட்டுமே டஸ்டர் காரை மீண்டும் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என எதிர்பார்த்தது.

டஸ்டர் கார் விற்பனையிலிருந்த போது கடந்த 2017ம் ஆண்டு அந்த காரின் 2ம் தலைமுறை கார் விற்பனைக்கு வந்தது. அதன் பின்பு எதிர்பார்த்த அளுவிற் மக்கள் இந்த காரை வாங்கவில்லை. ஆனால் இந்த கார் நிறுத்தப்பட்ட பின்பு இந்த காரை பலர் மிஸ் செய்வதாகத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரெனால்ட் நிறுவனம் இந்த காரை மீண்டும் உருமாற்றிக் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.

ரெனால்ட் நிறுவனம் வரும் 2024-25ம் நிதியாண்டில் இந்த காரை விற்பனைக்குக் கொண்டுவரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை தயாரிக்க 500 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை இந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது க்விட், டிரைபர், கிக்ஸ், கைகர் ஆகிய கார்களை உருவாக்கி வரும் நிலையில் புதிதாக உருவாக்கவுள்ள டஸ்டர் கார் முற்றிலும் புதிய சிஎம்எஃப்-பி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படவுள்ளது.

இந்த புதிய டஸ்டர் கார் 7 சீட்டர் காராக உருவாக்கவுள்ளது. இந்த சிஎம்எஃப்-பி பிளாட்பார்ம் இந்த கம்பஷன் இன்ஜின் காராக மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் காராகவும் உருவாக்கவும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனம் நிஸான் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தப்படி எஸ்யூவி கார்களுக்கான யுக்தி அனைத்தும் நிஸான் நிறுவனத்திடம் இருக்கிறது. இந்த திட்டம் எல்லாம் நிஸான் நிறுவனத்தின் திட்டம் தான்.

புதிதாக டஸ்டர் கார் விற்பனைக்கு வந்தால் அந்த கார் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் காராக விற்பனைக்கு வரும் தற்போது மார்கெட்டில் இதே செக்மெண்டில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், எம்ஜி அஸ்டர் ஆகிய கார்கள் இருக்கிறது. இந்த கார்களுக்கு போட்டியாக புதிய டஸ்டர் கார் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனம் இணைந்து நடத்தி வரும் ஆலை சென்னை ஓரகடம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில்தான் புதிய டஸ்டர் காருக்கான சிஎம்எஃப் பிளாட்பார்ம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் பொருத்தப்படக்கூடிய இன்ஜின் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை முந்தைய டஸ்டர் காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் இதே இன்ஜினின் டர்போ வெர்ஷன் அமலில் இருந்தது. புதிய காரில் வரப்போகும் இன்ஜின் குறித்த தகவல் வெளியாகவில்லை.

நிஸான் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவிற்காக எக்ஸ்-டிரையல், ஜூக் மற்றும் க்வாஸ்குய் என்ற கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. முதலில் எக்ஸ் டிரையல் கார் தான் 2023ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கான சாலை டெஸ்ட்டிங் துவங்கிவிட்டது. புதிய டஸ்டர் கார் வந்தால் அதை வாங்குவீர்களா? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault working on a new gen Duster car for India
Story first published: Saturday, December 31, 2022, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X