Just In
- 2 hrs ago
வேட்டியை மடித்து கட்டிய ஹோண்டா, ஹூண்டாய்! மாருதியை நசுக்க போறாங்க! இந்த 2க்கும் முன்னாடி அவங்க கார் நிக்காது!
- 6 hrs ago
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- 6 hrs ago
மஹிந்திரா பொலிரோவை வாங்கும் பிளானில் உள்ளவர்கள் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை வாங்கலாம்!! விலையும் குறைவு...
- 7 hrs ago
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Movies
யோகிபாபுவின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் பொம்மை நாயகி.. வெளியானது சூப்பர் ட்ரெயிலர்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
பழைய யூஸ்டு இன்னோவா காரை வாங்க போறீங்களா? ஃப்யூச்சர்ல ஃபீல் பண்ண கூடாதுனா ஒரு நிமிஷம் இத பாத்துட்டு போங்க..
இந்தியர்களின் பிரியமான எம்பிவி ரக கார் மாடல்களில் இன்னோவாவும் ஒன்று. பல தரப்பட்ட எம்பிவி ரக கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்ற போதிலும் சந்தையில் இதற்கு என தனி டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. விற்பனைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகின்றநிலையிலும் இதற்கான மார்க்கெட்டும், டிமாண்டும் லேசாககூட குறைந்ததாக தெரியவில்லை.
இத்தகைய வரவேற்பை இந்த கார் நாட்டில் பெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே டொயோட்டா நிறுவனம் இந்த காரின் ஹைபிரிட் வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. தற்போது இன்னோவா கிரிஸ்டாவிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாகவே ஹைபிரிட் வசதிக் கொண்ட இன்னோவா விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இன்னோவா ஹைகிராஸ் எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. பன்முக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனமாக அது விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரியான சூப்பரான இன்னோவா கார் தற்போது யூஸ்டு கார்கள் பிரிவில் அதிகளவில் விற்பனையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. பலர் புதிய இன்னோவா அல்லது புதிய வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மாறத் தொடங்கியிருப்பதால் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழைய தலைமுறை இன்னோவா கார்களை செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் தள்ளிவிட ஆரம்பித்துள்ளனர். இங்கு பயன்படுத்தப்பட்ட பழைய இன்னோவா கார்கள் புதியதைக் காட்டிலும் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இப்போதைய நிலவரப்படி ஓர் நபர் புதிய இன்னோவா காரை வாங்க வேண்டும் என்றால் ரூ. 30 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். இத்தகைய பெருந்தொகையை செலுத்த இயலாதவர்கள் தங்களுக்கான இன்னோவா காரை செகண்ட் ஹேண்ட் சந்தையில் இருந்து தேர்வு செய்கின்றனர். இவ்வாறு நாம் பழைய இன்னோவாவை வாங்கி பயன்படுத்தும் முன்பு தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அதாவது செகண்ட் ஹேண்டில் வாங்கப்படும் பழைய பயன்படுத்திய இன்னோவால் நமக்கு பலன்கள் அதிகம் கிடைக்குமா? அல்லது நஷ்டம் ஏற்படுமா?, இதுபற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
விலை:
யூஸ்டு இன்னோவா கார் எவ்வளவு அதிக புதுத் தன்மையுடன் இருக்கின்றதோ, அந்தளவிற்கு அதிக விலையைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக ஓர் இன்னோவா நல்ல வேலை செய்யும் நிலையிலும், சுமார் 7 ஆண்டுகள் மட்டுமே பழையதாக இருக்கும் எனில் அதன் விலை ரூ. 16 லட்சம் வரை இருக்க வாய்ப்புகள் உள்ளன. வேரியண்டைப் பொருத்து இந்த விலை மாறுபட வாய்ப்பு இருக்கின்றது. அதேநேரத்தில் 2014 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இன்னோவா கார்கள் செகண்ட் ஹேண்ட் சந்தையில் சுமார் 12 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அதுவே, அந்த கார் 2009-10 மாடலாக இருந்தால் 7 லட்ச ரூபாய் அல்லது அதற்கு சற்று அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய அதிகபட்ச விலையிலேயே யூஸ்டு மார்க்கெட்டில் இன்னோவா விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறைந்த தூரம் மட்டுமே பயணித்த இன்னோவா கார்களைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்:
பொதுவாக ஓர் பயன்படுத்திய காரை வாங்குகின்றீர்கள் என்றால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிமீ வரை ஓடிய வாகனங்களை வாங்குவதே மிக நல்லது. இதனை மிக பழையது என்றும் கூற முடியாது. மிக புதிது என்றும் கூற முடியாது. ஆகையால், பயன்பாட்டில் அவை மிக சிறப்பாக இருக்கும். ஆனால், இன்னோவாவை பொருத்த வரை இந்த அளவு குறைவான கிமீட்டர்கள் பயணித்த ஒன்றை தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான இன்னோவாவாக்கள் 80 ஆயிரத்திற்கும் அதிகமான கிமீட்டர் தூரம் பயணித்தவையாக இருக்கின்றன. இந்தளவு பயணித்த காரைதான் நாம் செகண்ட் ஹேண்டில் வாங்க விரும்புகின்றோம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பில்ட் குவாலிட்டி சூப்பர்:
டொயோட்டா நிறுவனம் இந்த காரை மிக சிறப்பான முறையில் கட்டமைத்திருக்கின்றது. ஆகையால், உங்களால் 30 ஆயிரம் கிமீ வரை மட்டுமே ஓடின இன்னோவாவைத் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த கார் லட்சக் கணக்கான கிமீட்டர்கள் பயணித்த பின்னரும் மிக உறுதியானதாக இருக்கும் என எக்ஸ்பர்ட்டுகள் தெரிவிக்கின்றனர். மேலும், அதனை பராமரிப்பதும் மலிவானது என கூறப்படுகின்றது. பழைய கார் என்பதற்கான சத்தமும், பிரச்னைகளும் பெரியளவில் ஏற்படாது.
விலை அதிகமாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்:
நீங்க ஐந்து வருடத்திற்கும் குறைவான விலைக் கொண்ட இன்னோவா காரை தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?, அப்படினா குறைந்தது 20 லட்ச ரூபாயாவது கையில் வைத்திருக்க வேண்டும். இந்த அளவு அதிக விலை கொடுத்து ஓர் பழைய காரை வாங்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதேவேலையில் இந்த விலைக்கு சந்தையில் தற்போது புதிய கார்கள் பல விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதை மறவாதீர்கள். ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் எம்பிவி போன்ற கார் மாடல்கள் ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
யூஸ்டு இன்னோவாவில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன?
சில இன்னோவா கார் பயன்பாட்டாளர்கள் தங்களின் காரில் கணிசமாக சிக்கல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வீல் மற்றும் டயர் பராமரிப்பில் பெரியளவில் சிக்கலைச் சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, ஸ்பீக்கர் சிஸ்டம் போன்ற சில அவசியமான அம்சங்களிலும் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதுமட்டுமில்லைங்க, பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் என்விஎச்சிலும் அவ்வப்போது பிரச்னை ஏற்படுவதாக இன்னோவா கார் பயன்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதைத்தாண்டி வேறு எந்த பெரிய பிரச்னையும் இந்த காரில் இல்லை என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.